

Click it and Unblock the Notifications
டொயோட்டா கேம்ரி கார் 4 வேரியண்ட்டுகளில் 6 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. டொயோட்டா கேம்ரி காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். டொயோட்டா கேம்ரி காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். டொயோட்டா கேம்ரி காரை சேடன் ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. டொயோட்டா கேம்ரி கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.
| வேரியண்ட்டுகள் | எக்ஸ்ஷோரூம் விலை |
|---|---|
|
சேடன் | Alloy Wheels Gearbox
|
₹ 56,53,303 |
|
சேடன் | Alloy Wheels Gearbox
|
₹ 56,53,303 |
|
சேடன் | Alloy Wheels Gearbox
|
₹ 56,76,274 |
|
சேடன் | Alloy Wheels Gearbox
|
₹ 56,76,274 |
| கியர்பாக்ஸ் | எரிபொருள் வகை | மைலேஜ் |
|---|---|---|
| Alloy Wheels | ஹைபிரிட் | FWD |
பிரிமீயம் செடான் கார் மார்க்கெட்டில் டொயோட்டா கேம்ரி மிக முக்கிய தேர்வாக இருந்து வருகிறது. இந்தியாவில் 8வது தலைமுறை மாடலாக டொயோட்டா கேம்ரி விற்பனையில் உள்ளது. இந்த கார் டொயோட்டா நிறுவனத்தின் டிஎன்ஜிஏ கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஹைப்ரிட் மாடலாக விற்பனையில் வைக்கப்பட்டுள்ளது. டொயோட்டா கேம்ரி கார் மிகவும் நேர்த்தியான டிசைன் அம்சங்களுடன் மிகச் சிறப்பான வசீகரத்தை பெற்றுள்ளது. எல்இடி ஹெட்லைட்டுகள், பூமராங் வடிவிலான பகல்நேர விளக்குகள், 17 அங்குல மல்டி ஸ்போக் அலாய் வீல்கள், மெல்லிய டெயில் லைட்டுகளுடன் அசத்தலாக இருக்கிறது.
புதிய டொயோட்டா கேம்ரி காரில் 2.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஹைப்ரிட் நுட்பத்துடன் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 215 பிஎச்பி பவரையும், 221 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஞ்சினுடன் 6 ஸ்பீடு சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.
டொயோட்டா கேம்ரி கார் ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கிடைக்கிறது. இந்த கார் லிட்டருக்கு 23.27 கிமீ மைலேஜை வழங்கும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இது நிச்சயம் பிரிமீயம் செடான் கார் மார்க்கெட்டில் அதிக மைலேஜை வழங்கும் மாடலாக கருத முடியும்.
புதிய டொயோட்டா கேம்ரி காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், 17 அங்குல மல்டி ஸ்போக் அலாய் வீல்கள், கருப்பு வண்ண இன்டீரியர் தீம், ஜேபிஎல் மியூசிக் சிஸ்டம், 3 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜர், 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளன.
இந்த காரில் 10 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பல முக்கிய பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
பிரிமீயம் செடான் கார் மார்க்கெட்டில் அதிக இடவசதி, சிறந்த டிசைன் ஆகியவற்றுடன் கிடைக்கிறது. ஆனால், ஹைப்ரிட் தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றால் விலை அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், சொகுசு கார்களுக்கு இணையான விலையில் இருப்பது இந்த காரின் மிக முக்கிய பாதகமான விஷயமாக இருக்கிறது.
டொயோட்டா கேம்ரி கார் அனைத்து வசதிகளும் கொண்ட ஒரே வேரியண்ட்டில் மட்டும் கிடைக்கிறது


Click it and Unblock the Notifications
