பெங்களூர் ஆட்டோ ஷோ- 'எக்ஸ்ளூசிவ் கவரேஜ்'

Bangalore Auto Show
கண்காட்சியை அலங்கரித்த மாருதி ஸ்விப்ட்:

இந்த கண்காட்சியில் மாருதி, ஹூண்டாய், டொயோட்டோ, நிசான், மஹிந்திரா, ஸ்கோடா, வோக்ஸ்வேகன் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை முன்னிறுத்தி இருந்தன. இதில், புதிய வெள்ளை நிற ஸ்விப்ட் காரை மஞ்சள் நிற ஸ்பெஷல் ஸ்டிக்கர்கள் மூலம் அலங்கரித்து மாருதி நிறுத்தியிருந்தது அந்த கார் மீதான மோகத்தை மேலும் அதிகரித்தது.

வித்தியாசம் காட்டிய ஜெனரல் மோட்டார்ஸ்:

வெறும் கார்களை மட்டுமே தனது அரங்கில் காட்சிக்கு வைக்காமல், ஏர்பேக்ஸ், குழந்தைகளுக்கான சேஃப்டி சீட் ஆகியவற்றை நேரடியாக காட்சிக்கு வைத்து அவை செயல்படும் விதம் குறித்து பார்வையாளர்களுக்கு ஜெனரல் மோட்டார்ஸ் எஞ்சினியர்கள் விளக்கமளித்தது பயனுள்ள விஷயம். தவிர, பாதுகாப்பான டிரைவிங் குறித்தும் செயல்விளக்கங்களுடன் அரங்கை அமைத்திருந்தது.

'கோ கிரீன்' உறுதிமொழி:

சற்று வித்தியாசமாக யோசித்த டொயோட்டோ நிறுவனத்தார், தனது பிரையஸ் பேட்டரி கார் நிறுத்தியிருந்த இடத்தின் அருகிலேயே பெரிய போர்டை அமைத்து அதில், 'சுற்றுச்சூழலை பாதுகாப்போம்' என்ற உறுதிமொழியை எடுக்கும் வகையில் பார்வையாளர்களை கையெழுத்திட வகை செய்திருந்தது பாராட்டுக்குரியது. அந்த போர்டில் ஏராளமான பார்வையாளர்கள் ஆர்வமுடன் கையெழுத்திட்டு உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

இளசுகளை சுண்டி இழுத்த பிஎம்டபிள்யூ பைக்குகள்:

யமஹா, ஹோண்டா ஆகிய நிறுவனங்களின் பைக்குகள் தவிர, 'அழகிய அரக்கன்' என்று கூறும் வடிவமைப்புடன் இரண்டு பைக்குகளை நிறுத்தி பிஎம்டபிள்யூ அசத்தியது. அந்த பகுதியில் இளசுகள் கூட்டம் நிரம்பி வழிந்ததால், அவர்களை சமாளிக்க பாதுகாவலர்கள் சற்று திணறித்தான் போனார்கள்.

விண்டேஜ் கார்கள்:

புதிய கார்களைவிட அரங்கத்தில் நிறுத்தியிருந்த பழைய கார்கள் பெங்களூர் மக்களை வியப்பில் ஆழ்த்தியது. முந்தாநாள் வாங்கிய காரே பழசுபோல் ஆகிவிடும் நிலையில், பழைய கார் மற்றும் மோட்டார்சைக்கிள்களை புத்தம் புதுசுபோல் அதன் காப்பாளர்கள் எந்தளவுக்கு சிரத்தை எடுத்து பாதுகாத்து வருகின்றனர் என்பதை காணமுடிந்தது.
மின்னொளியில் அந்த விண்டேஜ் கார்கள் கண்களை கிறங்கடித்தன. அந்த கார்களின் டிசைனை வைத்துதான் ஓஹோ இது பழைய கார்தான் என்று கூறமுடியும். அந்தளவுக்கு மெருகேற்றி புதுப்பொலிவுடன் வைத்திருந்தனர்.

கடந்த 1938ம் ஆண்டு முதல் 1960ம் ஆண்டு வரையிலான விண்டேஜ் கார்கள் மற்றும் 1981ம் ஆண்டு வரையிலான மோட்டார்சைக்கிள்கள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. தவிரவும், ஆட்டோ ஆக்சஸெரீஸ், வாகன பராமரிப்பிற்கும், க்ளீன் செய்வதற்கான அன்றாட பொருட்களுக்கான ஸ்டால்களும் இடம்பெற தவறவில்லை.

ஆடியோ சிஸ்டம், காரை ரீ-டிசைன் செய்யும் நிறுவனங்களும் ஸ்டால்களை அமைத்து பார்வையாளர்களை இழுப்பதில் கவனம் செலுத்திக்கொண்டிருந்தன. அரங்கின் கடைசி பகுதியில் 'புட்கோர்ட்'டும் அமைக்கப்பட்டிருந்தன. அங்கு பாவ் பஜ்ஜியை ஒரு பிடி பிடித்த கையோடு நிற்கையில், அடுத்து அமைக்கப்பட்டிருந்த அரங்கில் ஸ்டன்ட் பைக் நிகழ்ச்சி இன்னும் சில நிமிடங்களில் துவங்க இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு கொண்டிருந்தது.

More from DriveSpark

Article Published On: Monday, August 29, 2011, 14:06 [IST]
English summary
A four-day-long Auto Show 2011 organised at Bangalore's Palace Grounds on 25th Aug to 28th Aug. The expo is one of the biggest car events in the region. Many automobile majors including Maruti, Hyundai, Toyota, Skoda, Mahindra, Honda participated in the expo amongst others. A variety of vintage car were also on display in the expo. Automobile engineering students also participated to display their diesel scooters and air compressed concept bike in the show.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+