ஸ்கோடா ஆக்டேவியா

ஸ்கோடா ஆக்டேவியா
Style: செடான்
26.29 - 29.29 லட்சம்
ஜிஎஸ்டி எக்ஸ்ஷோரூம் விலை

ஸ்கோடா ஆக்டேவியா கார் 2 வேரியண்ட்டுகளில் 3 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. ஸ்கோடா ஆக்டேவியா காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். ஸ்கோடா ஆக்டேவியா காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். ஸ்கோடா ஆக்டேவியா காரை செடான் ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. ஸ்கோடா ஆக்டேவியா கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

ஸ்கோடா ஆக்டேவியா பெட்ரோல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
செடான் | Gearbox
26,28,944
செடான் | Gearbox
29,28,944

ஸ்கோடா ஆக்டேவியா மைலேஜ்

கியர்பாக்ஸ் எரிபொருள் வகை மைலேஜ்
Manual பெட்ரோல் 15.81

ஸ்கோடா ஆக்டேவியா விமர்சனம்

ஸ்கோடா ஆக்டேவியா வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்

இந்தியாவின் எக்ஸ்கியூட்டிவ் செடான் கார் மார்க்கெட்டில் ஸ்கோடா ஆக்டேவியா மிகச் சிறந்த தேர்வாக வாடிக்கையாளர்களிடம் பெயர் பெற்றுள்ளது. மிக நேர்த்தியான டிசைன் அம்சங்களுடன் செயல்திறன் மிக்க எஞ்சின் தேர்வில் கிடைப்பதால் வாடிக்கையாளர்களுக்கு அதிக மதிப்பானதாக இருக்கிறது. முன்புறத்தில் ஸ்கோடாவின் பாரம்பரியமான க்ரில் அமைப்பு, முழுமையான எல்இடி ஹெட்லைட்டுகள், 17 அங்குல அலாய் வீல்கள், ஸ்கோடா எழுத்துக்கள் பதிக்கப்பட்ட பூட் ரூம் மூடி ஆகியவற்றுடன் வசீகரமான செடான் கார் மாடலாக வசீகரிக்கிறது.

ஸ்கோடா ஆக்டேவியா எஞ்சின் மற்றும் செயல்திறன்

ஸ்கோடா ஆக்டேவியா காரில் 2.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 187 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

ஸ்கோடா ஆக்டேவியா மைலேஜ்

புதிய ஸ்கோடா ஆக்டேவியா காரில் இருக்கும் 2.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 15.81 கிமீ மைலேஜை வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. நடைமுறை பயன்பாட்டில் சற்று மைலேஜ் குறைய வாய்ப்பு இருக்கிறது.

ஸ்கோடா ஆக்டேவியா முக்கிய அம்சங்கள்

புதிய ஸ்கோடா ஆக்டேவியா காரில் எல்இடி விளக்குகள், 10 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25 அங்குல முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 2 ஸ்போக் ஸ்டீயரிங் வீல், ஷிஃப்ட் பை ஒயட் கியர் ஷிஃப்ட் வசதி, டியூவல் ஸோன் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

ஸ்கோடா ஆக்டேவியா தீர்ப்பு

எக்ஸிகியூட்டிவ் செடான் கார் மார்க்கெட்டில் மிகச் சிறந்த தேர்வாக ஸ்கோடா ஆக்டேவியா கார மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது. மேலும், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் அவ்வப்போது புதிய வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், தொடர்ந்து தன்னை சிறந்த தேர்வாக முன்னிறுத்தி வருகிறது.

வண்ணங்கள்


Lava Blue
Magic Black
Candy White

ஸ்கோடா ஆக்டேவியா படங்கள்

ஸ்கோடா ஆக்டேவியா Q & A

ஸ்கோடா ஆக்டேவியா காரில் எத்தனை வேரியண்ட்டுகள் வழங்கப்படுகின்றன?

ஸ்டைல் மற்றும் எல் அண்ட் கே ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது

Hide Answerkeyboard_arrow_down
ஸ்கோடா ஆக்டேவியா காரில் டீசல் எஞ்சின் தேர்வு உள்ளதா?
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X