

Click it and Unblock the Notifications
மெர்சிடிஸ் பென்ஸ் GLE கார் 4 வேரியண்ட்டுகளில் 2 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. மெர்சிடிஸ் பென்ஸ் GLE காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். மெர்சிடிஸ் பென்ஸ் GLE காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். மெர்சிடிஸ் பென்ஸ் GLE காரை முழு அளவு எஸ்யூவி ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் GLE கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.
| வேரியண்ட்டுகள் | எக்ஸ்ஷோரூம் விலை |
|---|---|
|
முழு அளவு எஸ்யூவி | Alloy Wheels Gearbox
|
₹ 1,18,21,577 |
|
முழு அளவு எஸ்யூவி | Alloy Wheels Gearbox
|
₹ 1,24,08,358 |
|
மெர்சிடிஸ் பென்ஸ் GLE 450 4MATIC LWB மைல்ட் ஹைப்ரிட்(எலக்ட்ரிக் + பெட்ரோல்) 3.0L டர்போ ஆட்டோமேட்டிக்
முழு அளவு எஸ்யூவி | Alloy Wheels Gearbox
|
₹ 1,28,92,424 |
|
முழு அளவு எஸ்யூவி | Alloy Wheels Gearbox
|
₹ 1,37,57,955 |
| கியர்பாக்ஸ் | எரிபொருள் வகை | மைலேஜ் |
|---|---|---|
| Alloy Wheels | ஹைபிரிட் | AWD |
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் மிட்சைஸ் சொகுசு எஸ்யூவி மாடல்கள் வரிசையில் அதிக வரவேற்பை பெற்ற மாடலாக ஜிஎல்இ எஸ்யூவி இருந்து வருகிறது. இந்த எஸ்யூவியின் பிஎஸ் மாடல் பெட்ரோல் மற்றும் இரண்டு விதமான டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ எஸ்யூவி முந்தைய மாடலைவிட 80 மிமீ கூடுதல் வீல்பேஸ் நீளம் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், கால் வைப்பதற்கான லெக்ரூம் இடவசதி 69 மிமீ வரையிலும், ஹெட்ரூம் இடவசதி 35 மிமீ வரையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதிய ஜிஎல்இ எஸ்யூவி முந்தைய மாடலைவிட மிகச் சிறப்பான ஏரோடைனமிக்ஸ் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் முகப்பில் புதிய க்ரில் அமைப்பு பிரதானமாக இடம்பெற்றுள்ளது. வலிமையான பம்பர், எல்இடி பகல்நேர விளக்குகளுடன் கூடிய ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், அழகியா அலாய் வீல்கள், நேர்த்தியான டெயில் லைட்டுகளுடன் பார்த்த உடனே இது ஒரு மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்யூவி என்பதை பரைசாற்றும் வகையில் தோற்றத்தை பெற்றிருக்கிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ எஸ்யூவியில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 3.0 லிட்டர் பெட்ரோல், 2.0 லிட்டர் டீசல் மற்றும் 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் வழங்கப்படுகின்றன. இந்த காரில் 450 என்ற பெயரில் வழங்கப்படும் 3.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 362 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இதன் 300டீ என்ற பெயரில் குறிப்பிடப்படும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் மாடலானது அதிகபட்சமாக 242 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஞ்சின் 0- 100 கிமீ வேகத்தை 7.2 வினாடிகளில் எட்டிவிடும். 400 டீ என்ற வேரியண்ட்டில் வரும் 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 326 பிஎச்பி பவரையும், 700 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 0 - 100 கிமீ வேகத்தை 5.8 வினாடிகளில் எட்டிவிடும். 9ஜி டிரோனிக் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ எஸ்யூவியின் 2.0 லிட்டர் டீசல் மாடல் லிட்டருக்கு 14.08 கிமீ மைலேஜையும், 3.0 லிட்டர் டீசல் மாடல் லிட்டருக்கு 13.89 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 11.11 கிமீ மைலேஜை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நடைமுறை பயன்பாட்டில் சிறப்பான மைலேஜை வழங்கும் என்று கருதலாம்.
இந்த காரில் முழுவதும் பிரிமீயம் மல்டிபீம் எல்இடி ஹெட்லைட்டுகள், லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி, பெரிய தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், எம்பியூஎக்ஸ் இயங்குதளம் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்களை பெற்றிருக்கிறது. இந்த காரில் ஆ ஆக்டிவ் பாடி கன்ட்ரோல் சஸ்பென்ஷன், ஏர்மேட்டிக் ஏர் சஸ்பென்ஷன், 9 ஏர்பேக்குகள், பிளைன்டு ஸ்பாட் சிஸ்டம் உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு அம்சங்களையும், சிறப்பு தொழில்நுட்ப வசதிகளையும் பெற்றிருக்கிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ எஸ்யூவியானது சொகுசு எஸ்யூவி மார்க்கெட்டில் ஆல் ரவுண்டர் மாடலாக வலம் வருகிறது. பிஎம்டபிள்யூ எக்ஸ்5, வால்வோ எக்ஸ்சி90 மற்றும் ஆடி க்யூ7 ஆகிய எஸ்யூவி மாடல்களுக்கு இந்த கார் போட்டியாக இருக்கிறது. நவீன வசதிகள், டிசைன், செயல்திறன் மிக்க எஞ்சினுடன் இதன் ரகத்தில் மதிப்பு வாய்ந்த மாடலாக இருந்து வருகிறது.
450, 300டீ, 400டீ என மூன்று வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.
5 பேர் பயணிப்பதற்கான இருக்கை வசதியை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications