மஹிந்திரா பொலிரோ நியோ

மஹிந்திரா பொலிரோ நியோ
Style: எஸ்யூவி
8.48 - 10.69 லட்சம்
ஜிஎஸ்டி எக்ஸ்ஷோரூம் விலை

மஹிந்திரா பொலிரோ நியோ கார் 4 வேரியண்ட்டுகளில் 5 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. மஹிந்திரா பொலிரோ நியோ காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். மஹிந்திரா பொலிரோ நியோ காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். மஹிந்திரா பொலிரோ நியோ காரை எஸ்யூவி ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. மஹிந்திரா பொலிரோ நியோ கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

மஹிந்திரா பொலிரோ நியோ டீசல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
எஸ்யூவி | Gearbox
8,48,001
எஸ்யூவி | Gearbox
9,48,000
எஸ்யூவி | Gearbox
9,99,901
எஸ்யூவி | Gearbox
10,69,000

மஹிந்திரா பொலிரோ நியோ மைலேஜ்

கியர்பாக்ஸ் எரிபொருள் வகை மைலேஜ்
Manual டீசல் 17.29

மஹிந்திரா பொலிரோ நியோ விமர்சனம்

மஹிந்திரா பொலிரோ நியோ வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்

மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடலானது பொலிரோ நியோ என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. பழைய மாடலில் இருந்து பல்வேறு மாற்றங்களுடன் கூடுதல் சிறப்பம்சங்களுடன் இந்த புதிய மாடல் மேம்படுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த பொலிரோ பெயரை தாங்கி வந்தாலும், பொலிரோ டிசைனிற்கும் இதற்கும் சம்பந்தம் அதிகம் இல்லை. இந்த எஸ்யூவி வழக்கம்போல் மிரட்டலான தோற்றத்துடன் காட்சி அளிக்கிறது. அலாய் வீல்கள், ஸ்பாய்லர், டெயில்கேட் கைப்பிடி ஆகியவை புதிய டிசைனுக்கு மாறி இருக்கின்றன.

மஹிந்திரா பொலிரோ நியோ எஞ்சின் மற்றும் செயல்திறன்


புதிய மஹிந்திரா பொலிரோ நியோ எஸ்யூவியில் பிஎஸ்-6 தரத்திற்கு இணையான 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 100 பிஎச்பி பவரையும், 260 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது. இந்த எஸ்யூவி ரியர் வீல் டிரைவ் கொண்டது என்பது முக்கிய அம்சமாக இருக்கிறது. அத்துடன், மல்டி டெர்ரெயின் டெக்னாலஜி என்ற தொழில்நுட்ப வசதியும் இருக்கிறது. இது டாப் வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கிறது.

மஹிந்திரா பொலிரோ நியோ மைலேஜ்

மஹிந்திரா பொலிரோ நியோ எஸ்யூவியின் டீசல் எஞ்சின் லிட்டருக்கு 17.29 கிமீ மைலேஜை வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. நடைமுறை பயன்பாட்டில் இந்த மைலேஜ் சற்று குறையலாம்.

மஹிந்திரா பொலிரோ நியோ முக்கிய அம்சங்கள்

உட்புறத்தில் இன்டீரியர் பாகங்களின் தரம் மேம்படுத்தப்பட்டுள்ளது. 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதி முக்கிய அம்சங்களாக உள்ளன. ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், பின் இருக்கையில் ஆர்ம்ரெஸ்ட் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. இந்த எஸ்யூவியில் 7 பேர் பயணிப்பதற்கு வசதியாக பின்புறத்தில் இரண்டு ஜம்ப் இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

மஹிந்திரா பொலிரோ நியோ தீர்ப்பு


புதிய மஹிந்திரா பொலிரோ நியோ எஸ்யூவி தோற்றம், மைலேஜ், விலை என அனைத்திலும் நிறைவை தரும். கியா சொனெட், டாடா நெக்ஸான், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருந்தாலும், இது தனித்துவமான வாடிக்கையாளர் வட்டத்தை கவரும் சிறப்பம்சங்களை பெற்றுள்ளது.

வண்ணங்கள்


Napoli Black
Rocky Beige
Majestic Silver
Highway Red
Pearl White

மஹிந்திரா பொலிரோ நியோ படங்கள்

மஹிந்திரா பொலிரோ நியோ Q & A

மஹிந்திரா பொலிரோ நியோ எத்தனை வேரியண்ட்டுகள் வழங்கப்படுகின்றன?

என்4, என்8, என்10 மற்றும் என்10 ப்ளஸ் ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது

Hide Answerkeyboard_arrow_down
மஹிந்திரா பாெலிரோ நியோ எஸ்யூவியில் பெட்ரோல் எஞ்சின் தேர்வு உள்ளதா?
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X