

Click it and Unblock the Notifications
ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் கார் 9 வேரியண்ட்டுகளில் 5 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் காரை ஹேட்ச்பேக் ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.
| வேரியண்ட்டுகள் | எக்ஸ்ஷோரூம் விலை |
|---|---|
|
ஹேட்ச்பேக் | Steel Rims Gearbox
|
₹ 6,26,209 |
|
ஹேட்ச்பேக் | Steel Rims Gearbox
|
₹ 7,23,797 |
|
ஹேட்ச்பேக் | Steel Rims Gearbox
|
₹ 7,49,253 |
|
ஹேட்ச்பேக் | Steel Rims Gearbox
|
₹ 7,85,225 |
|
ஹேட்ச்பேக் | Alloy Wheels Gearbox
|
₹ 8,10,570 |
|
ஹேட்ச்பேக் | Diamond-Cut Alloy Wheels Gearbox
|
₹ 8,12,895 |
|
ஹேட்ச்பேக் | Alloy Wheels Gearbox
|
₹ 8,56,281 |
|
ஹேட்ச்பேக் | Alloy Wheels Gearbox
|
₹ 8,81,406 |
| வேரியண்ட்டுகள் | எக்ஸ்ஷோரூம் விலை |
|---|---|
|
ஹேட்ச்பேக் | Steel Rims Gearbox
|
₹ 8,27,836 |
| கியர்பாக்ஸ் | எரிபொருள் வகை | மைலேஜ் |
|---|---|---|
| Steel Rims | பெட்ரோல் | FWD |
| Steel Rims | சிஎன்ஜி | FWD |
| Alloy Wheels | பெட்ரோல் | FWD |
| Diamond-Cut Alloy Wheels | பெட்ரோல் | FWD |
ஹூண்டாய் ஐ10 காரின் வழித்தோன்றலில் அதிக பிரிமீயம் அம்சங்களுடன் கூடிய மாடலாக க்ராண்ட் ஐ10 நியோஸ் கார் விற்பனையில் வைக்கப்பட்டு இருக்கிறது. மூன்று எஞ்சின் தேர்வுகள், 5 விதமான வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் கவர்ச்சிகரமான டிசைன் அம்சங்களுடன் க்ராண்ட் ஐ10 நியோஸ் கார் கிடைக்கிறது.
புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், பூமராங் வடிவிலான பகல்வேளை விளக்குகள், புரொஜெக்டர் பனி விளக்குகள், 15 அங்குல அலாய் வீல்கள், ரூஃப் ரெயில்கள் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. இந்த காரின் டிசைன் நிச்சயம் பிரிமீயமாக காட்சித் தருகிறது. இந்த காரில் சாம்பல் மற்றும் கருப்பு வண்ண இன்டீரியர் தீம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. போதுமான இடவசதியுடன் உட்புறமும் மிகவும் பிரிமீயமாகவும், போட்டியாளர்களைவிட தரமான பாகங்களுடன் காட்சித் தருகிறது.
புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.2 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. இதில், 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 82 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த பெட்ரோல் எஞ்சினுடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. இந்த எஞ்சின் பெட்ரோல் மட்டுமின்றி, சிஎன்ஜி தேர்வில் கிடைக்கிறது.
1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 99 பிஎச்பி பவரையும், 172 என்எம் டார்க் திறனையும் வழங்குகிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில், ஸ்போர்ட்ஸ் என்ற மாடல் பெயரில் கிடைக்கிறது. அதிக செயல்திறனை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இந்த டர்போ பெட்ரோல் எஞ்சின் வேரியண்ட்டுகள் சிறந்த தேர்வாக இருக்கும். இதுதவிர்த்து, 1.2 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 74 பிஎச்பி பவரையும், 190 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கொடுக்கப்படுகிறது. அதிக எரிபொருள் சிக்கனத்தை இந்த எஞ்சின் வழங்கும்.
புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரின் 1.2 லிட்டர் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 21 கிமீ மைலேஜையும், டர்போ பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 20 கிமீ மைலேஜையும், டீசல் எஞ்சின் லிட்டருக்கு 25 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. நடைமுறை பயன்பாட்டில் அனைத்து எஞ்சின்களுமே சிறந்த எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் என்று நம்பலாம்.
புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், பகல்நேர விளக்குகள், புரொஜெக்டர் பனி விளக்குகள், 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதி, வாய்ஸ் ரெககனிஷன் வசதி, ரியர் ஏசி வென்ட்டுகள், கூல்டு க்ளவ் பாக்ஸ், ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் கேமரா, எஞ்சின் ஸ்டார்ட் - ஸ்டாப் சுவிட்ச் வசதிகள் இந்த காரின் மிக முக்கிய சிறப்பம்சங்களாக கூறலாம்.
ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் அதிக பிரிமீயம் வசதிகளுடன் சரியான பட்ஜெட்டில் ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் கார் கிடைக்கிறது. இதனால், வாடிக்கையாளர்களின் தேர்வில் முக்கிய இடத்தை வகிப்பதுடன், விற்பனையிலும் சிறப்பாக இருந்து வருகிறது. பிர்மீயம் ஹேட்ச்பேக் காரை பட்ஜெட் விலையில் எதிர்பார்ப்பவர்களுக்கு சிறந்த தேர்வாக அமையும்.
தைபூன் சில்வர், ஃபியரி ரெட், டைட்டன் க்ரே, அக்வா டீல் உள்ளிட்டவற்றுடன் 3 விதமான இரட்டை வண்ணத் தேர்வுகளும் கொடுக்கப்படுகின்றன.
எரா, மேக்னா, ஸ்போர்ட்ஸ் மற்றும் அஸ்ட்டா ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications