ஹோண்டா அமேஸ்

ஹோண்டா அமேஸ்
Style: செடான்
7.18 - 9.94 லட்சம்
ஜிஎஸ்டி எக்ஸ்ஷோரூம் விலை

ஹோண்டா அமேஸ் கார் 7 வேரியண்ட்டுகளில் 2 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. ஹோண்டா அமேஸ் காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். ஹோண்டா அமேஸ் காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். ஹோண்டா அமேஸ் காரை செடான் ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. ஹோண்டா அமேஸ் கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

ஹோண்டா அமேஸ் பெட்ரோல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
செடான் | Gearbox
7,18,408
செடான் | Gearbox
7,86,208
செடான் | Gearbox
8,76,008
செடான் | Gearbox
8,97,408
செடான் | Gearbox
9,12,376
செடான் | Gearbox
9,79,408
செடான் | Gearbox
9,94,376

ஹோண்டா அமேஸ் மைலேஜ்

கியர்பாக்ஸ் எரிபொருள் வகை மைலேஜ்
Manual பெட்ரோல் 18.3

ஹோண்டா அமேஸ் விமர்சனம்

ஹோண்டா அமேஸ் வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்

2021 மாடல் ஹோண்டா அமேஸ் கார் வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் சில கூடுதல் சிறப்பு அம்சங்களுடன் மேலும் பிரிமீயம் மாடலாக மெருகேறி இருக்கிறது. எல்இடி விளக்குகளுடன் புரொஜெக்டர் ஹெட்லைட் யூனிட்டுகள், பகல்நேர விளக்குகள், டெயில் லைட்டுகள் உள்ளன. 15 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. க்ரில் அ்மைப்பு முப்பட்டை கொண்டதாக மாறி இருக்கிறது. பம்பர்களில் லேசான டிசைன் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பின்புற பம்பரில் க்ரோம் அலங்கார பட்டையும் பொருத்தப்பட்டு இருக்கிறது. மொத்தத்தில் மிகவும் பிரிமீயமான தோற்றம் கொண்ட காம்பேக்ட் செடான் காராக மெருகேறி உள்ளது.

ஹோண்டா அமேஸ் எஞ்சின் மற்றும் செயல்திறன்

புதிய ஹோண்டா அமேஸ் கார் பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. இதில் உள்ள 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 88 பிஎச்பி பவரையும், 110 என்எம் டார்க்கையும் வழங்கும். டீசல் மாடலில் உள்ள 1.5 லிட்டர் எஞ்சின் மேனுவல் மாடல் 98.6 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க்கையும் வழங்கும். டீசல் சிவிடி ஆட்டோமேட்டிக் மாடல் அதிகபட்சமாக 78.9 பிஎச்பி பவரையும், 160 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இரண்டு எஞ்சின்களுமே வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக நம்பகத்தன்மையை பெற்றுள்ளன. செயல்திறனிலும் சிறப்பானதாக கூறலாம்.

ஹோண்டா அமேஸ் மைலேஜ்

பெட்ரோல் எஞ்சினுடன் இணைக்கப்பட்ட மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் மாடல்கள் லிட்டருக்கு 18 கிமீ மைலேஜையும், டீசல் மேனுவல் மாடல் லிட்டருக்கு 24 கிமீ மைலேஜையும், டீசல் சிவிடி மாடல் லிட்டருக்கு 21 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. நடைமுறை பயன்பாட்டில் மைலேஜ் அளவு இதனைவிட சற்று குறைவாக இருக்கும்.

ஹோண்டா அமேஸ் முக்கிய அம்சங்கள்

எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி பனி விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், 15 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், அனலாக் டயல்கள் மற்றும் மல்டி இன்ஃபர்மேஷன் திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

புதிய ஹோண்டா அமேஸ் காரில் இரண்டு ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரியர் வியூ பார்க்கிங் கேமரா உள்ளிட்ட பல பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன.

ஹோண்டா அமேஸ் தீர்ப்பு

காம்பேக்ட் செடான் கார் மார்க்கெட்டில் மிகச் சிறந்த டிசைன், வசதிகள் கொண்டதாக ஹோண்டா அமேஸ் கார் தொடர்ந்து இருந்து வருகிறது. தற்போது கூடுதல் சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால், அதிக பிரிமீயம் அம்சங்கள் கொண்ட காம்பேக்ட் செடான் காரை வாங்க விரும்புவோருக்கு சிறந்த தேர்வாக அமையும்.

வண்ணங்கள்


Lunar Silver Metallic
Platinum White Pearl

ஹோண்டா அமேஸ் படங்கள்

ஹோண்டா அமேஸ் Q & A

புதிய ஹோண்டா அமேஸ் காரில் எத்தனை வேரியண்ட்டுகள் வழங்கப்படுகின்றன?

புதிய ஹோண்டா அமேஸ் காரில் E, S மற்றும் VX என மூன்று வேரியண்ட்டுகள் வழங்கப்படுகின்றன

Hide Answerkeyboard_arrow_down
புதிய ஹோண்டா அமேஸ் காரில் எத்தனை வண்ணத் தேர்வுகள் உள்ளன?

மெட்டிராய்டு க்ரே மெட்டாலிக், ரேடியண்ட் ரெட், பிளாட்டினம் ஒயிட் பியர்ல், லூனார் சில்வர் மெட்டாலிக் மற்றும் கோல்டன் பிரவுன் மெட்டாலிக் என 5 வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது.

Hide Answerkeyboard_arrow_down
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X