ஹூண்டாய் I20

ஹூண்டாய் I20
Style: ஹேட்ச்பேக்
6.69 - 12.29 லட்சம்
ஜிஎஸ்டி எக்ஸ்ஷோரூம் விலை

ஹூண்டாய் i20 கார் 9 வேரியண்ட்டுகளில் 1 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. ஹூண்டாய் i20 காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். ஹூண்டாய் i20 காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். ஹூண்டாய் i20 காரை ஹேட்ச்பேக் ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. ஹூண்டாய் i20 கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

ஹூண்டாய் i20 பெட்ரோல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
ஹேட்ச்பேக் | Steel Rims Gearbox
6,69,282
ஹேட்ச்பேக் | Steel Rims Gearbox
7,70,172
ஹேட்ச்பேக் | Steel Rims Gearbox
7,98,174
ஹேட்ச்பேக் | Steel Rims Gearbox
8,87,050
ஹேட்ச்பேக் | Steel Rims Gearbox
9,49,264
ஹேட்ச்பேக் | Steel Rims Gearbox
9,59,226
ஹேட்ச்பேக் | Diamond-Cut Alloy Wheels Gearbox
9,85,235
ஹேட்ச்பேக் | Diamond-Cut Alloy Wheels Gearbox
10,44,449
ஹேட்ச்பேக் | Alloy Wheels Gearbox
12,28,601

ஹூண்டாய் I20 மைலேஜ்

கியர்பாக்ஸ் எரிபொருள் வகை மைலேஜ்
Steel Rims பெட்ரோல் FWD
Diamond-Cut Alloy Wheels பெட்ரோல் FWD
Alloy Wheels பெட்ரோல் FWD

ஹூண்டாய் I20 விமர்சனம்

ஹூண்டாய் I20 வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்

வடிவமைப்பிலும், வசதிகளிலும் மேம்படுத்தப்பட்ட புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 கார் அண்மையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. மூன்றாம் தலைமுறை மாடலாக வந்திருக்கும் இந்த புதிய ஐ20 கார் முந்தைய மாடல்களைவிட முற்றிலும் வேறுபட்ட தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. புதுமையான டிசைன் அம்சங்கள், கனெக்ட்டிவிட்டி வசதிகள் இந்த காருக்கு வலுசேர்க்கின்றன.

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் 'சென்சுவல் ஸ்போர்ட்டினெஸ்' என்ற புதிய டிசைன் கொள்கையின் கீழ் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. கூர்மையான டிசைன் அம்சங்களுடன் அதிக வசீகரமாக உள்ளது. எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், கார்னரிங் விளக்குகளுடன் அசத்துகிறது. புதிய ஹூண்டாய் ஐ20 காரில் புதிய பம்பர் அமைப்பு, புரொஜெக்டர் பனி விளக்குகள், பெரிய ஏர் இன்டேக் அமைப்பு, முன்புறத்தில் கருப்பு வண்ண ஸ்கர்ட் அமைப்பு ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

புதிய ஹூண்டாய் ஐ20 காரில் 16 அங்குல டியூவல் டோன் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஜன்னல் கண்ணாடிகளுக்கு கீழாக க்ரோம் பீடிங் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதேபோன்று, இரட்டை வண்ணத் தேர்வும் இந்த காருக்கு அழகு சேர்க்கிறது. பின்புறத்தில் Z வடிவிலான எல்இடி டெயில் லைட்டுகள் பொருத்தப்பட்டுல்ளன. டெயில் லைட் க்ளஸ்ட்டர்கள் இரண்டையும் க்ரோம் பீடிங் மூலமாக இணைத்தது போன்று டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. அழகுக்காக ஃபாக்ஸ் டிஃபியூசர் பொருத்தப்பட்டு இருக்கிறது. மொத்தத்தில் புதிய ஐ20 காரின் டிசைன் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் என்பதில் ஐயமில்லை.

ஹூண்டாய் I20 எஞ்சின் மற்றும் செயல்திறன்

புதிய ஹூண்டாய் ஐ20 காரில் மூன்று விதமான எஞ்சின் தேர்வுகள் வழங்கப்பட உள்ளன. இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கொடுக்கப்படுகிறது. மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் வரும் இந்த எஞ்சின் அதிகபட்சமாக 82 பிஎச்பி பவரையும், ஐவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் எஞ்சின் அதிகபட்சமாக 87 பிஎச்பி பவரையும் வழங்கும்.

