

Click it and Unblock the Notifications
மஹிந்திரா மராஸ்ஸோ கார் 6 வேரியண்ட்டுகளில் 4 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. மஹிந்திரா மராஸ்ஸோ காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். மஹிந்திரா மராஸ்ஸோ காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். மஹிந்திரா மராஸ்ஸோ காரை எம்.யு.வி ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. மஹிந்திரா மராஸ்ஸோ கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.
| வேரியண்ட்டுகள் | எக்ஸ்ஷோரூம் விலை |
|---|---|
|
எம்.யு.வி | Steel Rims Gearbox
|
₹ 16,73,961 |
|
எம்.யு.வி | Steel Rims Gearbox
|
₹ 16,73,961 |
|
எம்.யு.வி | Alloy Wheels Gearbox
|
₹ 18,20,803 |
|
எம்.யு.வி | Alloy Wheels Gearbox
|
₹ 18,30,060 |
|
எம்.யு.வி | Alloy Wheels Gearbox
|
₹ 19,40,561 |
|
எம்.யு.வி | Alloy Wheels Gearbox
|
₹ 19,49,819 |
| கியர்பாக்ஸ் | எரிபொருள் வகை | மைலேஜ் |
|---|---|---|
| Steel Rims | டீசல் | FWD |
| Alloy Wheels | டீசல் | FWD |
இந்திய சந்தையில் மிகச் சிறந்த 7 சீட்டர் எம்பிவி கார் மாடலாக மஹிந்திரா மராஸ்ஸோ நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. மஹிந்திரா நிறுவனத்தின் வட அமெரிக்கப் பிரிவு மற்றும் மஹிந்திரா கீழ் செயல்பட்டு வரும் இத்தாலியை சேர்ந்த பினின்ஃபரீனா நிறுவனத்தின் ஆலோசனைகளுடன் சென்னையிலுள்ள மஹிந்திரா கார் வடிவமைப்பு மையத்தில் இந்த கார் உருவாக்கப்பட்டது. சுறா மீனை மனதில் வைத்து இதன் டிசைன் அம்சங்கள் உருவாக்கப்பட்டதாக மஹிந்திரா தெரிவிக்கிறது. சுறா மீனின் கண்களை பிரதிபலிக்கும் ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், பற்களை பிரதிபலிக்கும் க்ரில் அமைப்பு என டிசைனில் மிகச் சிறப்பாக செதுக்கப்பட்டு இருக்கிறது. டெயில் லைட் க்ளஸ்ட்டர்கள் கூட சுறா மீனின் வால் பகுதியை நினைவூட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. மாருதி எர்டிகாவைவிட கூடுதல் இடவசதி, டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவைவிட விலை குறைவாக இருக்கும் வகையில் இந்த கார் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. இன்டீரியரும் சிறப்பான இடவசதியுடன் போதுமான வசதிகளுடன் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் உள்ளது.
மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காரில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வு வழங்கப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 121 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு மட்டுமே வழங்கப்படுகிறது. எதிர்காலத்தில் பெட்ரோல் எஞ்சின் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளிட்ட தேர்வுகளையும் மஹிந்திரா அறிமுகப்படுத்தும் என்று தொடர்ந்து தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆனால், அதிகாரப்பூர்வமாக இதுவரை எந்த தகவலும் இல்லை.
புதிய மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காரில் இருக்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அ்திகபட்சமாக 17.33 கிமீ மைலேஜை வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. நடைமுறை பயன்பாட்டிலும் மிகச் சிறந்த எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கலாம். நீண்ட தூர பயணங்களுக்கு மிகச் சிறந்த தேர்வாகவும் இருக்கிறது.
புதிய மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காரில் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ரூஃப் ஏசி சிஸ்டம், நடுவரிசை இருக்கைகளை சாய்த்துக் கொள்ள முடியும் என்பதுடன் முழுமையாக மடக்கி வைக்கும் வசதிகளை பெற்றிருக்கிறது.
இரண்டு ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், அனைத்து சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக்குகள், ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட், எஞ்சின் இம்மொபைலைசர் உள்ளிட்ட பல பாதுகாப்பு வசதிகளை இந்த கார் பெற்றிருக்கிறது.
டிசைன், வசதிகள், இடவசதி, விலை என அனைத்திலும் சிறந்த தேர்வாக மஹிந்திரா மராஸ்ஸோ இருக்கிறது. அதிக எரிபொருள் சிக்கனம், சரியான விலை போன்றவற்றால், போட்டியாளர்கள் மத்தியில் மதிப்பை வழங்கும் தேர்வாக கூறலாம். பெட்ரோல் எஞ்சின் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கினால் வாடிக்கையாளர்களுக்கு தேர்வு செய்ய மேலும் வாய்ப்புகள் கிடைக்கும்.
எம்2, எம்4 ப்ளஸ், எம்6 ப்ளஸ் ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது
7 சீட்டர் மற்றும் 7 சீட்டர் மாடல்களில் கிடைக்கிறது


Click it and Unblock the Notifications
