

Click it and Unblock the Notifications
கியா சோனெட் கார் 25 வேரியண்ட்டுகளில் 6 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. கியா சோனெட் காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். கியா சோனெட் காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். கியா சோனெட் காரை சப் காம்பாக்ட் எஸ்யூவி ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. கியா சோனெட் கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.
| வேரியண்ட்டுகள் | எக்ஸ்ஷோரூம் விலை |
|---|---|
|
சப் காம்பாக்ட் எஸ்யூவி | Steel Rims Gearbox
|
₹ 8,49,883 |
|
சப் காம்பாக்ட் எஸ்யூவி | Steel Rims Gearbox
|
₹ 8,97,476 |
|
சப் காம்பாக்ட் எஸ்யூவி | Steel Rims Gearbox
|
₹ 10,12,263 |
|
சப் காம்பாக்ட் எஸ்யூவி | Steel Rims Gearbox
|
₹ 10,49,905 |
|
சப் காம்பாக்ட் எஸ்யூவி | Alloy Wheels Gearbox
|
₹ 10,55,428 |
|
சப் காம்பாக்ட் எஸ்யூவி | Alloy Wheels Gearbox
|
₹ 11,08,554 |
|
சப் காம்பாக்ட் எஸ்யூவி | Steel Rims Gearbox
|
₹ 11,26,454 |
|
சப் காம்பாக்ட் எஸ்யூவி | Alloy Wheels Gearbox
|
₹ 11,95,681 |
|
சப் காம்பாக்ட் எஸ்யூவி | Alloy Wheels Gearbox
|
₹ 12,80,955 |
|
சப் காம்பாக்ட் எஸ்யூவி | Alloy Wheels Gearbox
|
₹ 13,73,164 |
|
சப் காம்பாக்ட் எஸ்யூவி | Alloy Wheels Gearbox
|
₹ 16,03,320 |
|
சப் காம்பாக்ட் எஸ்யூவி | Alloy Wheels Gearbox
|
₹ 16,07,900 |
|
சப் காம்பாக்ட் எஸ்யூவி | Alloy Wheels Gearbox
|
₹ 16,08,440 |
| வேரியண்ட்டுகள் | எக்ஸ்ஷோரூம் விலை |
|---|---|
|
சப் காம்பாக்ட் எஸ்யூவி | Steel Rims Gearbox
|
₹ 10,67,099 |
|
சப் காம்பாக்ட் எஸ்யூவி | Steel Rims Gearbox
|
₹ 11,50,713 |
|
சப் காம்பாக்ட் எஸ்யூவி | Steel Rims Gearbox
|
₹ 11,57,043 |
|
சப் காம்பாக்ட் எஸ்யூவி | Alloy Wheels Gearbox
|
₹ 12,63,830 |
|
சப் காம்பாக்ட் எஸ்யூவி | Steel Rims Gearbox
|
₹ 13,15,389 |
|
சப் காம்பாக்ட் எஸ்யூவி | Alloy Wheels Gearbox
|
₹ 13,28,750 |
|
சப் காம்பாக்ட் எஸ்யூவி | Alloy Wheels Gearbox
|
₹ 13,57,574 |
|
சப் காம்பாக்ட் எஸ்யூவி | Alloy Wheels Gearbox
|
₹ 13,81,480 |
|
சப் காம்பாக்ட் எஸ்யூவி | Alloy Wheels Gearbox
|
₹ 14,16,164 |
|
சப் காம்பாக்ட் எஸ்யூவி | Alloy Wheels Gearbox
|
₹ 14,74,053 |
|
சப் காம்பாக்ட் எஸ்யூவி | Alloy Wheels Gearbox
|
₹ 17,10,286 |
|
சப் காம்பாக்ட் எஸ்யூவி | Alloy Wheels Gearbox
|
₹ 17,22,004 |
| கியர்பாக்ஸ் | எரிபொருள் வகை | மைலேஜ் |
|---|---|---|
| Steel Rims | பெட்ரோல் | FWD |
| Steel Rims | டீசல் | FWD |
| Alloy Wheels | பெட்ரோல் | FWD |
| Alloy Wheels | டீசல் | FWD |
தென்கொரியாவை சேர்ந்த கியா மோட்டார் நிறுவனத்தின் மூன்றாவது மாடலாக சொனெட் எஸ்யூவி இந்தியாவில் களமிறக்கப்பட்டு இருக்கிறது. 4 மீட்டருக்குள் வடிவமைக்கப்படும் சப்-காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் சிறந்த மதிப்பை வழங்கும் அம்சங்களுடன் கியா சொனெட் கார் வந்துள்ளது. செல்டோஸ் எஸ்யூவியை போலவே மிக வலிமையான தோற்றம், சவாலான விலையில் கியா சொனெட் எஸ்யூவி நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது.
