

Click it and Unblock the Notifications
டாடா தியாகோ கார் 7 வேரியண்ட்டுகளில் 6 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. டாடா தியாகோ காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். டாடா தியாகோ காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். டாடா தியாகோ காரை ஹேட்ச்பேக் ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. டாடா தியாகோ கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.
| வேரியண்ட்டுகள் | எக்ஸ்ஷோரூம் விலை |
|---|---|
|
ஹேட்ச்பேக் | Steel Rims Gearbox
|
₹ 5,28,388 |
|
ஹேட்ச்பேக் | Steel Rims Gearbox
|
₹ 6,13,598 |
|
ஹேட்ச்பேக் | Steel Rims Gearbox
|
₹ 6,66,854 |
|
ஹேட்ச்பேக் | Steel Rims Gearbox
|
₹ 7,39,609 |
|
ஹேட்ச்பேக் | Diamond-Cut Alloy Wheels Gearbox
|
₹ 7,94,366 |
|
ஹேட்ச்பேக் | Diamond-Cut Alloy Wheels Gearbox
|
₹ 8,27,220 |
| வேரியண்ட்டுகள் | எக்ஸ்ஷோரூம் விலை |
|---|---|
|
ஹேட்ச்பேக் | Steel Rims Gearbox
|
₹ 6,45,552 |
| கியர்பாக்ஸ் | எரிபொருள் வகை | மைலேஜ் |
|---|---|---|
| Steel Rims | பெட்ரோல் | FWD |
| Steel Rims | சிஎன்ஜி | FWD |
| Diamond-Cut Alloy Wheels | பெட்ரோல் | FWD |
பட்ஜெட் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் மிகச் சிறந்த தேர்வாக டாடா டியாகோ இருந்து வருகிறது. சிறந்த டிசைன், வசதிகளுடன் சரியான பட்ஜெட்டில் கிடைப்பதால் வாடிக்கையாளர்களிடம் அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது. அல்ட்ராஸ் காரை போன்ற முகப்பை பெற்றிருக்கிறது. டியாகோ ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புதிய பம்பர் அமைப்பு, ஹெட்லைட்டுகள் மற்றும் புதிய க்ரில் அமைப்பு இடம்பெற்றுள்ளது. எல்இடி டெயில் லைட்டுகள்,, இரட்டை வண்ண அலாய் வீல்கள், மற்றும் கருப்பு வண்ண கூரையுடன் இரட்டை வண்ணத் தேர்வில் மிகவும் பிரிமீயமாகவும் கிடைக்கிறது. உட்புறத்திலும் சில மாற்றங்களுடன புதிய பொலிவு பெற்றுள்ளது. மொத்தத்தில் சிறந்த டிசைன் அம்சங்களை பெற்ற மாடலாக இருக்கிறது.
புதிய டாடா டியாகோ காரில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தர அம்சம் கொண்ட மூன்று சிலிண்டர்களுடன் கூடிய 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 83 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.
புதிய டாடா டியாகோ காரில் 35 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 23 கிமீ மைலேஜை வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. நடைமுறையிலும் சிறப்பான மைலேஜை வழங்கும் என்று கருதலாம்.
டாடா டியாகோ காரில் புதிய அப்ஹோல்ஸ்ட்ரி, 7 அங்குல தொடுதிைரயுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே அல்லது ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதி, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், 15 அங்குல அலாய் வீல்கள், எல்இடி பகல்நேர விளக்குகள், புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள், 8 ஸ்பீக்கர்கள் கொண்ட மியூசிக் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரியர் வியூ கேமரா, ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, ஹை ஸ்பீடு அலர்ட் என பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை பெற்றிருக்கிறது.
ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் டிசைன், வசதிகள், மைலேஜ், விலை என அனைத்திலும் வாடிக்கையாளர்களுக்கு நிறைவை தரும் மாடலாக டாடா டியாகோ கார் உள்ளது. செயல்திறனிலும் சிறப்பானதாக இருக்கிறது.
எக்ஸ்இ, எக்ஸ்டி ஆப்ஷன், எக்ஸ்டி மற்றும் எக்ஸ்இசட் ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.
டீசல் எஞ்சின் தேர்வு இல்லை


Click it and Unblock the Notifications