மாருதி சுஸுகி எஸ்-பிரஸ்ஸோ

மாருதி சுஸுகி எஸ்-பிரஸ்ஸோ
Style: ஹேட்ச்பேக்
4.15 - 5.64 லட்சம்
ஜிஎஸ்டி எக்ஸ்ஷோரூம் விலை

மாருதி சுஸுகி எஸ்-பிரஸ்ஸோ கார் 5 வேரியண்ட்டுகளில் 6 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. மாருதி சுஸுகி எஸ்-பிரஸ்ஸோ காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். மாருதி சுஸுகி எஸ்-பிரஸ்ஸோ காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். மாருதி சுஸுகி எஸ்-பிரஸ்ஸோ காரை ஹேட்ச்பேக் ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. மாருதி சுஸுகி எஸ்-பிரஸ்ஸோ கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

மாருதி சுஸுகி எஸ்-பிரஸ்ஸோ பெட்ரோல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
ஹேட்ச்பேக் | Gearbox
4,14,504
ஹேட்ச்பேக் | Gearbox
4,48,615
ஹேட்ச்பேக் | Gearbox
5,06,088
ஹேட்ச்பேக் | Gearbox
5,63,561

மாருதி சுஸுகி எஸ்-பிரஸ்ஸோ சிஎன்ஜி மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
ஹேட்ச்பேக் | Gearbox
5,28,460

மாருதி சுஸுகி எஸ்-பிரஸ்ஸோ விமர்சனம்

மாருதி சுஸுகி எஸ்-பிரஸ்ஸோ வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்

மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார் இந்தியாவின் பட்ஜெட் கார் மார்க்கெட்டில் விலை குறைவான தனித்துவமான தேர்வாக வந்துள்ளது. ஆல்ட்டோ கே10 காரைவிட சற்றே கூடுதல் விலையில் மினி எஸ்யூவி போன்ற டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார் எஸ்யூவி ரக கார்களை போல, அதிக உயரமும், சதுர வடிவிலான டிசைன் அமைப்புகளுடன் தனித்துவமான பட்ஜெட் கார் மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. உயர்த்தப்பட்ட பானட் அமைப்பு, சதுர வடிவிலான ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், வலிமையான தோற்றத்தை தரும் முன்புற க்ரில் அமைப்பு மற்றும் பம்பருடன் அசத்துகிறது. இந்த காரில் பகல்நேர விளக்குகள் மற்றும் பெரிய அளவிலான ஏர் இன்டேக் பாகமும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

பக்கவாட்டிலும் மிக எளிமையான அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட எஸ்யூவி மாடலாக தோற்றமளிக்கிறது. இந்த காரின் விலை குறைவான வேரியண்ட்டுகளில் 13 ஸ்டீல் சக்கரங்களுக்கும், விலை உயர்ந்த வேரியண்ட்டுகளில் 14 அங்குல ஸ்டீல் வீல்களும் உள்ளன. பக்கவாட்டில் பிளாஸ்டிக் கிளாடிங் சட்டங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. பின்புறத்தில் சி வடிவிலான டெயில் லைட் க்ளஸ்ட்டர்களும், பம்பரில் ரிஃப்ளெக்டர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. பின்புறத்தில் பம்பர் மிக வலிமையான தோற்றத்தை தருகிறது.

இன்டீரியர்

பட்ஜெட் கார் மாடலாக இருந்தாலும், புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் பல நவீன தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த காரில் 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. ஆப்பிள் கார் ப்ளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும். இந்த காரின் சென்ட்ரோல் கன்சோல் பகுதியிலேயே டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க விஷயம். சென்ட்ரல் கன்சோல் மற்றும் ஏசி வென்ட்டுகளில் ஆரஞ்ச் வண்ண அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

மாருதி சுஸுகி எஸ்-பிரஸ்ஸோ எஞ்சின் மற்றும் செயல்திறன்

புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில்மூன்று சிலிண்டர்கள் கொண்ட 1.0 லிட்டர் பிஎஸ்-6 பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 68 பிஎச்பி பவரையும், 90 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி வகை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது.

மாருதி சுஸுகி எஸ்-பிரஸ்ஸோ மைலேஜ்

புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் பெட்ரோல் மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 21.4 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 21.7 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மாருதி சுஸுகி எஸ்-பிரஸ்ஸோ முக்கிய அம்சங்கள்

மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் கியர் ஷிஃப்ட் இண்டிகேட்டர், கீ லெஸ் என்ட்ரி வசதி, ரூஃப் ஆன்டெனா, ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், நிகழ்நேர எரிபொருள் செலவு விபரத்தை தெரிந்து கொள்ளும் வசதிகள் இடம்பெற்றுள்ளன.

மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், இம்மொபைலைசர், சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம், பாதசாரிகளுக்கான பாதுகாப்பு அம்சத்தை வழங்கும் பெடஸ்ட்ரியன் புரொடெக்ஷன், அதிவேகத்தை எச்சரிக்கும் வசதி, சீட் பெல்ட் ரிமைன்டர் வசதி, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்ட பல பாதுகாப்பு அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த கார் புதிய க்ராஷ் டெஸ்ட் விதிகளுக்கு இணையான கட்டமைப்பு தரத்தை பெற்றிருக்கிறது.

மாருதி சுஸுகி எஸ்-பிரஸ்ஸோ தீர்ப்பு

மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார் நவீன டிசைன், சிறப்பான செயல்திறன், அதிக எரிபொருள் சிக்கனம் உள்ளிட்டவற்றுடன் விலை குறைவான சிறந்த பட்ஜெட் கார் மாடலாக வந்துள்ளது. புதிதாக பட்ஜெட் கார் வாங்குவோருக்கு சிறந்த தேர்வாக அமையும். இதில், ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வும் வழங்கப்படுவது கூடுதல் சிறப்பாக கூறலாம்.

வண்ணங்கள்


Solid Fire Red
Solid Sizzle Orange
Pearl Starry Blue
Metallic Granite Grey
Metallic Silky Silver
Solid White

மாருதி சுஸுகி எஸ்-பிரஸ்ஸோ படங்கள்

மாருதி சுஸுகி எஸ்-பிரஸ்ஸோ Q & A

மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் போட்டியாளர்கள் எவை?

மாருதி எஸ் பிரெஸ்ஸோ காருக்கு ரெனோ க்விட் மற்றும் டட்சன் ரெடி கோ கார்கள் போட்டியாக கருதலாம்.

Hide Answerkeyboard_arrow_down
மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார் என்னென்ன வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது?

மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார் என்னென்ன வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது?

Hide Answerkeyboard_arrow_down
மாருதி எஸ் பிரெஸ்ஸோ காருக்கான முன்பதிவு கட்டணம் எவ்வளவு?

மாருதி எஸ் பிரெஸ்ஸோ காருக்கு ரூ.11,000 முன்பதிவு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Hide Answerkeyboard_arrow_down
மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் டெலிவிரி துவங்கிவிட்டதா?

மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார் ஏற்கனவே டீலர்களுக்கு வந்துவிட்டன. இந்த காரின் டெலிவிரி மிக விரைவில் துவங்கப்பட இருக்கிறது.

Hide Answerkeyboard_arrow_down
மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதா?

ஆம். மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானது.

Hide Answerkeyboard_arrow_down
மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் சிஎன்ஜி எரிபொருள் தேர்வு உள்ளதா?

மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார் தற்போது பெட்ரோல் எரிபொருள் தேர்வில் மட்டுமே வழங்கப்படுகிறது. விரைவில் சிஎன்ஜி எரிபொருள் தேர்வும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Hide Answerkeyboard_arrow_down
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+