

Click it and Unblock the Notifications
எம்ஜி ZS EV கார் 5 வேரியண்ட்டுகளில் 1 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. எம்ஜி ZS EV காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். எம்ஜி ZS EV காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். எம்ஜி ZS EV காரை எஸ்யூவி ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. எம்ஜி ZS EV கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.
| வேரியண்ட்டுகள் | எக்ஸ்ஷோரூம் விலை |
|---|---|
|
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
|
₹ 13,85,679 |
|
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
|
₹ 14,38,856 |
|
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
|
₹ 15,43,537 |
|
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
|
₹ 15,43,537 |
|
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
|
₹ 16,52,217 |
| கியர்பாக்ஸ் | எரிபொருள் வகை | மைலேஜ் |
|---|---|---|
| Alloy Wheels | எலக்ட்ரிக் | FWD |
இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் மார்க்கெட்டில் எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி மிகச் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. டிசைன், ரேஞ்ச், செயல்திறன் அனைத்திலும் சிறந்த தேர்வாக இருக்கிறது. 2021 மாடலாக வந்த எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி பிரம்மாண்ட க்ரில் அமைப்பு, புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், 17 அங்குல அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்டுகள், ரியர் ஸ்பாய்லர் ஆகியவை வசீகரமான தோற்றத்தை தருகின்றன.
எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காரில் 44.5kWh பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இதனுடன் இணைக்கப்பட்டு இருக்கும் மின் மோட்டார் அதிகபட்சமாக 143 பிஎச்பி பவரையும், 353 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 8.5 வினாடிகளிலேயே எட்டிவிடும் திறந் வாய்ந்தது.
எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 419 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். சாதாரண சார்ஜர் மூலமாக பேட்டரியை சார்ஜ் செய்ய 6 முதல் 8 மணிநேரம் வரை பிடிக்கும். ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக 0 - 80 சதவீதம் அளவுக்கான சார்ஜை 50 நிமிடங்களில் செய்துவிடலாம்.
புதிய எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், 17 அங்குல அலாய் வீல்கள், 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே, ஆன்ட்ராய்டு செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதி, க்ரூஸ் கன்ட்ரோல், டிரைவிங் மோடுகள், எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக்குகள், பனோரமிக் சன்ரூஃப், கனெக்டெட் கார் தொழில்நுட்பம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இந்த காரில் 6 ஏர்பேக்குகள், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, பெடஸ்ட்ரியன் வார்னிங் சிஸ்டம் ஆகிய ஏராளமான பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்றுள்ளன.
சிறந்த டிசைன், அதிக தூரம் பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் பேட்டரி, அதிக தொழில்நுட்ப வசதிகளுடன் இந்தியாவின் சிறந்த எலெக்ட்ரிக் கார் மாடலாக பெயர் பெற்றுள்ளது. நகர்ப்புறத்தில் தினசரி பயன்பாட்டிற்கு மிகச் சிறந்த எஸ்யூவி மாடலாக உள்ளது. சுற்றுச்சூழலுக்கு தீங்கு இல்லாத ஒரு சிறந்த எலெக்ட்ரிக் எஸ்யூவியை வாங்க விரும்புவோருக்கு பெஸ்ட் சாய்ஸாக கூறலாம்.
எக்ஸைட் மற்றும் எக்ஸ்க்ளூசிவ் ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது
5 பேர் பயணிக்கும் இருக்கை வசதியை பெற்றுள்ளது


Click it and Unblock the Notifications