பெங்களூர் ஆட்டோ ஷோ- 'எக்ஸ்ளூசிவ் கவரேஜ்'

Bangalore Auto Show
-சரவணராஜன்

பெங்களூர், அரண்மனை மைதானத்தில் கடந்த 25ந் தேதி முதல் 28ந் தேதி வரை 4 நாட்களாக நடந்து வந்த டைம்ஸ் ஆட்டோமொபைல் கண்காட்சி நேற்று நிறைவடைந்தது. முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் தங்களது தயாரிப்புகளை அரங்கங்கள் அமைத்து கடை பரப்பி இருந்தன.

தென் பிராந்தியத்தில் நடக்கும் ஆட்டோமொபைல் கண்காட்சிகளில் ஒன்றாக பதிவு செய்துகொண்ட இந்த கண்காட்சியில் புதிய கார்கள், இரு சக்கர வாகனங்கள் தவிர, விண்டேஜ் கார்கள் மற்றும் பைக்குகளும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

புதிய ஏர்கம்ப்ரஷர் பைக் கான்செப்ட்:

மேலும், எம்.எஸ். ராமையா கல்லூரி மாணவர்கள் வடிவமைத்திருந்த லிட்டருக்கு 100கிமீ.,க்கு மேல் செல்லும் டீசல் ஸ்கூட்டர் மற்றும் வெறும் காற்றை உந்து சக்தியாக பயன்படுத்தி செல்லும் மோட்டார்சைக்கிள் ஆகியவை பார்வையாளர்களின் ஆர்வத்துக்கு விருந்து படைத்தது.

அந்த பைக்குகளின் கான்செப்ட் உருவான விதம், பயன்பாடு, விஷேச அம்சங்கள் குறித்து பார்வையாளர்கள் அதை உருவாக்கிய கல்லூரி மாணவர்களிடம் ஆர்வமுடன் கேட்டு தெரிந்துகொண்டனர். குறிப்பாக, ஏர் கம்ப்ரஷர் பைக் எதிர்கால தேவைக்கு நிச்சயம் இன்றியமையாத தொழில்நுட்ப கருவாக தோன்றியது.

Most Read Articles
English summary
A four-day-long Auto Show 2011 organised at Bangalore's Palace Grounds on 25th Aug to 28th Aug. The expo is one of the biggest car events in the region. Many automobile majors including Maruti, Hyundai, Toyota, Skoda, Mahindra, Honda participated in the expo amongst others. A variety of vintage car were also on display in the expo. Automobile engineering students also participated to display their diesel scooters and air compressed concept bike in the show.
Story first published: Monday, August 29, 2011, 14:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X