மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்சி 43 கூபே

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்சி 43 கூபே
Style: எஸ்யூவி
99.86 - 99.86 லட்சம்
ஜிஎஸ்டி எக்ஸ்ஷோரூம் விலை

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்சி 43 கூபே கார் 1 வேரியண்ட்டுகளில் 9 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்சி 43 கூபே காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்சி 43 கூபே காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்சி 43 கூபே காரை எஸ்யூவி ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்சி 43 கூபே கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்சி 43 கூபே பெட்ரோல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
எஸ்யூவி | Gearbox
99,86,017

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்சி 43 கூபே விமர்சனம்

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்சி 43 கூபே வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி எஸ்யூவியின் அடிப்படையிலான கூபே மாடல் ஏஎம்ஜி பிராண்டு அம்சங்களுடன் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. 2020ம் ஆண்டு நவம்பரில் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படும் முதல் ஏஎம்ஜி பிராண்டு கார் என்ற பெருமையுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. முக்கிய உதிரிபாகங்களாக தருவிக்கப்பட்டு இந்த கூபே ரக எஸ்யூவி இந்தியாவில் அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த எஸ்யூவியின் தனித்துவம் என்றால், இதன் பின்புறம் தாழ்ந்த கூரை அமைப்புடன் கூபே வடிவமைப்பை பெற்றிருப்பதுதான்.

முன்புறத்தில் தனித்துவமான பான்அமெரிக்கா என்ற தாத்பரியத்திலான மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி பிராண்டின் பிரத்யேக க்ரில் அமைப்பு, எல்இடி ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், வலிமையான க்ரில் அமைப்பு போன்றவை அலங்கரிக்கின்றன. மேலும், 20 அங்குல ஏஎம்ஜி அலாய் சக்கரங்கள், புதிய எல்இடி டெயில் லைட் க்ளஸ்ட்டர்கள், 4 குழல்கள் கொண்ட ஏஎம்ஜி பிராண்டின் பிரத்யேக சைலென்சர் ஆகியவற்றுடன் அட்டகாசமாக காட்சி அளிக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்சி 43 கூபே எஞ்சின் மற்றும் செயல்திறன்

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்சி சி43 கூபே காரில் 3.0 லிட்டர் வி6 பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 385 பிஎச்பி பவரையும், 520 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் ஆகியவை கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 4.9 வினாடிகளில் எட்டிவிடும் திறன் வாய்ந்தது. அதிகபட்சமாக மணிக்கு 250 கிமீ வேகம் வரை தொடும் வல்லமை வாய்ந்ததாக மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவித்துள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்சி 43 கூபே மைலேஜ்

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்சி 43 கூபே காரில் இருக்கும் வி6 எஞ்சின் அதிகபட்சமாக 9.5 கிமீ மைலேஜை வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த பெர்ஃபார்மென்ஸ் கார் நடைமுறையில் சற்றே குறைவான மைலேஜை வழங்கும் வாய்ப்பு இருக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்சி 43 கூபே முக்கிய அம்சங்கள்

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜி43 கூபே காரில் எல்இடி ஹை பெர்ஃபார்மென்ஸ் ஹெட்லைட்டுகள், ஏஎம்ஜி பிராண்டு அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்டுகள், ஏஎம்ஜி பெர்ஃபார்மென்ஸ் சைலென்சர், தொடுதிரை மற்றும் எம்பியூஎக்ஸ் இயங்குதளத்துடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 12.3 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 5 விதமான டிரைவிங் மோடுகள் ஆகியவை முக்கிய அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், 7 ஏர்பேக்குகள், ஆக்டிவ் பிரேக்கிங் அசிஸ்ட், ஸ்போர்ட்ஸ் இருக்கைகள் உள்ளிட்ட பல முக்கிய பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்சி 43 கூபே தீர்ப்பு

இந்தியாவின் மிட்சைஸ் சொகுசு எஸ்யூவி மார்க்கெட்டில் தனித்துவமான கூபே அமைப்புடன் அதிக செயல்திறன் மிக்க எஞ்சின் தேர்வுடன் கிடைக்கும் மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்சி43 கூபே கார் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் தனித்துவமான தேர்வாக அமையும்.

வண்ணங்கள்


Obsidian Black
Polar White
Graphite Grey
Hi-Tech Silver
Spectral Blue
Patagonia Red Bright
Graphite Grey Magno
Hi-Tech Silver Magno
Opalite White Bright

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்சி 43 கூபே படங்கள்

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்சி 43 கூபே Q & A

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்சி சி43 எஸ்யூவி எத்தனை வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது?

அனைத்து வசதிகளும் கொண்ட ஒரே வேரியண்ட்டில் கிடைக்கிறது

Hide Answerkeyboard_arrow_down
மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்சி சி43 எஸ்யூவியில் டீசல் எஞ்சின் தேர்வு உள்ளதா?
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+