மாருதி சுஸுகி பலேனோ

மாருதி சுஸுகி பலேனோ
Style: ஹேட்ச்பேக்
6.66 - 9.88 லட்சம்
ஜிஎஸ்டி எக்ஸ்ஷோரூம் விலை

மாருதி சுஸுகி பலேனோ கார் 9 வேரியண்ட்டுகளில் 7 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. மாருதி சுஸுகி பலேனோ காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். மாருதி சுஸுகி பலேனோ காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். மாருதி சுஸுகி பலேனோ காரை ஹேட்ச்பேக் ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. மாருதி சுஸுகி பலேனோ கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

மாருதி சுஸுகி பலேனோ பெட்ரோல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
ஹேட்ச்பேக் | Gearbox
6,65,549
ஹேட்ச்பேக் | Gearbox
7,49,549
ஹேட்ச்பேக் | Gearbox
7,99,981
ஹேட்ச்பேக் | Gearbox
8,42,549
ஹேட்ச்பேக் | Gearbox
8,92,981
ஹேட்ச்பேக் | Gearbox
9,37,549
ஹேட்ச்பேக் | Gearbox
9,87,981

மாருதி சுஸுகி பலேனோ சிஎன்ஜி மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
ஹேட்ச்பேக் | Gearbox
8,39,548
ஹேட்ச்பேக் | Gearbox
9,32,548

மாருதி சுஸுகி பலேனோ மைலேஜ்

கியர்பாக்ஸ் எரிபொருள் வகை மைலேஜ்
Manual பெட்ரோல் 22.9
Manual சிஎன்ஜி 30.61

மாருதி சுஸுகி பலேனோ விமர்சனம்

மாருதி சுஸுகி பலேனோ Exterior And Interior Design

மாருதி சுஸுகி பலேனோ வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய மாருதி பலேனோ கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. முந்தைய மாடலைவிட இந்த புதிய பலேனோ காரில் ஏராளமான கூடுதல் அம்சங்களும், மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. முகப்பு வடிவமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய க்ரில் அமைப்பு, பம்பர் மற்றும் பம்பருடன் இயைந்த பனி விளக்குகள் அறை ஆகியவை முக்கிய மாற்றங்களாக இருக்கிறது.

பம்பருடன் பெரிய அளவிலான ஏர்டேம் பகுதியும் கொடுக்கப்பட்டுள்ளது. பழைய மாடலைவிட கூர்மையாகவும், அகலமாகவும் காட்சியளிக்கிறது புதிய மாருதி பலேனோ கார். ஹெட்லைட் க்ளஸ்ட்டரில் சிறிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. பக்கவாட்டில் பெரிய மாற்றங்கள் தெரியவில்லை. ஆனால், இரட்டை வண்ணத்தில் புதிய 16 அங்குல அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்புறத்தில் பெரிய மாற்றங்கள் இல்லை.

மாருதி சுஸுகி பலேனோ காரின் இன்டீரியரிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. கருப்பு வண்ண இன்டீரியர் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால், இருக்கைகள் கருப்பு மற்றும் நீல வண்ணத்தில் கொடுக்கப்பட்டு இருப்பது கவர்ச்சியாக தெரிகிறது. டேஷ்போர்டிலும், சென்டர் கன்சோல் மற்றும் ஏசி வென்ட்டுகளில் க்ரோம் அலங்காரம் பிரிமீயமாக காட்டுகிறது.

மாருதி பலேனோ காரின் ஆர்எஸ் என்ற செயல்திறன் மிக்க மாடலும் விற்பனையில் உள்ளது. புதிய மாருதி பலேனோ கார் நெக்ஸா புளூ, பியர்ல் ஆர்டிக் ஒயிட், மெட்டாலிக் பிரிமீயம் சில்வர், பியர்ல் ஃபீனிக்ஸ் ரெட், மெட்டாலிக் மேக்மா க்ரே மற்றும் சாலிட் ஃபயர் ரெட் (ஆர்எஸ் மாடலில் மட்டுமே கிடைக்கும்) ஆகிய வண்ணத்த தேர்வுகளில் கிடைக்கிறது.

மாருதி சுஸுகி பலேனோ எஞ்சின் மற்றும் செயல்திறன்

மாருதி சுஸுகி பலேனோ Engine And Performance

பிஎஸ்-VI மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்ட எஞ்சின்களுடன் வந்த முதல் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார் மாடல் பலேனோதான். இந்த காரில் இருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சசமாக 82 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்ததும்.

அடுத்து ஸ்மார்ட் ஹைப்ரிட் மாடலில் இருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறனை பெற்றிருக்கிறது. டீசல் மாடலில் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் 75 பிஎச்பி பவரையும், 190 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். பெட்ரோல் மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

மாருதி சுஸுகி பலேனோ மைலேஜ்

மாருதி சுஸுகி பலேனோ Fuel Efficiency

புதிய மாருதி பலேனோ காரில் 37 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் கலன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காரின் 1.2 லிட்டர் பெட்ரோல் மாடலானது லிட்டருக்கு 21.01 கிமீ மைலேஜையும், சிவிடி ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 19.56 கிமீ மைலேஜையும் வழங்கும். ஸ்மார்ட் ஹைப்ரிட் மாடலானது கணக்கீடுகளின்படி லிட்டருக்கு 23.87 கிமீ மைலேஜையும் வழங்கும்.

மாருதி சுஸுகி பலேனோ முக்கிய அம்சங்கள்

மாருதி சுஸுகி பலேனோ Important Features

மாருதி பலேனோ காரில் கெய்டு லைட்டுகளுடன் கூடிய எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், கார் நிறுத்தும்போது தானியங்கி முறையில் மடங்கிக் கொள்ளும் சைடு மிரர்கள், விளக்குடன் கூடிய க்ளவ் பாக்ஸ் அறை, லெதர் உறையுடன் ஸ்டீயரிங் வீல் புதிய ஸ்மார்ட்ப்ளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், டில்ட் மற்றும் டெலிஸ்கோப்பிக் ஸ்டீயரிங் வீல், ரிமோட் கீ லெஸ் என்ட்ரி, சென்ட்ரல் லாக்கிங் வசதி, ஆட்டோமேட்டிக் ஏசி மற்றும் ஃபாலோ மீ ஹெட்லைட்டுகள் உள்ளன.

புதிய மாருதி பலேனோ காாரில் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், சீட் பெல்ட் ரிமைன்டர், அதிவேகம் குறித்த எச்சரிக்கை நுட்பம், ரிவர்ஸ் பாரக்கிங் சென்சார்கள், ரிவர்ஸ் கேமரா, இம்மொபைலைசர், அனைத்து சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக்குகள், ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்டுகள் உள்ளன.

மாருதி சுஸுகி பலேனோ தீர்ப்பு

மாருதி சுஸுகி பலேனோ Verdict

பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் மாருதி பலேனோ விற்பனையில் நம்பர்-1 இடத்தில் உள்ளது. அட்டகாசமான டிசைன், நவீன தொழில்நுட்ப வசதிகள், நம்பகமான எஞ்சின் தேர்வுகள், அதிக எரிபொருள் சிக்கனம், சரியான பட்ஜெட்டில் கிடைப்பதால் வாடிக்கையாளர் மத்தியில் தொடர்ந்து அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது.

வண்ணங்கள்


Pearl Midnight Black
Nexa Blue
Grandeur Grey
Splendid Silver
Luxe Beige
Opulent Red
Arctic White

மாருதி சுஸுகி பலேனோ படங்கள்

 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X