இரண்டாவது தேர்வாக உள்ள 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 120 பிஎச்பி பவரையும், 172 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஞ்சினுடன் 6 ஸ்பீடு ஐஎம்டி அல்லது 7 ஸ்பீடு டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும். இந்த காரில் மூன்றாவது தேர்வாக 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 100 பிஎச்பி பவரையும், 240 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகிறது.

ஹூண்டாய் I20 மைலேஜ்

புதிய ஹூண்டாய் ஐ20 காரில் வழங்கப்படும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மேனுவல் மாடல் லிட்டருக்கு 20.35 கிமீ மைலேஜையும், ஐவிடி ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 19.65 கிமீ மைலேஜையும் வழங்கும். இதன் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 20.25 கிமீ மைலேஜை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டீசல் மாடல் லிட்டருக்கு 25.2 கிமீ மைலேஜை வழங்கும் என்றும் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

ஹூண்டாய் I20 முக்கிய அம்சங்கள்

புதிய ஹூண்டாய் ஐ20 காரில் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், 16 அங்குல டியூவல் டோன் அலாய் வீல்கள், எலெக்ட்ரிக் சன்ரூஃப், எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் ரியர் வியூ மிரர்கள் உள்ளன.

இந்த காரில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளன. இதன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் என்பதுடன் கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பத்துடன் வந்துள்ளது. போஸ் சர்ரவுண்ட் சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம் என இந்த பட்டியல் நீள்கிறது.

ஹூண்டாய் I20 தீர்ப்பு

புதிய ஹூண்டாய் ஐ20 கார் டிசைன், வசதிகள் என அனைத்திலும் வாடிக்கையாளர்களுக்கு நிச்சயம் பெரிய அளவில் நிறைவை தரும். மேலும், இந்திய மார்க்கெட்டில் சிறந்த பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மாடலுக்கு உரிய அனைத்து தகுதிகளையும் பெற்றிருக்கிறது. அதேநேரத்தில், இதன் விலை சற்றே அதிகமாக நிர்ணயிக்கப்பட்டு இருப்பது சற்றே ஏமாற்றம் தரும் விஷயமாக இருக்கிறது.

வண்ணங்கள்


Titanium Black

ஹூண்டாய் i20 படங்கள்

ஹூண்டாய் I20 Q & A

புதிய ஹூண்டாய் ஐ20 காரில் எத்தனை வேரியண்ட் தேர்வுகள் உள்ளன?

புதிய ஹூண்டாய் ஐ20 காரில் வசதிகள், எஞ்சின், கியர்பாக்ஸ் தேர்வை பொறுத்து மேக்னா, ஸ்போர்ட்ஸ், அஸ்ட்டா, அஸ்ட்டா ஆப்ஷனல் என நான்கு வேரியண்ட் தேர்வுகள் உள்ளன.

Hide Answerkeyboard_arrow_down
புதிய ஹூண்டாய் ஐ20 காரில் என்னென்ன வண்ணத் தேர்வுகள் உள்ளன?

புதிய ஹூண்டாய் ஐ20 காரில் தைபூன் சில்வர், டைட்டன் க்ரே, மெட்டாலிக் காப்பர், ஸ்டாரி நைட், ஃபியரி ரெட், போலார் ஒயிட் ஆகிய ஒற்றை வண்ணத் தேர்வுகளும், கருப்பு வண்ணக் கூரையுடன் சிவப்பு மற்றும் வெள்ளை வண்ணத் தேர்வுகளிலும் கிடைக்கும்.

Hide Answerkeyboard_arrow_down
புதிய ஹூண்டாய் ஐ20 காரின் முக்கிய போட்டியாளர்கள் எவை?

புதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு மாருதி பலேனோ, டொயோட்டா க்ளான்ஸா, ஃபோக்ஸ்வேகன் போலோ, ஹோண்டா ஜாஸ் மற்றும் டாடா அல்ட்ராஸ் கார்கள் நேரடி போட்டியாக உள்ளன.

Hide Answerkeyboard_arrow_down
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out