பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே

பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே
Style: செடான்
43.90 - 46.90 லட்சம்
ஜிஎஸ்டி எக்ஸ்ஷோரூம் விலை

பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே கார் 4 வேரியண்ட்டுகளில் 6 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே காரை செடான் ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே பெட்ரோல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
செடான் | Gearbox
43,89,974
செடான் | Gearbox
45,89,974
செடான் | Gearbox
46,00,000

பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே டீசல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
செடான் | Gearbox
46,89,908

பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே மைலேஜ்

கியர்பாக்ஸ் எரிபொருள் வகை மைலேஜ்
Manual பெட்ரோல் 14.82
Manual டீசல் 18.64

பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே விமர்சனம்

பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்

இந்தியாவின் ஆரம்பர சொகுசு செடான் கார் மார்க்கெட்டில் மிக சிறந்த தேர்வுகளில் ஒன்றாக பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே கார் வரவேற்பை பெற்றிருக்கிறது. பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எஸ்யூவி உருவாக்கப்பட்ட அதே பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கார் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் செடான் காரைவிட விலை குறைவான கொண்ட தேர்வாக வந்துள்ளது. பாரம்பரிய கிட்னி க்ரில் அமைப்பு, அழகிய ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், 18 அங்குல டியூவல் டோன் அலாய் வீல்கள் சிறப்பு சேர்க்கின்றன. இதன் கூரை பின்புறம் சற்று தாழ்ந்து கூபே ரக காராக தோற்றமளிக்கிறது. இதனை பார்ப்பதற்கு சிறிய 8 சீரிஸ் கார் போலவும் இருக்கிறது.

பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே எஞ்சின் மற்றும் செயல்திறன்

புதிய பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே காரில் பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகள் உள்ளன. இதன் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 189 பிஎச்பி பவரையும், 280 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதன் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 189 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. மணிக்கு 233 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது.

பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே மைலேஜ்

பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே காரின் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 14.82 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 18.64 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. நடைமுறை பயன்பாட்டில் இந்த மைலேஜ் அளவு சற்று குறைய வாய்ப்பு இருக்கிறது. இருந்தாலும் செயல்திறன் மிக்க இந்த காருக்கு இது சிறப்பான எரிபொருள் சிக்கனமாகவே கருத முடியும்.

பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே முக்கிய அம்சங்கள்

பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே காரில் 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே செயலியை சப்போர்ட் செய்யும் வசதி, பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜர், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே உள்ளிட்ட பல அம்சங்களை பெற்றுள்ளது.

பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே காரில் 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் டிஃபரன்ஷியல் லாக் கன்ட்ரோல், பிரேக் அசிஸ்ட் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டைனமிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு வசதிகளை பெற்றுள்ளது.

பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே தீர்ப்பு

புதிய பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே கார் ஆரம்ப ரக சொகுசு செடான் காரை வாங்க விரும்புவோருக்கு தனித்துவமான தேர்வாக இருக்கும். அத்துடன் சிறந்த வசதிகள், செயல்திறன் மிக்க எஞ்சின் தேர்வுடன் இந்த கார் தனது மதிப்பை கூட்டி இருக்கிறது. மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் செடான் மற்றும் ஆடி ஏ3 கார்களுக்கு போட்டியாக இருக்கிறது.

வண்ணங்கள்


Snapper Rocks Blue Metallic
Black Sapphire Metallic
Misano Blue Metallic
Storm Bay
Melbourne Red Metallic
Apine White Non Metallic

பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே படங்கள்

பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே Q & A

பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே கார் எத்தனை வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது?

4 வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது

Hide Answerkeyboard_arrow_down
பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே காரில் எத்தனை பேர் பயணிக்கலாம்?

5 பேர் பயணிக்கலாம்

Hide Answerkeyboard_arrow_down
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X