ஃபோர்ஸ் கூர்க்கா

ஃபோர்ஸ் கூர்க்கா
Style: எஸ்யூவி
19.62 - 21.16 லட்சம்
ஜிஎஸ்டி எக்ஸ்ஷோரூம் விலை

ஃபோர்ஸ் கூர்க்கா கார் 2 வேரியண்ட்டுகளில் 4 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. ஃபோர்ஸ் கூர்க்கா காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். ஃபோர்ஸ் கூர்க்கா காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். ஃபோர்ஸ் கூர்க்கா காரை எஸ்யூவி ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. ஃபோர்ஸ் கூர்க்கா கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

ஃபோர்ஸ் கூர்க்கா டீசல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
19,61,928
எஸ்யூவி | Alloy Wheels Gearbox
21,16,467

ஃபோர்ஸ் கூர்க்கா மைலேஜ்

கியர்பாக்ஸ் எரிபொருள் வகை மைலேஜ்
Alloy Wheels டீசல் 4WD

ஃபோர்ஸ் கூர்க்கா விமர்சனம்

ஃபோர்ஸ் கூர்க்கா வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்

இந்தியாவின் ஆஃப்ரோடு எஸ்யூவி மார்க்கெட்டில் மிகச் சிறந்த தேர்வாக ஃபோர்ஸ் குர்கா இருந்து வருகிறது. தற்போது புதிய தலைமுறை மாடலாக மாறி இருக்கும் ஃபோர்ஸ் குர்கா, வசதிகளிலும், வடிவமைப்பிலும் நவீன யுகத்திற்கு மாறி இருக்கிறது. புதிய ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவியில் எல்இடி ஹெட்லைட்டுகள், வட்ட வடிவிலான எல்இடி பகல்வேளை விளக்குகள், ஃபென்டரில் இண்டிகேட்டர்கள், 16 அங்குல அலாய் சக்கரங்கள், கருப்பு வண்ண ரியர் வியூ மிரர்கள், இழுவை கொக்கி, ரூஃப் ரேக், செங்குத்தான டெயில் லைட்டுகள் ஆகியவை இந்த எஸ்யூவிக்கு முரட்டுத்தனமான தோற்றத்தை பெற்றுத் தருகிறது. பின்புற கதவில் ஸ்பேர் வீல் பொருத்தப்பட்டு இருக்கிறது.

ஃபோர்ஸ் கூர்க்கா எஞ்சின் மற்றும் செயல்திறன்


புதிய ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவியில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 2.6 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 91 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. 4 வீல் டிரைவ் சிஸ்டமும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. லோ ரேஷியோ டிரான்ஸ்ஃபர் கேஸ் மற்றும் முன்புற, பின்புற ஆக்சில்களுக்கு லாக்கிங் டிஃபரன்ஷியல் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த கார் 700 மிமீ ஆழமுடைய நீர் நிலைகளை கடக்கும் திறன் வாய்ந்தது.

ஃபோர்ஸ் கூர்க்கா மைலேஜ்

புதிய ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவியின் மைலேஜ் விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. ஆனால், லிட்டருக்கு 10 முதல் 12 கிமீ மைலேஜ் வரை தரும் என்று நம்பலாம்.

ஃபோர்ஸ் கூர்க்கா முக்கிய அம்சங்கள்


புதிய ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவியில் 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதி, 4 கேப்டன் இரு்ககைகள், பவர் விண்டோஸ், ஏசி சிஸ்டம், கருப்பு வண்ண இன்டீரியர், டில்ட் மற்றும் டெலிஸ்கோப்பிக் ஸ்டீயரிங் வீல் ஆகியவை உள்ளன.

இந்த ஆஃப்ரோடு பயன்பாட்டுக்கான எஸ்யூவியில் டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார்கள், சீட் பெல்ட் ரிமைன்டர், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் உள்ளிட்ட பல பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

ஃபோர்ஸ் கூர்க்கா தீர்ப்பு

ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி இந்தியாவின் ஆரம்ப ரக ஆஃப்ரோடு பயன்பாட்டு எஸ்யூவி மார்க்கெட்டில் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. தற்போது நவீன யுக வசதிகளுடன் சேர்ந்து வாடிக்கையாளர்களை கவரும் அம்சங்களுடன் வந்துள்ளது. மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு மாற்றுத் தேடுபவர்களுக்கு சரியான தேர்வாக அமையும்.

வண்ணங்கள்


White
Green
Red
Black

ஃபோர்ஸ் கூர்க்கா படங்கள்

ஃபோர்ஸ் கூர்க்கா Q & A

ஃபோர்ஸ் குர்கா காரில் எத்தனை வேரியண்ட்டுகள் வழங்கப்படுகின்றன?

அனைத்து வசதிகளும் கொண்ட ஒரே வேரியண்ட்டில் கிடைக்கிறது

Hide Answerkeyboard_arrow_down
ஃபோர்ஸ் குர்கா காரில் பெட்ரோல் எஞ்சின் தேர்வு உள்ளதா?
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out