பிஎம்டபிள்யூ எக்ஸ்1

பிஎம்டபிள்யூ எக்ஸ்1
Style: எஸ்யூவி
50.90 - 52.90 லட்சம்
ஜிஎஸ்டி எக்ஸ்ஷோரூம் விலை

பிஎம்டபிள்யூ எக்ஸ்1 கார் 2 வேரியண்ட்டுகளில் 5 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. பிஎம்டபிள்யூ எக்ஸ்1 காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். பிஎம்டபிள்யூ எக்ஸ்1 காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். பிஎம்டபிள்யூ எக்ஸ்1 காரை எஸ்யூவி ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. பிஎம்டபிள்யூ எக்ஸ்1 கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

பிஎம்டபிள்யூ எக்ஸ்1 பெட்ரோல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
எஸ்யூவி | Gearbox
50,89,851

பிஎம்டபிள்யூ எக்ஸ்1 டீசல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
எஸ்யூவி | Gearbox
52,89,867

பிஎம்டபிள்யூ எக்ஸ்1 விமர்சனம்

பிஎம்டபிள்யூ எக்ஸ்1 வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்

சொகுசு எஸ்யூவி மார்க்கெட்டில் ஆரம்ப ரக மாடலாக பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எஸ்யூவி நிலைநிறுத்தப்பட்டுள்ளது. பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் பாரம்பரிய டிசைன் அம்சங்களுடன் செயல்திறன் மிக்க மாடலாக தனித்துவம் பெறுகிறது. பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எக்ஸ் வரிசை எஸ்யூவி மாடல்களில் இதுதான் ஆரம்ப விலை கொண்ட மாடல் என்பதால் வாடிக்கையாளர்களிடம் அதிக வரவேற்பை பெற்ற மாடலாகவும் உள்ளது. பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் பாரம்பரியமான க்ரில் அமைப்பு, அழகிய ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், கவர்ச்சியான பம்பர் அமைப்பு ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. 17 அங்குல அலாய் வீல்கள் மற்றும் ஆப்ஷனலாக 18 அங்குல அலாய் வீல்களுடன் கிடைக்கிறது. கச்சிதமான டெயில் லைட்டுகள், நேர்த்தியான பம்பர் அமைப்புடன் ஒட்டுமொத்த தோற்றத்தில் பிஎம்டபிள்யூவின் க்ராஸ்ஓவர் டிசைன் கைவண்ணத்துடன் தனித்துவமாக இருக்கிறது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எஞ்சின் மற்றும் செயல்திறன்

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எஸ்யூவியில் பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. இதில் வழங்கப்படும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 189 பிஎச்பி பவரையும், 280 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. டீசல் மாடலில் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்1 மைலேஜ்

பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 14.82 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 19.62 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. நடைமுறை பயன்பாட்டின்போது இந்த மைலேஜ் அளவு சற்று குறைய வாய்ப்பு இருக்கிறது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்1 முக்கிய அம்சங்கள்

பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எஸ்யூவியில் செயற்கை லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி, மல்டி இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே, அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், வேரியண்ட்டை பொறுத்து 6.5 அங்குலம், 8.8 அங்குலம் மற்றும் 10.25 அங்குல அளவுகளில் தொடுதிரை கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 7 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹைஃபை சவுண்ட் சிஸ்டம், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜர ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த காரில் 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம், டைனமிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், கார்னரிங் பிரேக் கன்ட்ரோல், ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் ஆங்கர்கள், அட்டென்டிவ் அட்டென்ஷன் அசிஸ்ட் என பல பாதுகாப்பு அம்சங்களை பெற்றிருக்கிறது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்1 தீர்ப்பு

டிசைன், செயல்திறன் மிக்க எஞ்சின் தேர்வுகளுடன் மிகச் சிறந்த ஆரம்ப ரக சொகுசு எஸ்யூவியாக பிஎம்டபிள்யூ எக்ஸ்1 பெயர் பெற்றுள்ளது. ஆடி க்யூ2, மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ மற்றும் வால்வோ எக்ஸ்சி40 ஆகிய கார்களுடன் போட்டி போடுகிறது. விரைவில் மூன்றாவது தலைமுறை அம்சங்களுடன் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எஸ்யூவி உலக அளவில் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

வண்ணங்கள்


Alpine White
Black Sapphire Metallic
M Portimao Blue Metallic
Storm Bay Metallic
Space Silver Metallic

பிஎம்டபிள்யூ எக்ஸ்1 படங்கள்

பிஎம்டபிள்யூ எக்ஸ்1 Q & A

பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எஸ்யூவி எத்தனை வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது?

மூன்று பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் எஞ்சின் வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது

Hide Answerkeyboard_arrow_down
பிஎம்டபிள்யூ எக்ஸ் 1 எஸ்யூவியில் எத்தனை பேர் செல்லலாம்?

5 பேர் பயணிக்கும் வசதியை பெற்றுள்ளது

Hide Answerkeyboard_arrow_down
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+