

Click it and Unblock the Notifications
ரெனோ க்விட் கார் 6 வேரியண்ட்டுகளில் 5 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. ரெனோ க்விட் காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். ரெனோ க்விட் காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். ரெனோ க்விட் காரை ஹேட்ச்பேக் ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. ரெனோ க்விட் கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.
| வேரியண்ட்டுகள் | எக்ஸ்ஷோரூம் விலை |
|---|---|
|
ஹேட்ச்பேக் | Steel Rims Gearbox
|
₹ 5,14,779 |
|
ஹேட்ச்பேக் | Steel Rims Gearbox
|
₹ 5,54,311 |
|
ஹேட்ச்பேக் | Steel Rims Gearbox
|
₹ 5,83,659 |
|
ஹேட்ச்பேக் | Steel Rims Gearbox
|
₹ 6,31,236 |
| வேரியண்ட்டுகள் | எக்ஸ்ஷோரூம் விலை |
|---|---|
|
ஹேட்ச்பேக் | Steel Rims Gearbox
|
₹ 5,74,351 |
|
ஹேட்ச்பேக் | Steel Rims Gearbox
|
₹ 6,42,505 |
| கியர்பாக்ஸ் | எரிபொருள் வகை | மைலேஜ் |
|---|---|---|
| Steel Rims | பெட்ரோல் | FWD |
| Steel Rims | சிஎன்ஜி | FWD |
இந்தியாவின் ஆரம்ப ரக ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் எஸ்யூவிகளுக்கு உரிய அம்சங்களுடன் வாடிக்கையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது ரெனோ க்விட் கார். பிஎஸ்-6 மாடலானது அதிக பிரிமீயம் அம்சங்களுடன் தொடர்ந்து மதிப்பை கூட்டிக் கொண்டு முக்கிய போட்டியாளராக இருந்து வருகிறது. குறைவான பட்ஜெட்டில் வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்புக்கும் மீறிய வசதிகள், சிறப்பம்சங்களுடன் இந்த கார் கிடைக்கிறது. ரெனோ க்விட் காரில் ஸ்பிளிட் ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், எல்இடி பகல்நேர விள்ககுகள், முப்பட்டைகள் கொண்ட பெரிய க்ரில் அமைப்பு, அலங்கார வண்ணத்துடன் ரியர் வியூ மிரர்கள், சி வடிவிலான எல்இடி டெயில் லைட்டுகளுடன் எஸ்யூவிக்கு தோரணையுடன் வசீகரிக்கிறது.
ரெனோ க்விட் காரின் பிஎஸ்-6 மாடலில் 800சிசி மற்றும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. இதில், 800சிசி பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 53 பிஎச்பி பவரையும், 72 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இதனுடன் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு கொடுக்கப்படுகிறது. 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரையும், 91 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இதனுடன் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன.
ரெனோ க்விட் காரின் 800சிசி மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 25 கிமீ வரை மைலேஜ் வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. 1.0 லிட்டர் பெட்ரோல் மேனுவல் மாடல் லிட்டருக்கு 21.74 கிமீ மைலேஜையும், ஏஎம்டி மாடல் லிட்டருக்கு 22 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. நடைமுறை பயன்பாட்டிலும் மிகச் சிறப்பான மைலேஜை இந்த கார் வழங்கும் என்று நம்பலாம்.
ரெனோ க்விட் காரில் எல்இடி பகல்நேர விளக்குகள் எல்இடி டெயில் லைட்டுகள், இன்டகிரேடேட் ஸ்பாய்லர், 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், ஏர்பேக்குகள், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா உள்ளிட்ட வசதிகளுடன் கிடைக்கிறது.
இந்தியாவில் பட்ஜெட் கார் மார்க்கெட்டில் அதிக வசீகரம் கொண்ட மாடலாக ரெனோ க்விட் பெயர் பெற்றுள்ளது. எஸ்யூவி கார்களுக்கு உரிய தோரணை மட்டுமின்றி, அதிக வசதிகளுடன் மிக சவாலான விலையில் அதிக மதிப்பு வாய்ந்த தேர்வாக இருந்து வருகிறது.
ஆர்எக்ஸ்இ, ஆர்எக்ஸ்எல்,ஆர்எக்ஸ்டி, ஆர்எக்ஸ்டி ஆப்ஷனல், க்ளைம்பர் உள்ளிட்ட பல வேரியண்ட்டுகளில் ரெனோ க்விட் கார் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications
