மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ்

மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ்
Style: Full Size SUV
275.05 - 410.00 லட்சம்
ஜிஎஸ்டி எக்ஸ்ஷோரூம் விலை

மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ் கார் 2 வேரியண்ட்டுகளில் 7 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ் காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ் காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ் காரை Full Size SUV ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ் கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ் ஹைபிரிட் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
Full Size SUV | Gearbox
2,75,04,901
Full Size SUV | Gearbox
4,10,00,000

மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ் விமர்சனம்

மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ் வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் மேபக் எஸ்யூவி பெரும் கோடீஸ்வர வாடிக்கையாளர்களின் கனவு வாகனமாக இருந்து வருகிறது. சாதாரண ஜிஎல்எஸ் எஸ்யூவியின் அடிப்படையில் இருந்தாலும் ஏராளமான சிறப்பு அம்சங்களுடன் இந்த ஜிஎல்எஸ் மேபக் எஸ்யூவி உயரிய வகை மாடலாக பெயர் பெற்றுவிட்டது. சாதாரண ஜிஎல்எஸ் எஸ்யூவியிலிருந்து வேறுபடுத்தும் வகையில், மேபக் கார்களுக்கு உரிய முத்தாய்ப்பான க்ரோம் க்ரில் அமைப்பு, பெரிய பம்பர், அழகிய ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், 22 அங்குல அலாய் வீல்கள், டியூவல் டோன் பெயிண்ட் ஆகியவை இந்த காருக்கு அதிக வசீகரத்தை தருகிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ் எஞ்சின் மற்றும் செயல்திறன்

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் மேபக் 600 காரில் 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 550 பிஎச்பி பவரையும், 730 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.இதனுடன் 48V மைல்டு ஹைப்ரிட் சிஸ்டமும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் கூடுதலாக 22 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த காரில் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் 4 மேட்டிக் ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் உள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ் மைலேஜ்

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் மேபக் 600 எஸ்யூவியின் திறன் வாய்ந்த 4.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் லிட்டருக்கு 8.5 கிமீ மைலேஜை வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த பிரம்மாண்ட எஸ்யூவி நடைமுறையில் மைலேஜ் அளவில் சிறிய குறைவு இருக்க வாய்ப்பு இருக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ் முக்கிய அம்சங்கள்

இந்த எஸ்யூவியின் மிக முக்கிய அம்சங்களில் ஒன்று ஏர் சஸ்பென்ஷன் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யூவி 4 சீட்டர் மற்றும் 5 சீட்டர் மாடல்களில் கிடைக்கிறது. இந்த காரில் நப்பா லெதர் மற்றும் விசேஷ அலங்கார அம்சங்களுடன் இருக்கைகள் உள்ளன. இந்த காரில் 12.3 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்,, 360 டிகிரி கேமரா, பர்ம்ஸ்டெர் ஆடியோ சிஸ்டம், 4 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல், ஹீட்டடு மற்றும் வென்டிலேட்டட் இருக்கைகள், மசாஜ் வசதியுடன் இருக்கைகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

இந்த காரில் 8 ஏர்பேக்குகள், இ - ஆக்டிவ் பாடி கன்ட்ரோல் வசதி, ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், பிளைன்ட் ஸ்பாட் அசிஸ்ட், ஆக்டிவ் பிரேக், ஸ்டீயரிங் அசிஸ்ட், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் உள்ளிட்ட பல அதிநவீன பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்றுள்ளன.

மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ் தீர்ப்பு

அதிசிறந்த அம்சங்களுடன் அந்தஸ்தை காட்டும் விஷயமாக மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் மேபக் 600 எஸ்யூவி பார்க்கப்படுகிறது. சொகுசு அம்சங்கள், பிரம்மாண்டத் தோற்றம், செயல்திறன் மிக்க எஞ்சின் தேர்வுடன் ஒரு தனித்துவமான தேர்வாக அமையும்.

வண்ணங்கள்


Sodalite Blue
Obsidian Black
Polar White (Non Metallic)
Selenite Grey
Hyacinth Red Metallic
Alpine Grey
Opalite White Bright

மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ் படங்கள்

மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ் Q & A

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் மேபக் எஸ்யூவி எத்தனை வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது?

அனைத்து வசதிகளும் கொண்ட ஒரே வேரியண்ட்டில் கிடைக்கிறது

Hide Answerkeyboard_arrow_down
மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் மேபக் எஸ்யூவியில் டீசல் எஞ்சின் தேர்வு உள்ளதா?
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+