வெளிப்புற டிசைன்
கியா சொனெட் எஸ்யூவியின் முகப்பை பாரம்பரியமான புலி மூக்கு வடிவிலான க்ரில் அமைப்பு அதிக வசீகரத்தை தருகிறது. கருப்பு வண்ண வலையுடன் சிவப்பு வண்ண அலங்காரத்தில் க்ரில் அமைப்பு அழகுடன் காட்சி தருகிறது. க்ரில் அமைப்பின் இருமருங்கிலும் மெல்லிய எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள் சுண்டி இழுக்கின்றன அதனுள் இடம்பெற்றிருக்கும் எல்இடி பகல்வேளை விளக்குகள், சில்வர் வண்ண அங்கார பாகங்களுடன் கூடிய பம்பர் அமைப்பு, பெரிய ஏர்டேம் அமைப்பு என நவ நாகரீகமான எஸ்யூவி தோற்றத்துடன் மிக அழகாக இருக்கிறது.
பக்கவாட்டில் 16 அங்குல கிறிஸ்டல் கட் அலாய் வீல்கள், கருப்பு வண்ண கிளாடிங் சட்டங்கள், சில்வர் பூச்சுடன் கூடிய ரூஃப் ரெயில்கள், க்ரோம் கைப்பிடிகள் ஆகியவை சிறப்பு சேர்க்கின்றன. பின்புறத்தில் எல்இடி டெயில் லைட்டுகள், மெல்லிய பிரதிபலிப்பு பட்டை, கருப்பு வண்ண பம்பர், ஃபாக்ஸ் டிஃப்யூசர் அமைப்பு, இரட்டை மஃப்ளர் அமைப்புடன் கூடிய புகைப்போக்கி அமைப்பு ஆகியவை இந்த எஸ்யூவியின் டிசைனை வேற லெவலில் காட்டுகின்றன. மொத்தத்தில், பார்ப்போரை முதல் பார்வையிலேயே வசீகரிக்கும் அத்துனை அம்சங்களையும் இந்த கார் பெற்றிருக்கிறது.
உட்புற வடிவமைப்பு
வெளிப்புறத்தை போலவே உட்புறமும் மிகவும் பிரிமீயமான உணர்வை தரும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. சாஃப்ட் டச் பாகங்களுடன் கூடிய டேஷ்போர்டு, லெதரேட் எனப்படும் செயற்கை லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி, தரமான பிளாஸ்டிக் பாகங்களுடன் கூடிய இன்டீரியர் இதன் மதிப்பை உயர்த்துகிறது. 5 பேர் செல்வதற்கு போதுமான இடவசதியை வழங்கும்.
கியா சொனெட் எஸ்யூவியில் இரண்டு பெட்ரோல், ஒரு டீசல் என மூன்று விதமான எஞ்சின் தேர்வுகள் மற்றும் நான்கு விதமான கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. இதன் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 83 பிஎச்பி பவரையும், 115 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டும் கிடைக்கும். இரண்டாவதாக 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 120 பிஎச்பி பவரையும், 172 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஞ்சினுடன் 6 ஸ்பீடு ஐ-எம்டி கியர்பாக்ஸ் தேர்வும், 7 ஸ்பீடு டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வும் வழங்கப்படுகிறது.
