எம்ஜி Gloster

எம்ஜி Gloster
Style: எஸ்யூவி
29.98 - 37.28 லட்சம்
ஜிஎஸ்டி எக்ஸ்ஷோரூம் விலை

எம்ஜி Gloster கார் 6 வேரியண்ட்டுகளில் 4 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. எம்ஜி Gloster காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். எம்ஜி Gloster காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். எம்ஜி Gloster காரை எஸ்யூவி ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. எம்ஜி Gloster கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

எம்ஜி Gloster டீசல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
எஸ்யூவி | Gearbox
29,98,123
எஸ்யூவி | Gearbox
32,36,977
எஸ்யூவி | Gearbox
35,76,580
எஸ்யூவி | Gearbox
35,76,750
எஸ்யூவி | Gearbox
37,26,693
எஸ்யூவி | Gearbox
37,28,000

எம்ஜி Gloster மைலேஜ்

கியர்பாக்ஸ் எரிபொருள் வகை மைலேஜ்
Manual டீசல் 12.35

எம்ஜி Gloster விமர்சனம்

எம்ஜி Gloster Exterior And Interior Design

எம்ஜி Gloster வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்

இந்திய பிரிமீயம் எஸ்யூவி மார்க்கெட்டில் க்ளோஸ்ட்டர் என்ற புதிய எஸ்யூவி மாடலை எம்ஜி மோட்டார் களமிறக்கி உள்ளது. அதிநவீன தொழில்நுட்ப அம்சங்கள், பிரம்மாண்டத் தோற்றத்துடன் இந்த புதிய எஸ்யூவி இந்தியர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

புதிய எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவியில் மூன்று பட்டைகள் மற்றும் எம்ஜி லோகோ கொண்ட கம்பீரமான க்ரில் அமைப்பு இடம்பெற்றுள்ளது. இருபுறத்திலும் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள் வசீகரிக்கின்றன. இந்த எஸ்யூவியின் பம்பரில் பனி விளக்குகள் மற்றும் கீழ்பாகத்தில் சில்வர் வண்ண பூச்சுடன் ஸ்கிட் பிளேட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய க்ளோஸ்ட்டர் எஸ்யூவியில் 19 அங்குல மல்டி ஸ்போக் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. பெரிய ஜன்னல்கள், ஜன்னல்களை சுற்றிலும் க்ரோம் பீடிங் அலங்காரம். சில்வர் வண்ண ரூஃப் ரெயில்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. எல்இடி டெயில் லைட்டுகள், பின்புற கதவில் க்ளோஸ்ட்டர் எழுத்துக்கள் பதிக்கப்பட்டு இருப்பதுடன் நான்கு குழல்கள் கொண்ட சைலென்சர் அமைப்பு இடம்பெற்றுள்ளது. பின்புறத்திலும் ஸ்கிட் பிளேட், பிரதிபலிப்பு பட்டை ஆகியவை இடம்பெற்றுள்ளன.

உட்புறத்தில் மிகவும் பிரிமீயமாக காட்சி தருகிறது. இந்த காரின் உட்புறத்தில் பல இடங்களில் லெதர் அப்ஹோல்ஸ்ட்ரியுடன் உள்ளது. மேலும், சாஃப்ட் டச் பிளாஸ்டிக் பாகங்களுடன் உன்னதமான உணர்வை தருகிறது. முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஐ-ஸ்மார்ட் கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பம் ஆகியவையும் உள்ளது. முக்கிய அம்சமாக, இந்த காரில் 7 பயணிகளுக்கும் போதுமான இடவசதி சிறப்பாக உள்ளது.

எம்ஜி Gloster எஞ்சின் மற்றும் செயல்திறன்

எம்ஜி Gloster Engine And Performance

புதிய எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவியில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. பேஸ் வேரியண்ட்டுகளில் இந்த எஞ்சின் அதிகபட்சமாக 160 பிஎச்பி பவரையும், 375 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

டாப் வேரியண்ட்டுகளில் இதே எஞ்சின் 216 பிஎச்பி பவரையும், 480 என்எம் டார்க் திறனை வழங்கும் திறன் கொண்டதா இருக்கிறது. இரண்டிலுமே 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

எம்ஜி Gloster மைலேஜ்

எம்ஜி Gloster Fuel Efficiency

புதிய எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவியில் 75 லிட்டர் கொள்திறன் கொண்ட எரிபொருள் கலன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த எஸ்யூவியின் டீசல் எஞ்சின் மைலேஜ் விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. எனினும், நடைமுறையில் லிட்டருக்கு 8 கிமீ முதல் 14 கிமீ மைலேஜை வழங்கும் என எதிர்பார்க்கலாம்.

எம்ஜி Gloster முக்கிய அம்சங்கள்

எம்ஜி Gloster Important Features

புதிய எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவியில் லெவல் 1 நிலையிலான தானியங்கி கார் தொழில்நுட்பம் உள்ளது. அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் மூலமாக இந்த கார் நெடுஞ்சாலைகளில் ஓட்டுனர் ஆசுவாசமாக ஓட்டுவதற்கான வாய்ப்பை வழங்கும். இரண்டாவது வரிசையில் கேப்டன் இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜர், க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், வென்டிலேட்டட் இருக்கைகள், பனரோமிக் சன்ரூஃப் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. பாதுகாப்பு அம்சங்களிலும் மிகச் சிறப்பானதாக இருக்கிறது.

எம்ஜி Gloster தீர்ப்பு

எம்ஜி Gloster Verdict

புதிய எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவி மிகவும் பிரம்மாண்டமான தோற்றத்தை பெற்றிருக்கிறது. சிறப்பான தொழில்நுட்ப வசதிகள், சக்திவாய்ந்த எஞ்சின், அதிக பாதுகாப்பு தொழில்நுட்பங்களுடன் மிக சரியான விலையில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், இந்த பிரிமீயம் எஸ்யூவி கொடுக்கும் பணத்திற்கு மதிப்புவாய்ந்த தேர்வாக இருக்கிறது.

வண்ணங்கள்


Metal Black
Agate Red
Metal Ash
Warm White

எம்ஜி Gloster படங்கள்

எம்ஜி Gloster Q & A

புதிய எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவி எத்தனை வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது?

புதிய எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவி சூப்பர், ஸ்மார்ட், ஷார்ப் மற்றும் சாவி ஆகிய நான்கு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.

Hide Answerkeyboard_arrow_down
புதிய எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவியில் என்னென்ன வண்ணத் தேர்வுகள் உள்ளன?

புதிய எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவியில் அகேட் ரெட், மெட்டல் பிளாக், மெட்டல் ஆஷ் மற்றும் வார்ம் ஒயிட் ஆகிய வண்ணத் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

Hide Answerkeyboard_arrow_down
புதிய எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவியின் போட்டியாளர்கள் எவை?

புதிய எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவிக்கு மஹிந்திரா அல்டுராஸ் ஜி4, டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் ஃபோர்டு எண்டெவர் ஆகிய எஸ்யூவி மாடல்கள் போட்டியாக இருக்கின்றன.

Hide Answerkeyboard_arrow_down
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X