பெங்களூர் ஆட்டோ ஷோ- 'எக்ஸ்ளூசிவ் கவரேஜ்'

ஸ்டன்ட் பைக்கிங்:

ஒரு கையில் பாவ் பஜ்ஜியை பிடித்துக்கொண்டு, அடுத்த அரங்கிற்குள் நுழைந்தோம். அங்கு நிகழ்ச்சியை வர்ணனை செய்து கொண்டிருந்தவர் ரேஸர்களை உற்சாகப்படுத்துவதற்காக பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் ஜாலங்களை செய்துகொண்டிருந்தார்.
அப்போது, ஸ்டன்ட் பைக்கிங் சாகசங்களுக்காக விஷேசமாக வடிவமைக்கப்பட்ட பைக்குகளில் 5 ரேஸர்கள் அங்கு அமைக்கப்பட்டிருந்த பிரத்யேக டிராக்கில் அசுர வேகத்தில் வந்து பார்வையாளர்களுக்கு வணக்கம் தெரிவித்து அசத்தினர்.

இதைத்தொடர்ந்து, வீலிங் உள்ளிட்ட மயிர்க்கூச்செரிய செய்யும் சாகசங்களையும் செய்து காட்டியபோது, அரங்கில் கரவொலி விண்ணை பிளந்தது. மேலும், சாகசங்களின் நிறைவாக இரண்டு பக்கம் அமைக்கப்பட்டிருந்த பார்வையாளர்கள் பகுதியிலிருந்து ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் பார்வையாளரை தேர்வு செய்து சாகச பைக்குகளில் ஏற்றினர்.

அவர்கள் ரேஸர்களின் பின்னால் அமர்ந்துகொண்டு கைகளால் அவர்களை கெட்டியாக பிடித்துக்கொண்டனர். பின்னர் அசுர வேகத்தில் சென்று பைக்குகள் மேலெம்பியபோது, அரங்கமே ஒரு சில வினாடிகள் நிசப்தமானது. பின்னர், அடுத்த வினாடி கூட்டத்தில் விசில் பறந்தது.

ஏமாற்றிய சொகுசு கார் நிறுவனங்கள்:

இது சர்வதேச கண்காட்சி இல்லையென்பதால், மெர்சிடிஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ, ஆடி உள்ளிட்ட வெளிநாட்டு சொகுசு கார் நிறுவனங்கள் கலந்துகொள்ளவில்லை. இதனால், சற்று ஏமாற்றத்தோடு அங்கிருந்து புறப்பட்டோம்.

More from DriveSpark

Article Published On: Monday, August 29, 2011, 14:03 [IST]
English summary
A four-day-long Auto Show 2011 organised at Bangalore's Palace Grounds on 25th Aug to 28th Aug. The expo is one of the biggest car events in the region. Many automobile majors including Maruti, Hyundai, Toyota, Skoda, Mahindra, Honda participated in the expo amongst others. A variety of vintage car were also on display in the expo. Automobile engineering students also participated to display their diesel scooters and air compressed concept bike in the show.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+