மஹிந்திரா பொலேரோ

மஹிந்திரா பொலேரோ
Style: எஸ்யூவி
₹10.16 - 11.91 லட்சம்
ஜிஎஸ்டி எக்ஸ்ஷோரூம் விலை

மஹிந்திரா பொலேரோ கார் 4 வேரியண்ட்டுகளில் 4 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. மஹிந்திரா பொலேரோ காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். மஹிந்திரா பொலேரோ காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். மஹிந்திரா பொலேரோ காரை எஸ்யூவி ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. மஹிந்திரா பொலேரோ கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

மஹிந்திரா பொலேரோ டீசல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
எஸ்யூவி | Steel Rims Gearbox
₹ 10,15,505
எஸ்யூவி | Steel Rims Gearbox
₹ 11,09,058
எஸ்யூவி | Steel Rims Gearbox
₹ 11,55,834
எஸ்யூவி | Diamond-Cut Alloy Wheels Gearbox
₹ 11,90,916

மஹிந்திரா பொலேரோ மைலேஜ்

கியர்பாக்ஸ் எரிபொருள் வகை மைலேஜ்
Steel Rims டீசல் RWD
Diamond-Cut Alloy Wheels டீசல் RWD

மஹிந்திரா பொலேரோ விமர்சனம்

மஹிந்திரா பொலேரோ வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்

இந்திய எஸ்யூவி மார்க்கெட்டில் அதிக விற்பனையாகும் மாடல்களில் மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது மஹிந்திரா பொலிரோ. மோசமான சாலைகள் உள்பட அனைத்து சாலைகளிலும் பயன்படுத்துவதர்கு ஏற்ற சிறந்த எஸ்யூவி வாடிக்கையாளர்களிடத்தில் பெயர் பெற்றுவிட்டது. பார்த்த உடனே ஒரு முரட்டுத்தனமான தோற்றத்துடன் எஸ்யூவி பிரியர்களை வசீகரிக்கிறது. எளிமையான க்ரில் அமைப்பு, தட்டையான பானட், ஹாலஜன் ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், பனி விளக்குகளுடன் கவர்கிறது. பக்கவாட்டிலும் கருப்பு வண்ண பாடி கிளாடிங் சட்டங்கள், பாடி கிராஃபிக்ஸ், பிந்புறத்தில் செங்குத்தான தோற்றத்தில் டெயில் லைட் க்ளஸ்ட்டர்களுடன் கவர்கிறது. முழுமையா ஸ்பேர் வீல் பின்புற கதவில் பொருத்தப்பட்டு இருக்கிறது. கேபினில் இருக்கைகள் அதிக இடவசதியுடன் இருக்கிறது.

மஹிந்திரா பொலேரோ எஞ்சின் மற்றும் செயல்திறன்

மஹிந்திரா பொலிரோ எஸ்யூவியின் பிஎஸ்-6 மாடலில் 1.5 லிட்டர் எம்-ஹாக்75 டீல் எஞ்சின் வழங்கப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 75 பிஎச்பி பவரையும், 210 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

மஹிந்திரா பொலேரோ மைலேஜ்

மஹிந்திரா பொலிரோ எஸ்யூவியின் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் லிட்டருக்கு 18 கிமீ மைலேஜ் வழங்கும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த எஸ்யூவியில் 60 லிட்டர் கொள்திறன் கொண்ட டீசல் டேங்க் வழங்கப்பட்டுள்ளது. நடைமுறை பயன்பாட்டிலும் சிறந்த எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் என்பதால் அடிக்கடி பெட்ரோல் நிலையம் செல்லும் அவசியத்தை தவிர்க்க முடியும்.

மஹிந்திரா பொலேரோ முக்கிய அம்சங்கள்

மஹிந்திரா பொலிரோ எஸ்யூவியில் க்ரோம் அலங்கார சட்டங்கள் கொண்ட முகப்பு க்ரில் அமைப்பு, ஹீட்டருடன் ஏசி சிஸ்டம், கீ லெஸ் என்ட்ரி, பாடி கலர் ரியர் வியூ மிரர்கள், பவர் ஸ்டீயரிங், ரியர் வைப்பர், பவர் விண்டோஸ், சென்ட்ரல் லாக்கிங், ரியர் வைப்பர்கள், வாஷர் உள்ளிட்ட பல அடிப்படை வசதிகளை பெற்றுள்ளது.

இந்த காரில் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், சீட் பெல்ட் ரிமைன்டர், எஞ்சின் இம்மொபைலைசர் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளும் உள்ளன.

மஹிந்திரா பொலேரோ தீர்ப்பு

அனைத்து சாலைகளிலும் அச்சப்படாமல் ஓட்டுவதற்கு சிறந்த எஸ்யூவி மாடலாகவும், மிக சரியான பட்ஜெட்டில் கிடைக்கும் மாடலாகவும் இருக்கிறது. மேலும், அதிக எரிபொருள் சிக்கனத்துடன், போதுமான வசதிகளுடன் நடைமுறை பயன்பாட்டில் மிகச் சிறந்த எஸ்யூவி மாடலாக குறிப்பிடலாம்.

வண்ணங்கள்


Dsat Silver
Diamond White
Stealth Black
Rocky Beige

டீசல் போட்டியாளர்கள்

மைலேஜ் ஒப்பீடு (டீசல்)

  • கியா சிரோஸ்
    கியா சிரோஸ்
    local_gas_station டீசல் | FWD
  • ஹூண்டாய் இடம்
    ஹூண்டாய் இடம்
    local_gas_station டீசல் | FWD

மஹிந்திரா பொலேரோ படங்கள்

மஹிந்திரா பொலேரோ Q & A

மஹிந்திரா பொலிரோ எத்தனை வேரியண்ட்டுகள் வழங்கப்படுகின்றன?

பி4, பி6 மற்றும் பி6 ஆப்ஷனல் ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது

Hide Answerkeyboard_arrow_down
மஹிந்திரா பொலிரோ எஸ்யூவியில் பெட்ரோல் எஞ்சின் தேர்வு உள்ளதா?
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out