மிலிட்டரி பச்சையுடன் மிடுக்கான ஸ்பெஷல் யமஹா பைக்குகள்
எஃப்இசட் எஸ் மற்றும் ஃபேஸர் பைக்குகளின் ஸ்பெஷல் எடிசன் மாடல்களை யமஹா மோட்டார்சைக்கிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. காஸ்மெட்டிக் மாற்றங்களுடன் வந்துள்ள இந்த பைக்குகளில் வண்ணம் மற்றும் பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர்கள் மட்டும் மாற்றங்களை கண்டிருக்கின்றன.
குறிப்பாக, மிலிட்டரி பச்சை வண்ணக் கலவை இந்த ஸ்பெஷல் பைக்குகளுக்கு கூடுதல் அந்தஸ்தை வழங்குகின்றன. இந்த ஸ்பெஷல் எடிசன் பைக்குகள் பற்றிய கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

எஞ்சின்
இந்த ஸ்பெஷல் எடிசன் பைக்குகளில் 14 எச்பி சக்தியையும், 13.6 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் 153சிசி ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டிருக்கிறது.

விலை விபரம்
ஸ்பெஷல் எடிசன் எஃப்இசட் எஸ் பைக் ரூ.74,385 விலையிலும், பேஸர் ரூ.79,485 விலையிலும் கிடைக்கும்.

புதிய வண்ணங்கள்
கடந்த 2008ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது முதல் இதுவரை பல தடவை இந்த பைக்குகளை புதிய புதிய வண்ணங்களில் தொடர்ந்து யமஹா அறிமுகம் செய்து வருகிறது. ஆனால், இந்த முறை மிலிட்டரி பச்சை கலருடன் வந்திருப்பதுதான் ஸ்பெஷலான விஷயம்.

வரவேற்பு
இளைய சமுதாய வாடிக்கையாளர் மத்தியில் இந்த புதிய பைக்குகளுக்கு நிச்சயம் பெரிய வரவேற்பு இருக்கும் என்று யமஹா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

பண்டிகை கால மாடல்கள்
இந்த ஸ்பெஷல் எடிசன் பைக்குகள் பண்டிகை கால சிறப்பு மாடல்களாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








