ஹூண்டாய் அல்கஸார்

ஹூண்டாய் அல்கஸார்
Style:
16.30 - 20.15 லட்சம்
ஜிஎஸ்டி எக்ஸ்ஷோரூம் விலை

ஹூண்டாய் அல்கஸார் கார் 0 வேரியண்ட்டுகளில் 0 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. ஹூண்டாய் அல்கஸார் காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். ஹூண்டாய் அல்கஸார் காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். ஹூண்டாய் அல்கஸார் காரை ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. ஹூண்டாய் அல்கஸார் கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

ஹூண்டாய் அல்கஸார் விமர்சனம்

ஹூண்டாய் அல்கஸார் வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்

மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் புதிய 7 சீட்டர் மாடலாக புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி இருக்கிறது. டிசைன், வசதிகள், இடவசதி ஆகியவற்றில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இருக்கிறது. வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்த ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் 7 சீட்டர் மாடல் என்பதால், முகப்பில் க்ரெட்டாவை ஒத்திருக்கிறது.

அதேநேரத்தில், கூடுதல் சிறப்பம்சங்களுடன் கவரும் வகையில் உள்ளது. புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி 2,760 மிமீ வீல்பேஸ் நீளத்தை பெற்றுள்ளது. முதல் மற்றும் இரண்டாவது வரிசை இருக்கைகள் சிறப்பான இடவசதியை அளிப்பதாக உள்ளன. மூன்றாவது வரிசை இருக்கை சிறியவர்கள் அமர்வதற்கு ஏதுவான இடவசதியை அளிக்கிறது.

ஹூண்டாய் அல்கஸார் எஞ்சின் மற்றும் செயல்திறன்

புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. இதன் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 156 பிஎச்பி பவரையும், 191 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 1.5 லிட்டர் டீசல் எஞ்சினஅ அதிகபட்சமாக 113 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது.

ஹூண்டாய் அல்கஸார் மைலேஜ்

புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியின் பெட்ரோல் மேனுவல் மாடல் லிட்டருக்கு 14.5 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 14.2 கிமீ மைலேஜையும் வழங்கும். டீசல் மேனுவல் மாடல் லிட்டருக்கு 20.4 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 18.1 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

ஹூண்டாய் அல்கஸார் முக்கிய அம்சங்கள்

புதிய அல்கஸார் எஸ்யூவியில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயி் லைட்டுகள், பாடி கலர் ரியர் வியூ மிரர்கள், 18 அங்குல அலாய் வீல்கள், ரூஃப் ரெயில்கள், க்ரோம் வில்லைகள் பதிக்கப்பட்ட முன்புற க்ரில் அமைப்பு ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியில் 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும். புளூடூத் இணைப்பு வசதி, பானரோமிக் சன்ரூஃப், 360 டிகிரி கேமரா, வென்டிலேட்டட் முன்புற இருக்கைகள், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், டியூவல் டோன் இன்டீரியர் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.


புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியில் 6 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ரியர் டிஸ்க் பிரேக்குகள், ரியர் வியூ கேமரா, ரியர் டீஃபாகர், முன்புற, பின்புற பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்ட பல பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

ஹூண்டாய் அல்கஸார் தீர்ப்பு

டிசைன், வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள் என அனைத்திலும் சிறப்பானதாக இருக்கிறது. போட்டியாளர்களைவிட ஆரம்ப விலை சற்று கூடுதலாக இருப்பதுதான் இந்த காரை பெரிய அளவிலான வாடிக்கையாளர்கள் வட்டத்திற்கு செல்ல முடியாததற்கு காரணமாக அமையலாம்.

ஹூண்டாய் அல்கஸார் படங்கள்

ஹூண்டாய் அல்கஸார் Q & A

புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியில் எத்தனை வேரியண்ட் தேர்வுகள் உள்ளன?

பெட்ரோல், டீசல் மாடல்கள் பிரஸ்டீஜ், பிளாட்டினம் மற்றும் சிக்னேச்சர் ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.

Hide Answerkeyboard_arrow_down
புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியில் எத்தனை வண்ணத் தேர்வுகள் வழங்கப்படுகின்றன?

புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி ஃபான்டம் பிளாக், போலார் ஒயிட், ஸ்டாரி நைட், தைகா பிரவுன், டைட்டன் க்ரே, தைபூன் சில்வர் ஆகிய வண்ணத் தேர்வுகளிலும் போலார் ஒயிட் - பிளாக் மற்றும் டைட்டன் க்ரே மற்றும ஃபான்டம் பிளாக் என இரண்டு இரட்டை வண்ணத் தேர்வுகளிலும் கிடைக்கிறது.

Hide Answerkeyboard_arrow_down
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X