2014 யமஹா ஃபேஸர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு வந்தது- விபரம்
சந்தை போட்டியை சமாளித்து வாடிக்கையார்களை கவரும் விதமாக தனது பைக் மாடல்களுக்கு புதுப்பொலிவு கொடுத்து அறிமுகம் செய்து வருகிறது யமஹா நிறுவனம். சமீபத்தில் எஃப்இசட் பைக்குகளுக்கு புதுப்பொலிவு கொடுத்து களமிறக்கியது.
இதைத்தொடர்ந்து, தற்போது செமி ஃபேர்டு ரக பைக்கான ஃபேஸருக்கும் புதுப்பொலிவு கொடுத்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. '2014 யமஹா ஃபேஸர் வெர்ஷன் 2.0' என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த மாடலில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் குறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம்
யமஹா ஃபேஸர் பைக்கின் 149சிசி ஏர்கூல்டு எஞ்சின் தற்போது ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்டதாக வந்திருக்கிறது. இது புளூகோர் தொழில்நுட்பத்துடன் வந்திருப்பதால் அதிக எரிபொருள் சிக்கனத்தையும், சிறந்த பெர்ஃபார்மென்ஸ் மற்றும் வெகு விரைவான ஆக்சிலரேசனையும் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வண்ணங்கள்
2014 ஃபேஸர் வெர்ஷன் 2.0 பைக் மூன்று புதிய வண்ணங்களில் விற்பனைக்கு கிடைக்கும். பிளாக் ஹாக், ரெட் டான் மற்றும் ஒயிட் கிளவுட் என்ற வண்ணங்களில் தேர்வு செய்து கொள்ளலாம். ஸ்லைடரில் மூன்று வண்ணங்களின் படங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது.

மாற்றங்கள்
இந்த புதிய பைக் மாடலில் அதிக ரோடு கிரிப்பை வழங்கும் புதிய டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. சஸ்பென்ஷன். இருக்கை அமைப்பு மேம்படுத்தப்பட்டிருப்பதோடு, இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் டிசைனும் மாறியிருக்கிறது.

விலை
ரூ.83,850 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய யமஹா ஃபேஸர் வெர்ஷன் 2.0 பைக் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








