மெர்சிடிஸ் பென்ஸ் இ- கிளாஸ்

மெர்சிடிஸ் பென்ஸ் இ- கிளாஸ்
Style: செடான்
80.00 - 93.50 லட்சம்
ஜிஎஸ்டி எக்ஸ்ஷோரூம் விலை

மெர்சிடிஸ் பென்ஸ் இ- கிளாஸ் கார் 3 வேரியண்ட்டுகளில் 6 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. மெர்சிடிஸ் பென்ஸ் இ- கிளாஸ் காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். மெர்சிடிஸ் பென்ஸ் இ- கிளாஸ் காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். மெர்சிடிஸ் பென்ஸ் இ- கிளாஸ் காரை செடான் ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் இ- கிளாஸ் கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

மெர்சிடிஸ் பென்ஸ் இ- கிளாஸ் ஹைபிரிட் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
செடான் | Gearbox
79,99,903
செடான் | Gearbox
81,99,896
செடான் | Gearbox
93,49,881

மெர்சிடிஸ் பென்ஸ் இ- கிளாஸ் விமர்சனம்

மெர்சிடிஸ் பென்ஸ் இ- கிளாஸ் வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்

இந்தியர்கள் அதிகம் விரும்பும் சொகுசு கார் மாடலாக மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் செடான் கார் நீண்ட காலமாக சந்தையில் இருந்து வருகிறது. சொகுசு கார் பிரியர்கள் எதிர்பார்க்கும் இடவசதி, தொழில்நுட்ப அம்சங்களுடன் மிகச் சிறந்த தேர்வாக தொடர்ந்து தக்க வைத்து வருகிறது. அவ்வப்போது கூடுதல் சிறப்பம்சங்களுடன் வரும் இந்த கார் தற்போது 2021 மாடலாக விற்பனையில் உள்ளது.

அதிக இடவசதியுடன் பிரம்மாண்டமான இந்த கார் 5 மீட்டருக்கும் அதிக நீளத்துடன் இருப்பதுடன், இதன் எக்ஸ்டென்டட் வீல்பேஸ் மாடலானது ,3079 மிமீ வீல்பேஸ் நீளம் கொண்டதும் குறிப்பிடத்தக்கது. மிகச் சிறந்த இடவசதியை வழங்கும் இந்த காரில் முகப்பில் அசத்தலான க்ரில் அமைப்பும், பம்பர் அமைப்பும் வசீகரிக்கிறது. எல்இடி ஹெட்லைட்டுகளுடன் பகல்நேர விளக்குகள் சேர்ந்து சிறப்பான தோற்றத்தை வழங்குகிறது. பின்புறத்தில் அழகிய டெயில் லைட்டுகள், நேர்த்தியான பூட்ரூம் அமைப்புடன் கவர்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் இ- கிளாஸ் எஞ்சின் மற்றும் செயல்திறன்

மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 194 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். டீசல் மாடல் 192 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 9 ஜி டிரோனிக் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் ஏஎம்ஜி பிராண்டில் அதிக செயல்திறன் மிக்க தேர்விலும் கிடைக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் இ- கிளாஸ் மைலேஜ்

மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் காரின் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 15.0 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 16.1 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆனால், இந்த பிரமாண்ட கார் நடைமுறை பயன்பாட்டில் இதனை விட சற்றே குறைவான மைலேஜை வழங்கும்.

மெர்சிடிஸ் பென்ஸ் இ- கிளாஸ் முக்கிய அம்சங்கள்

2021 மாடலாக விற்பனையில் வைக்கப்பட்டுள்ள புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் ஃபேஸ்லிஃப்ட் காரில் எல்இடி லைட்டுகள், பனோரமிக் சன்ரூஃப், 3 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல், சாய்மான வசதியுடன் பின் இருக்கைகள், 12.3 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரமென்ட் க்ளஸ்ட்டர், தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர்கள், 360 டிகிரி கேமராவுடன் பார்க்கிங் பைலட் தொழில்நுட்ப வசதி, 590W பர்ம்ஸ்டெர் சவுண்ட் சிஸ்டம் ஆகியவை உள்ளன. இந்த காரில் 7 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், அட்டென்ஷன் அசிஸ்ட், ஆக்டிவ் பிரேக் அசிஸ்ட் ஆகியவையும் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

மெர்சிடிஸ் பென்ஸ் இ- கிளாஸ் தீர்ப்பு

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் கார் இடவசதி, டிசைன், வசதிகள், பாதுகாப்பு அம்சங்களில் சிறந்த தேர்வாக இருப்பதுடன் இந்தியர்களிடம் அதிக நம்பகத்தன்மையும், மதிப்பையும் பெற்ற மாடலாக இருந்து வருகிறது. அதிகம் விற்பனை செய்யப்பட்ட சொகுசு கார் மாடலாகவும் பெயர் பெற்றுள்ளது. இந்த கார் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ், வால்வோ எஸ்90, ஜாகுவார் எக்ஸ்எஃப் மற்றும் ஆடி ஏ6 ஆகிய சொகுசு கார்களுக்கு போட்டியை தருகிறது.

வண்ணங்கள்


High Tech Silver
Graphite Grey
Obsidian Black
Polar White
Nautic Blue
Verde Silver

மெர்சிடிஸ் பென்ஸ் இ- கிளாஸ் படங்கள்

மெர்சிடிஸ் பென்ஸ் இ- கிளாஸ் Q & A

மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் கார் எத்தனை வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது?

எக்ஸ்ப்ரெஸ்ஸென், எக்ஸ்க்ளூசிவ் ஆகிய வேரியண்ட்டுகலில் கிடைக்கிறது.

Hide Answerkeyboard_arrow_down
மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் கார் ஏஎம்ஜி வேரியண்ட் இந்தியாவில் கிடைக்கிறதா?

அதிக சிறப்பம்சங்கள், செயல்திறன் மிக்க எஞ்சினுடன் ஏஎம்ஜி பிராண்டிலும் கிடைக்கிறது

Hide Answerkeyboard_arrow_down
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+