இந்த எஸ்யூவியில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வு இரண்டு விதமான செயல்திறனை வழங்கும் வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இதன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வானது 100 பிஎச்பி பவரையும், 240 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் இருக்கிறது. இதன் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வானது 115 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் வழங்கப்படுகிறது.
கியா சொனெட் காரின் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் லிட்டருக்கு 18.4 கிமீ மைலேஜை வழங்கும். இதன் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் லிட்டருக்கு 18.2 கிமீ மைலேஜையும், டீசல் மேனுவல் மாடலானது லிட்டருக்கு 24.1 கிமீ மைலேஜையும், டீசல் ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 19 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று அராய் சான்று தெரிவிக்கிறது.
கியா சொனெட் காரில் ஏராளமான வசதிகள் வழங்கப்படுகின்றன. இந்த எஸ்யூவியில் 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் முக்கிய அம்சமாக இருக்கிறது. இதனுடன் யுவோ கனெக்டெட் கார் செயலி அதிசிறந்த தொழில்நுட்ப வசதிகளை வழங்கும். எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், 16 அங்குல அலாய் வீல்கள், வயர்லெஸ் சார்ஜர், ஸ்மார்ட் ஏர் பியூரிஃபயர், எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஸ்டார்ட் - ஸ்டாப் சிஸ்டம், கீ லெஸ் என்ட்ரி, க்ரூஸ் கன்ட்ரோல் என இந்த பட்டியல் நீள்கிறது.
பாதுகாப்பு அம்சங்கள்
பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரையில் 6 ஏர்பேக்குகள், இபிடியுன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மென்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, முன்புறத்திற்கும் பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
கியா சொனெட் துவஙக்கத்திலேயே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. டிசைன், வசதிகள், எஞ்சின் தேர்வுகள், விலை என அனைத்திலும் சிறந்த மதிப்பை வழங்கும் சப்-காம்பேக்ட் எஸ்யூவி மாடலாக வந்துள்ளது. இது நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
கியா சொனெட் காருக்கு மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், மஹிந்திரா எக்ஸ்யூவி300, டாடா நெக்ஸான் மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஆகிய மாடல்கள் நேரடி போட்டியாக இருக்கின்றன.
கியா சொனெட் கார் HTE, HTK, HTK+, HTX+ மற்றும் GTX+ ஆகிய வேரியண்ட்டுகளில் வழங்கப்படுகிறது.
கியா சொனெட் கார் 8 விதமான ஒற்றை வண்ணத் தேர்வுகளிலும், மூன்று விதமான இரட்டை வண்ணத் தேர்வுகளிலும் கிடைக்கிறது.
கியா சொனெட் காரின் டீசல் ஆட்டோமேட்டிக் தேர்வு சிறந்ததாக அமையும். அதேபோன்று, 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் ஐஎம்டி வேரியண்ட்டிற்கும் அதிக வரவேற்பு இருக்கிறது. அதேபோன்று, கியா சொனெட் காரின் அதிகபட்ச வசதிகளை அளிக்கும் ஜிடிஎக்ஸ் ப்ளஸ் வேரியண்ட்டை தேர்வு செய்வதும் சிறந்த மதிப்பை தரும்.
கியா சொனெட் எஸ்யூவியில் 392 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதி உள்ளது. இதன் ரகத்தில் அதிக பூட்ரூம் வசதியை அளிக்கும் கார் மாடலாகவும் உள்ளது.
கியா சொனெட் எஸ்யூவியை முன்பதிவு செய்வதற்கு ரூ.25,000 செலுத்த வேண்டும். கியா இணையதளம் மூலமாகவோ அல்லது நாடு முழுவதும் உள்ள கியா டீலர்கள் மூலமாகவோ முன்பதிவு செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications
