

Click it and Unblock the Notifications
மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.எஸ் கார் 6 வேரியண்ட்டுகளில் 5 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.எஸ் காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.எஸ் காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.எஸ் காரை முழு அளவு எஸ்யூவி ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.எஸ் கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.
| வேரியண்ட்டுகள் | எக்ஸ்ஷோரூம் விலை |
|---|---|
|
முழு அளவு எஸ்யூவி | Alloy Wheels Gearbox
|
₹ 1,47,76,066 |
|
முழு அளவு எஸ்யூவி | Alloy Wheels Gearbox
|
₹ 1,58,78,686 |
|
முழு அளவு எஸ்யூவி | Alloy Wheels Gearbox
|
₹ 1,62,23,255 |
| வேரியண்ட்டுகள் | எக்ஸ்ஷோரூம் விலை |
|---|---|
|
முழு அளவு எஸ்யூவி | Alloy Wheels Gearbox
|
₹ 1,57,53,011 |
|
முழு அளவு எஸ்யூவி | Alloy Wheels Gearbox
|
₹ 1,64,80,620 |
|
முழு அளவு எஸ்யூவி | Alloy Wheels Gearbox
|
₹ 1,68,32,688 |
| கியர்பாக்ஸ் | எரிபொருள் வகை | மைலேஜ் |
|---|---|---|
| Alloy Wheels | பெட்ரோல் | AWD |
| Alloy Wheels | டீசல் | AWD |
இந்திய சொகுசு கார் மார்க்கெட்டில் பெரிய வகை எஸ்யூவி கார் மாடல்களில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் எஸ்யூவி மிகச் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. பிரம்மாண்டத் தோற்றத்துடன் அதிநவீன அம்சங்கள், செயல்திறன் மிக்க எஞ்சின் தேர்வுகளுடன் இந்த எஸ்யூவி அசத்துகிறது. முகப்பில் முத்தாய்ப்பான மெர்சிடிஸ் பென்ஸ் லோகோவுடன் கூடிய க்ரில் அமைப்பு, மல்டிபீம் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லட்டுகளுடன் வசீகரிக்கிறது. இந்த கார் உருவத்திற்கு ஏற்ப அழகிய அலாய் வீல்கள், ரூஃப் ரெயில்கள் போன்றவற்றுடன் சொகுசு எஸ்யூவிக்கு உரிய அம்சங்களுடன் எல்லோரையும் கவர்கிறது.
புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் எஸ்யூவியானது முந்தைய மாடலைவிட நீளத்தில் 77 மிமீ வரையிலும், அகலத்தில் 22 மிமீ வரையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. வீல்பேஸ் நீளமும் 60 மிமீ கூடி இருக்கிறது. இதனால், முந்தைய மாடலைவிட இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசையில் இடவசதி சிறப்பாக மேம்பட்டுள்ளது.
புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் எஸ்யூவியில் 3.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 3.0 லிட்டர் டீசல் எஎஞ்சின் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 362 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 325 பிஎச்பி பவரையும், 700 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சின்களுடன் 9ஜி ட்ரோனிக் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் 4மேட்டிக் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் ஆகியவை கொடுக்கப்படுகிறது. பெட்ரோல் மாடலில் இக்யூ பூஸ் என்ற ஹைப்ரிட் தொழில்நுட்பமும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
புதிய மெர்சிடிஸ் பெனஸ் எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 10.1 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 12.5 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. நடைமுறை பயன்பாட்டில் இந்த மைலேஜ் அளவு சற்று குறையலாம்.
புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் எஸ்யூவியில் மல்டிபீம் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், எம்பியூஎக்ஸ் இயங்குதளம், 5 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், பர்ம்ஸ்டெர் ஆடியோ சிஸ்டம் என அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை பெற்றிருக்கிறது. இந்த காரில் 9 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், முன்புறம் மற்றும் பின்புறத்திற்கு பார்க்கிங் சென்சார்கள் என ஏராளமான பாதுகாப்பு அம்சங்களையும் பெற்றிருக்கிறது.
இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கான வரவேற்பு அதிகரித்து வருகிறது. ஒருமுழுமையான சொகுசு எஸ்யூவி காரை வாங்க விரும்புவோருக்கு மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் மிகச் சிறந்த சாய்ஸாக அமையும். தோற்றம், வசதிகள், இடவசதி, எஞ்சின் தேர்வுகள் என அனைத்திலும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும்.
பெட்ரோல், டீசல் மாடல்கள் அனைத்து வசதிகளுடன் தலா ஒரே ஒரு வேரியண்ட்டில் கிடைக்கிறது
7 பேர் பயணிக்கும் இருக்கை வசதியை பெற்றுள்ளது


Click it and Unblock the Notifications
