மாருதி ஸ்விஃப்ட்டை விட குறைவான விலையில் 6 சீட்டர் கார்! 27 கிலோ மீட்டர் மைலேஜ் உறுதியா கிடைக்கும்!
அதிகம் பேர் பயணம் செய்ய வேண்டும், சிறப்பான மைலேஜ் கிடைக்க வேண்டும், அதே நேரத்தில் விலையும் மிகவும் குறைவாக இருக்க வேண்டும் என நீங்கள் நினைத்தால், மாருதி சுஸுகி ஈக்கோ (Maruti Suzuki Eeco) உங்களுக்கு மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும். மாருதி சுஸுகி ஆம்னியின் (Maruti Suzuki Omni) வாரிசாக மாருதி சுஸுகி ஈக்கோ கருதப்படுகிறது.
இதன் காரணமாக இந்திய சந்தையில் ஒவ்வொரு மாதமும், மாருதி சுஸுகி ஈக்கோ காரின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. இதற்கு நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதமும் விதிவிலக்கு அல்ல. மாருதி சுஸுகி ஈக்கோ காரின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

இதன்படி பார்த்தால், நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11,620 ஈக்கோ கார்களை, மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11,493 மாருதி சுஸுகி ஈக்கோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது இம்முறை 127 மாருதி சுஸுகி ஈக்கோ கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இது 1.11 சதவீத வளர்ச்சி ஆகும். மாருதி சுஸுகி ஈக்கோ கார் 5 சீட்டர் மற்றும் 6 சீட்டர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. எனவே அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய வகையில் ஒரு காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு, மாருதி சுஸுகி ஈக்கோ மிகவும் சிறந்த ஆப்ஷனாக இருக்கும். அத்துடன் இதன் விலையும் குறைவுதான்.

மாருதி சுஸுகி ஈக்கோ காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 5.21 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 6.36 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இதுதவிர ஆம்புலன்ஸ் ஷெல் மற்றும் ஆம்புலன்ஸ் ஆகிய 2 வேரியண்ட்களிலும் மாருதி சுஸுகி ஈக்கோ விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அவற்றின் விலை முறையே 6.37 லட்ச ரூபாய் மற்றும் 8.01 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை அனைத்துமே மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்த விலைக்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக இருப்பதால்தான், மாருதி சுஸுகி ஈக்கோவின் விற்பனை எண்ணிக்கை மிகவும் சிறப்பாக உள்ளது.
மாருதி சுஸுகி ஈக்கோ கார் விலை குறைவானது என்பதுடன், அதிக மைலேஜ் வழங்க கூடியதாகவும் உள்ளது. இதன் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிவோவிற்கு 26.78 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக உள்ளன. இது மாருதி சுஸுகி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படும் அராய் மைலேஜ் (ARAI Mileage) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நாங்கள் இந்த செய்தியின் முதல் பத்தியில் கூறியுள்ள 3 விஷயங்களையும் பூர்த்தி செய்ய கூடிய ஒரு காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு, மாருதி சுஸுகி ஈக்கோ மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.
வெவ்வேறு செக்மெண்ட்டை சேர்ந்தவை என்றாலும் கூட, மாருதி சுஸுகி ஈக்கோ (வேன்) காரானது மாருதி சுஸுகி ஸ்விப்ட் (Maruti Suzuki Swift, ஹேட்ச்பேக்) காரை விட விலை குறைவானது ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் ஆரம்ப விலை 5.79 லட்ச ரூபாயாக உள்ளது. அதாவது மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டை விட 58 ஆயிரம் ரூபாய் குறைவான விலையில் மாருதி சுஸுகி ஈக்கோ காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டை வாங்கி விட முடியும்.


Click it and Unblock the Notifications








