மெர்சிடிஸ் பென்ஸ் GLA

மெர்சிடிஸ் பென்ஸ் GLA
Style: எஸ்யூவி
59.84 - 65.16 லட்சம்
ஜிஎஸ்டி எக்ஸ்ஷோரூம் விலை

மெர்சிடிஸ் பென்ஸ் GLA கார் 3 வேரியண்ட்டுகளில் 5 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. மெர்சிடிஸ் பென்ஸ் GLA காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். மெர்சிடிஸ் பென்ஸ் GLA காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். மெர்சிடிஸ் பென்ஸ் GLA காரை எஸ்யூவி ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் GLA கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

மெர்சிடிஸ் பென்ஸ் GLA பெட்ரோல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
59,83,960

மெர்சிடிஸ் பென்ஸ் GLA டீசல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
62,80,834
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
65,15,546

மெர்சிடிஸ் பென்ஸ் GLA மைலேஜ்

கியர்பாக்ஸ் எரிபொருள் வகை மைலேஜ்
Alloy Wheels பெட்ரோல் FWD
Alloy Wheels டீசல் AWD

மெர்சிடிஸ் பென்ஸ் GLA விமர்சனம்

மெர்சிடிஸ் பென்ஸ் GLA வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ எஸ்யூவி கார் இந்தியாவின் ஆரம்ப ரக சொகுசு கார் மார்க்கெட்டில் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் தேர்வாக இருந்து வருகிறது. முந்தைய தலைமுறை மாடலைவிட பரிமாணத்தில் பெரிய கார் மாடலாகவும் மாறி இருக்கிறது.

முகப்பில் பென்ஸ் கார்களுக்கு உரிய முத்தாய்ப்பான பெரிய க்ரில் அமைப்பு, இருபுறத்திலும் அழகிய ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், கம்பீரத்தை கூட்டும் பம்பர் அமைப்புடன் முகப்பு வசீகரிக்கிறது.

பக்கவாட்டில் 18 அங்குல அலாய் வீல்கள், சதுர வடிவிலான வீல் ஆர்ச்சுகள் எஸ்யூவிக்கு உரிய அம்சத்தை தருகின்றன. பின்புறத்தில் மெல்லிய எல்இடி டெயில் லைட்டுகள், பிளாஸ்டிக் கிளாடிங் சட்டங்கள் ஆகியவை காருக்கு கம்பீரத்தை தருகின்றன. மொத்தத்தில் அனைவரையும் கவரும் வகையில் டிசைன் அமைந்துள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் GLA எஞ்சின் மற்றும் செயல்திறன்

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ எஸ்யூவியில் 1.3 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 161 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 7 ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 188 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 8 ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருப்பதுடன் 2 வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடலிலும் கிடைக்கிறது.


மெர்சிடிஸ் பென்ஸ் GLA மைலேஜ்

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 13.7 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 17.9 கிமீ மைலேஜ் வழங்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. ஓட்டும் முறை மற்றும் சீதோஷ்ண நிலைகளை பொறுத்து நடைமுறை பயன்பாட்டில் இந்த மைலேஜ் அளவு குறைய வாய்ப்பு இருக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் GLA முக்கிய அம்சங்கள்

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ எஸ்யூவியில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள் இடம்பெற்றுள்ளன. எம்பியூஎக்ஸ் சாஃப்ட்வேருடன் தொடுதிரை கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதி, வயர்லெஸ் சார்ஜர், டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல், பனோரமிக் சன்ரூஃப் உள்ளிட்ட வசதிகளையும் பெற்றுள்ளது.

இந்த காரில் 7 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், ஆக்டிவ் பிரேக் அசிஸ்ட் உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.


மெர்சிடிஸ் பென்ஸ் GLA தீர்ப்பு

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ எஸ்யூவி டிசைன், நவீன வசதிகள், செயல்திறன் மிக்க எஞ்சின் ஆகியவற்றுடன் மிகச் சரியான விலையில் கிடைக்கிறது. இதனால், ஆரம்ப ரக சொகுசு கார் மார்க்கெட்டில் மிகச் சிறந்த தேர்வாக வாடிக்கையாளர்களால் கருதப்படுகிறது. பிஎம்டபிள்யூ எக்ஸ்1, ஆடி க்யூ2 மற்றும் வால்வோ எக்ஸ்சி40 ஆகிய கார்களுடன் போட்டி போடுகிறது.


வண்ணங்கள்


Polar White
Mountain Grey
Cosmos Black
Iridium Silver
Spectral Blue

மெர்சிடிஸ் பென்ஸ் GLA படங்கள்

மெர்சிடிஸ் பென்ஸ் GLA Q & A

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ காரில் எத்தனை வேரியண்ட்டுகள் வழங்கப்படுகின்றன?

மூன்று வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது

Hide Answerkeyboard_arrow_down
மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ எஸ்யூவியில் 4 வீல் டிரைவ் ஆப்ஷன் வழங்கப்படுகிறதா?

டீசல் மாடலில் மட்டும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்படுகிறது

Hide Answerkeyboard_arrow_down
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out