மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்ஏ35

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்ஏ35
Style: எஸ்யூவி
60.07 - 60.07 லட்சம்
ஜிஎஸ்டி எக்ஸ்ஷோரூம் விலை

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்ஏ35 கார் 1 வேரியண்ட்டுகளில் 6 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்ஏ35 காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்ஏ35 காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்ஏ35 காரை எஸ்யூவி ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்ஏ35 கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்ஏ35 பெட்ரோல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
எஸ்யூவி | Gearbox
60,06,981

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்ஏ35 விமர்சனம்

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்ஏ35 வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்

இந்திய சொகுசு கார் மார்க்கெட்டில் பெர்ஃபார்மென்ஸ் வகை மாடலாக மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ ஏ35 ஏஎம்ஜி எஸ்யூவி கார் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. சொகுசு காம்பேக்ட் ரக எஸ்யூவி மார்க்கெட்டில் அழகு, செயல்திறனுடன் அசத்தும் மாடலாக வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ எஸ்யூவியின் ஸ்டான்டர்டு மாடலின் அடிப்படையில் அதிக சிறப்பம்சங்கள் மற்றும் கூடுதல் செயல்திறன் மிக்க எஞ்சினுடன் இந்த ஏஎம்ஜி ஜிஎல்ஏ 35 எஸ்யூவி விற்பனையில் வைக்கப்பட்டுள்ளது.

சாதாரண ஜிஎல்ஏ எஸ்யூவியிலிருந்து வேறுபடுத்தும் வகையில் ஏஎம்ஜி பிராண்டின் விசேஷ க்ரில் அமைப்பு, பம்பர் அமைப்புடன் 19 அங்குல அலாய் வீல்களுடன் கிடைக்கிறது. சக்கரங்களில் கொடுக்கப்பட்டு இருக்கும் பிரேக் காலிபர்கள் மதிப்பையும், வசீகரத்தையும் கூட்டுகிறது. இந்த காம்பேக்ட் எஸ்யூவியின் பின்புறத்தில் கச்சிதமான எல்இடி டெயில் லைட்டுகள், வலிமையான பின்புற பம்பர், டிஃப்யூசர் அமைப்பு, இரட்டைக் குழல்கள் கொண்ட சைலென்சர் ஆகியவையும் வாடிக்கையாளர்களை வசியம் செய்யும் வகையில் இருக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்ஏ35 எஞ்சின் மற்றும் செயல்திறன்

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்ஏ 35 எஸ்யூவியில்ல இரட்டை டர்போசார்ஜர்கள் கொண்ட 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 302 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 8 ஸ்பீடு ஜி ட்ரோனிக் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது. 4மேட்டிக் ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் உள்ளது. இந்த எஸ்யூவி 0 - 100 கிமீ வேகத்தை 5.1 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்ஏ35 மைலேஜ்

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்ஏ 35 எஸ்யூவியின் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் லிட்டருக்கு 13.47 கிமீ மைலேஜை வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. ஓட்டுதல் முறை மற்றும் சீதோஷ்ண நிலையை பொறுத்து நடைமுறயைில் இந்த மைலேஜ் குறைய வாய்ப்பு இருக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்ஏ35 முக்கிய அம்சங்கள்

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்ஏ 35 பெர்ஃபார்மென்ஸ் எஸ்யூவியில் மல்டிபீம் எல்இடி ஹெ்லைட்டுகள், கருப்பு வண்ண இன்டீரியர், தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை ஒரே பலகை போன்று டேஷ்போர்டில் அமைக்கப்பட்டு இருக்கிறது. இது புதிய மெர்சிடிஸ் பென்ஸ் கார்களுக்கு உரிய தனித்துவமான விஷயமாக இருக்கிறது. ஸ்மார்ட்ஃபோனை இணைத்துக் கொள்ளும் வசதி, வயர்லெஸ் சார்ஜர், பர்ம்ஸ்டெர் ஆடியோ சிஸ்டம், கனெக்டெட் கார் செயலி ஆகியவையும் இதன் மதிப்பை கூட்டும் விஷயமாக இருக்கிறது. அடாப்டிவ் ரைடு கன்ட்ரோல் சிஸ்டமும் இதன் முக்கிய தொழில்நுட்ப அம்சமாக கூறலாம்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்ஏ35 தீர்ப்பு

இந்திய சொகுசு கார் மார்க்கெட்டில் செயல்திறன் மிக்க காம்பேக்ட் எஸ்யூவி காரை வாங்க விரும்புவோருக்கு மிகச் சிறந்த தேர்வாக மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்ஏ 35 எஸ்யூவியை கூறலாம். கவர்ச்சிகரமான டிசைன், வசதிகள், செயல்திறன் மிக்க எஞ்சினுடன் அனைத்து விதத்திலும் மதிப்பை அளிக்கிறது. ஏஎம்ஜி பிராண்டு அம்சங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிக நிறைவை தரும்.

வண்ணங்கள்


Cosmos Black
Mountain Grey
Denim Blue
Iridium Silver
Designo Patagonia Red
Polar White

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்ஏ35 படங்கள்

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்ஏ35 Q & A

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்ஏ 35 எஸ்யூவி எத்தனை வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது?

அனைத்து வசதிகளும் கொண்ட ஒரே வேரியண்ட்டில் கிடைக்கிறது

Hide Answerkeyboard_arrow_down
மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்ஏ 35 எஸ்யூவியில் எத்தனை பேர் பயணிக்கலாம்?

இந்த எஸ்யூவியில் 5 பேர் பயணிக்கலாம்

Hide Answerkeyboard_arrow_down
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+