மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி
Style: எஸ்யூவி
89.05 - 90.97 லட்சம்
ஜிஎஸ்டி எக்ஸ்ஷோரூம் விலை

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி கார் 2 வேரியண்ட்டுகளில் 5 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி காரை எஸ்யூவி ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி பெட்ரோல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
89,04,883

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி டீசல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
90,97,383

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி மைலேஜ்

கியர்பாக்ஸ் எரிபொருள் வகை மைலேஜ்
Alloy Wheels பெட்ரோல் AWD
Alloy Wheels டீசல் AWD

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி விமர்சனம்

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்

இந்தியாவின் மிட்சைஸ் சொகுசு எஸ்யூவி மார்க்கெட்டில் மிகச் சிறந்த தேர்வுகளில் ஒன்றாக மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி எஸ்யூவி பெயர் பெற்றுள்ளது. ஏராளமான கூடுதல் சிறப்பம்சங்களுடன் 2021 மாடலாக விற்பனையில் வைக்கப்பட்டு இருக்கிறது. மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புதிய க்ரில் மற்றும் பம்பர் அமைப்புடன் புதிய பொலிவு பெற்றுள்ளது. அதேபோன்று, புதிய அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்டுகள் இந்த எஸ்யூவியின் தோற்றத்தை வசீகரமாக மாற்றி இருக்கிறது. ஒட்டுமொத்த தோற்றத்தில் மிகச் சிறப்பாக இருப்பதால் வாடிக்கையாளர்களை எளிதாக வசப்படுத்தி வருகிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி எஞ்சின் மற்றும் செயல்திறன்


புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி எஸ்யூவியின் பிஎஸ்6 மாடலில் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. இதன் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 197 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வு வழங்கப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 168 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. டீசல் மாடலில் 4மேட்டிக் ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் கொடடுக்கப்பட்டு இருக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி மைலேஜ்

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 12.74 கிமீ மைலேஜை வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. டீசல் மாடலின் மைலேஜ் விபரங்கள் அதிகாரப்பூர்வமாக இல்லை. ஆனால், பெட்ரோல் மாடலைவிட டீசல் மாடல் கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை வழங்க வல்லதாக இருக்கும்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி முக்கிய அம்சங்கள்

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவியில் 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. 64 ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், எம்பியூஎக்ஸ் இயங்குதளம், வயர்லெஸ் சார்ஜர், 7 ஏர்பேக்குகள், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்ட பல நவீன தொழில்நுட்ப அம்சங்களை இந்த கார் பெற்றிருக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி தீர்ப்பு

மிட்சைஸ் சொகுசு எஸ்யூவி வாங்க விரும்புவோரின் எதிர்பார்ப்புகளை மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி ஃபேஸ்லிஃப்ட் மாடல் கச்சிதமாக பூர்த்தி செய்யும் விதத்தில் உள்ளது. மேலும், செயல்திறன் மிக்க எஞ்சின் தேர்வுகள், விலை உள்ளிட்டவையும் இந்த எஸ்யூவிக்கு அதிக மதிப்பை சேர்க்கின்றன.

வண்ணங்கள்


Nautic Blue
Mojave Silver
Graphite Grey
Polar White
Obsidian Black

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி படங்கள்

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி Q & A

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி எஸ்யூவி எத்தனை வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது?

பெட்ரோல், டீசல் மாடல்கள் தலா ஒரு வேரியண்ட்டில் கிடைக்கின்றன

Hide Answerkeyboard_arrow_down
மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி எஸ்யூவியில் எத்தனை பேர் பயணிக்கலாம்?

5 பேர் பயணிப்பதற்கான இருக்கை வசதியை பெற்றுள்ளது

Hide Answerkeyboard_arrow_down
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out