ஸ்கோடா குஷாக்

ஸ்கோடா குஷாக்
Style: எஸ்யூவி
10.51 - 17.62 லட்சம்
ஜிஎஸ்டி எக்ஸ்ஷோரூம் விலை

ஸ்கோடா குஷாக் கார் 7 வேரியண்ட்டுகளில் 5 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. ஸ்கோடா குஷாக் காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். ஸ்கோடா குஷாக் காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். ஸ்கோடா குஷாக் காரை எஸ்யூவி ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. ஸ்கோடா குஷாக் கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

ஸ்கோடா குஷாக் பெட்ரோல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
எஸ்யூவி | Gearbox
10,51,012
எஸ்யூவி | Gearbox
12,81,234
எஸ்யூவி | Gearbox
14,21,369
எஸ்யூவி | Gearbox
14,61,408
எஸ்யூவி | Gearbox
15,81,524
எஸ்யூவி | Gearbox
16,21,562
எஸ்யூவி | Gearbox
17,61,697

ஸ்கோடா குஷாக் மைலேஜ்

கியர்பாக்ஸ் எரிபொருள் வகை மைலேஜ்
Manual பெட்ரோல் 0

ஸ்கோடா குஷாக் விமர்சனம்

ஸ்கோடா குஷாக் வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்

இந்தியாவின் காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் புதிய வரவாக ஸ்கோடா குஷாக் எஸ்யூவி விற்பனைக்கு வந்துள்ளது. ஸ்கோடா நிறுவனத்தின் புராஜெக்ட் 2.0 என்ற இந்தியாவிற்கான புதிய வர்த்தகத் திட்டத்தின் கீழ் இந்தியாவுக்கான பல பிரத்யேக அம்சங்களுடன் இந்த புதிய எஸ்யூவி உருவாக்கப்பட்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் குழுத்தின் எம்க்யூபி பிளாட்ஃபார்மை தழுவி உருவாக்கப்பட்ட எம்க்யூபி ஏ0 ஐஎன் என்ற இந்தியாவுக்கான புதிய கட்டமைப்புக் கொள்கையில் இந்த புத்தம் புதிய எஸ்யூவியை ஸ்கோடா நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. இந்த எஸ்யூவி 4,221 மிமீ நீளமும், 1760 மிமீ அகலமும், 1,612 மிமீ உயரமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் 2,651 மிமீ வீல்பேஸ் நீளமும், 188 மிமீ க்ரவுண்ட் க்ளியரன்ஸ் கொண்டதாகவும் இருக்கிறது.

ஸ்கோடா நிறுவனத்தின் பாரம்பரிய டிசைன் தாத்பரியங்களுடன் ஆளுமையான தோற்றத்தை பெற்றிருக்கிறது. ஸ்கோடாவின் பாரம்பரியமான பட்டர்ஃப்ளை க்ரில் அமைப்பு, 17 அங்குல அலாய் வீல்கள் வசீகரத்தை சேர்க்கின்றன. இந்த கார் கேண்டி ஒயிட், பிரில்லியண்ட் சில்வர், கார்பன் ஸ்டீல், ஹனி ஆரஞ்ச் மற்றும் டொர்னாடோ ரெட் ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

ஸ்கோடா குஷாக் எஞ்சின் மற்றும் செயல்திறன்

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியில் இரண்டு விதமான டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கும். இதில், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 114 பிஎச்பி பவரையும், 178 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சினுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 148 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஞ்சினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 7 ஸ்பீடு டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன.

ஸ்கோடா குஷாக் மைலேஜ்

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மேனுவல் மாடலை எமது குழுவினர் நகர்ப்புறத்தில் வைத்து டெஸ்ட் டிரைவ் செய்தபோது, நடைமுறையில் 8 கிமீ முதல் 11 கிமீ வரை மைலேஜ் கொடுத்தது. ஆனால், நெடுஞ்சாலையில் ஓட்டும்போது 15 முதல் 17 கிமீ வரை மைலேஜ் கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.

அதேபோன்று, 1.5 லிட்டர் மேனுவல் மாடல் சராசரியாக லிட்டருக்கு 15 முதல் 16 கிமீ மைலேஜையும், டிசிடி ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 13 முதல் 14 கிமீ மைலேஜ் கொடுக்கும் என்று நம்பலாம்.

ஸ்கோடா குஷாக் முக்கிய அம்சங்கள்

எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள், ரூஃப் ஸ்பாய்லர், சன்ரூஃப் உள்ளிட்ட அம்சங்களை பெற்றுள்ளது. சப் ஊஃபர் மற்றும் 7 ஸ்பீக்கர்கள் கொண்ட மியூசிக் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், முன்புறத்தில் வென்டிலேட்டட் வசதி கொண்ட இருக்கைகள், 2 ஸ்போக் ஸ்டீயரிங் வீல், ஸ்டீயரிங் வீலில் கன்ட்ரோல் சுவிட்சுகள், ஆட்டோ டிம் வசதியுடன் உட்புற ரியர் வியூ மிரர் ஆகியவை குறிப்பிட்டு சொல்ல வேண்டிய வசதிகளாக உள்ளன.

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியில் 6 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், ரியர் பார்க்கிங் கேமரா, ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், மல்டி கொலிஷன் பிரேக்கிங் சிஸ்டம், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் ஆகியவை கொடுக்கப்படுகின்றன. எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் தொழில்நுட்பம் அனைத்து வேரியண்ட்டுகளிலும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்கோடா குஷாக் தீர்ப்பு

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவி தோற்றம், வசதிகள், எஞ்சின் தேர்வுகள் மற்றும் சரியான விலை போன்றவற்றால் காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் சிறந்த தேர்வாக இருக்கும் என்று கூறலாம். கியா செல்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு மாற்றுத் தேடுவோருக்கு சிறந்த தேர்வாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

வண்ணங்கள்


Carbon Steel Metallic
Brilliant Silver
Torando Red Metallic
Honey Orange Metallic
Candy White

ஸ்கோடா குஷாக் படங்கள்

ஸ்கோடா குஷாக் Q & A

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவி எத்தனை வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது?

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவி ஆக்டிவ், ஆம்பிஷன், ஸ்டைல் என மூன்று வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.

Hide Answerkeyboard_arrow_down
புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியில் டீசல் எஞ்சின் தேர்வு வழங்கப்படுகிறதா?

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியில் டீசல் எஞ்சின் தேர்வு இல்லை. இரண்டு பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் மட்டுமே கிடைக்கிறது.

Hide Answerkeyboard_arrow_down
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X