லிமிடேட் எடிசன் யமஹா ரே ஸ்கூட்டர் அறிமுகம்
பண்டிகை காலத்தில் ஸ்கூட்டர் வாங்க திட்டமிட்டிருக்கும் வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் லிமிடேட் எடிசன் யமஹா ரே ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பிரிசியஸ் எடிசன்(Precious Edition) என்ற பெயரில் வந்திருக்கும் இந்த ஸ்கூட்டரின் தோற்றத்தில் கூடுதல் கவர்ச்சிகர வேலைகளை செய்துள்ளது யமஹா. கூடுதல் விபரங்கள், படங்களை ஸ்லைடரில் காணலாம்.

பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர்
கருப்பு நிற மேனியில் இளஞ்சிவுப்பு நிறத்திலான பூ டிசைன்கள் கொண்ட பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. முன்புறத்தில் பிரிசியம் எடிசன் என்ற சிறப்பு பதிப்பு ஸ்டிக்கரும், பின்புறத்தில் ரே சிக்னஸ் என்ற ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டுள்ளது. இதைத்தவிர, கூடுதலாக வேறு ஒன்றும் இல்லை.

ஸ்பெஷல் விலை
சாதாரண யமஹா ரே ரூ.47,107 விலையில் விற்பனை செய்யப்படும் நிலையில், பிரிசியஸ் எடிசன் ரூ.48,605 விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. ஆண்களுக்கானதாக விற்பனை செய்யப்படும் யமஹா ரே ஸீ மாடல் ரூ.49,105 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

எஞ்சின்
யமஹா ரே ஸ்கூட்டரில் 113சிசி ஏர் கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 7 எச்பி ஆற்றலையும், 8.1 என்எம் டார்க்கையும் அளிக்கும்.

மைலேஜ்
லிட்டருக்கு 53 கிமீ மைலேஜ் தருவதாக யமஹா தரப்பில் தெரிவிக்கப்படுகிறு. நடைமுறையில் லிட்டருக்கு அதிகபட்சமாக 45 கிமீ மைலேஜ் தரும்.

அதிகாரி கருத்து
யமஹாவின் சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனைப் பிரிவு துணைத் தலைவர் ராய் குரியன் கூறுகையில், "வாடிக்கையாளர்களின் தேவைகளையும், எதிர்பார்ப்புகளையும் கச்சிதமாக நிறைவு செய்யும் வகையில் கவர்ச்சியான ஸ்கூட்டராக ரே இருக்கிறது. மேலும், எங்களது தயாரிப்புகளுக்கு வாடிக்கையாளர்களின் வரவேற்பை கண்டுகொள்ளும் வகையில் இந்த லிமிடேட் எடிசன் ரே அறிமுகம் செய்துள்ளோம்," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








