மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்இ கூபே

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்இ கூபே
Style: எஸ்யூவி
152.00 - 152.00 லட்சம்
ஜிஎஸ்டி எக்ஸ்ஷோரூம் விலை

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்இ கூபே கார் 1 வேரியண்ட்டுகளில் 7 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்இ கூபே காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்இ கூபே காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்இ கூபே காரை எஸ்யூவி ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்இ கூபே கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்இ கூபே பெட்ரோல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
எஸ்யூவி | Gearbox
1,52,00,000

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்இ கூபே விமர்சனம்

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்இ கூபே வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் தனித்துவமான சொகுசு ரக எஸ்யூவி மாடலாக ஏஎம்ஜி ஜிஎல்இ கூபே கார் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. 2020ம் ஆண்டு இறுதியில் முதல்முறையாக ஜிஎல்இ 53 என்ற ஸ்டான்டர்டு மாடலாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அடுத்த சில மாதங்களில் ஜிஎல்இ 53 மாடலுக்கு பதிலாக, அதன் அதிக சிறப்பம்சங்கள் கொண்ட இந்த ஏஎம்ஜி ஜிஎல்இ கூபே கார் இரண்டு சக்திவாய்ந்த எஞ்சின் தேர்வுகளுடன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் பின்புற கூரை அமைப்பு தாழ்ந்து சென்று கூபே ரக மாடலாக தனித்துவமாக தெரிகிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்இ கூபே எஸ்யூவியானது 4,961 மிமீ நீளமும், 2,935 மிமீ வீல்பேஸ் நீளமும் கொண்டதாக இருக்கிறது. இந்த காரில் ஏஎம்ஜி பிராண்டின் பிரத்யேக க்ரில் அமைப்பு, மல்டிபீம் எல்இடி ஹெட்லைட்டுகள், பூமராங் வடிவிலான பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், 21 அங்குல ஏஎம்ஜி பிராண்டு அலாய் வீல்கள் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. டெயில் கேட்டில் சிறிய ஸ்பாய்லரும் வழங்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாக இருக்கிறது. மொத்தத்தில் ஏஎம்ஜி பிராண்டில் வழங்கப்படும் இந்த கூபே ரக மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்யூவி தனித்துவத்துடன் கவர்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்இ கூபே எஞ்சின் மற்றும் செயல்திறன்

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்இ கூபே எஸ்யூவியின் 53 4 மேட்டிக் மாடலில் இருக்கும் 6 சிலிண்டர்கள் கொண்ட 3.0 லிட்டர் ட்வின் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 48V மைல்டு ஹைப்ரிட் சிஸ்டமும் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதனுடன் ஏஎம்ஜி பிராண்டின் ஸ்பீடுஷிஃப்ட் டிசிடி 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 429 பிஎச்பி பவரையும், 520 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

ஏஎம்ஜி ஜிஎல்இ கூபே 63 எஸ் மாடலில் இருக்கும் அதிக சக்திவாய்ந்த 8 சிலிண்டர்கள் கொண்ட 4.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வு வழங்கப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 603 பிஎச்பி பவரையும், 850 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் 4 மேட்டிக் ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் உள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்இ கூபே மைலேஜ்

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்இ கூபே காரில் இருக்கும் 3.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் லிட்டருக்கு 9.52 கிமீ மைலேஜ் வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. 4.0 லிட்டர் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 8.52 கிமீ மைலேஜை வழங்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், இந்த அதிசெயல்திறன் மிக்க கார் நடைமுறை பயன்பாட்டில் இதனை விட சற்று குறைவான மைலேஜை வழங்கும் என்று நம்பலாம்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்இ கூபே முக்கிய அம்சங்கள்

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்இ கூபே எஸ்யூவியில் இரட்டை வண்ண நப்பா லெதர் அப்ஹோல்ஸ்ட்ரியுடன் ஏஎம்ஜி பிராண்டின் ஸ்போர்ட்ஸ் இருக்கைகள், 12.3 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், எம்பியூஎக்ஸ் இயங்குதளம், 13 ஸ்பீக்கர்கள் கொண்ட பர்ம்ஸ்டெர் சவுண்ட் சிஸ்டம், 64 வண்ணங்களில் ஒளியை வழங்கும் ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர் உள்ளிட்ட வசதிகளை பெற்றுள்ளது.

தவிரவும், பனோரமிக் சன்ரூஃப், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, ஏஎம்ஜி பெர்ஃபார்மென்ஸ் ஸ்டீயரிங் வீல், ஆக்டிவ் பிரேக் அசிஸ்ட், ஏஎம்ஜி ஆக்டிவ் ரைடு கன்ட்ரோல் ப்ளஸ், அடாப்டிவ் பெர்பார்மென்ஸ் சஸ்பென்ஷன், சரவுண்ட் வியூ கேமராக்கள் என ஏராளமான பாதுகாப்பு அம்சங்களையும் இந்த கார் பெற்றிருக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்இ கூபே தீர்ப்பு

தனித்துவமான தோற்றத்துடன் சொகுசு எஸ்யூவி மாடலை வாங்க விரும்புவோருக்கு மிகச் சிறந்த தேர்வாக இருக்கும். மேலும், செயல்திறன் மிக்க எஞ்சின் மற்றும் அதிக தொழில்நுட்ப வசதிகளும் இந்த காருக்கு அதிக மதிப்பை சேர்க்கிறது.

வண்ணங்கள்


Polar White Metallic
Selenite Grey Metallic
Obsidian Black Metallic
Sodalite Blue Metallic
Alpine Grey
Opalite White Bright
Hi-Tech Silver

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்இ கூபே படங்கள்

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்இ கூபே Q & A

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்இ கூபே எஸ்யூவி எத்தனை வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது?

ஏஎம்ஜி ஜிஎல்இ கூபே 53 மற்றும் 63 எஸ் என்ற இரண்டு மாடல்களில் கிடைக்கிறது

Hide Answerkeyboard_arrow_down
மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்இ கூபே எஸ்யூவியில் டீசல் எஞ்சின் தேர்வு உள்ளதா?
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+