டொயோட்டா க்ளான்ஸா

டொயோட்டா க்ளான்ஸா
Style: ஹேட்ச்பேக்
7.49 - 9.44 லட்சம்
ஜிஎஸ்டி எக்ஸ்ஷோரூம் விலை

டொயோட்டா க்ளான்ஸா கார் 5 வேரியண்ட்டுகளில் 5 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. டொயோட்டா க்ளான்ஸா காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். டொயோட்டா க்ளான்ஸா காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். டொயோட்டா க்ளான்ஸா காரை ஹேட்ச்பேக் ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. டொயோட்டா க்ளான்ஸா கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

டொயோட்டா க்ளான்ஸா பெட்ரோல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
ஹேட்ச்பேக் | Gearbox
7,48,503
ஹேட்ச்பேக் | Gearbox
8,12,923
ஹேட்ச்பேக் | Gearbox
8,24,288
ஹேட்ச்பேக் | Gearbox
8,68,534
ஹேட்ச்பேக் | Gearbox
9,44,402

டொயோட்டா க்ளான்ஸா மைலேஜ்

கியர்பாக்ஸ் எரிபொருள் வகை மைலேஜ்
Manual பெட்ரோல் 19.56

டொயோட்டா க்ளான்ஸா விமர்சனம்

டொயோட்டா க்ளான்ஸா Exterior And Interior Design

டொயோட்டா க்ளான்ஸா வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்

மாருதி பலேனோ காரின் ரீபேட்ஜ் மாடலாக உருவாக்கப்பட்ட டொயோட்டா க்ளான்ஸா ஹேட்ச்பேக் சந்தையில் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. மாருதி பலேனோ காரில் இருந்து பெரிய அளவிலான டிசைன் மாற்றங்கள் இல்லை. எனினும், சில சிறிய மாற்றங்களுடன் வேறுபடுத்தப்பட்டு இருக்கிறது. க்ரோம் அலங்கார அம்சங்களுடன் புதிய இரட்டை பட்டை க்ரில் அமைப்பு, புதிய பம்பர் டிசைனுடன் டொயோட்டா குடும்பத்திற்கு மாறி இருக்கிறது. எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், டைமண்ட் கட் அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்டுகளுடன் வசீகரிக்கிறது. மாருதி பலேனோ காரைவிட அதிக பிரமீயம் மாடலாக தோற்றமளிக்கிறது.

டொயோட்டா க்ளான்ஸா எஞ்சின் மற்றும் செயல்திறன்

டொயோட்டா க்ளான்ஸா Engine And Performance

டொயோட்டா க்ளான்ஸா காரில் 1.2 லிட்டர் கே சீரிஸ் பெட்ரோல் எஞ்சின் இரண்டு விதமான பவரை வெளிப்படுத்தும் வகைகளில் கிடைக்கிறது. 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 5 ஸ்டெப் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. ஜி மேனுவல் கியர்பாக்ஸ் வேரியண்ட்டில் இந்த எஞ்சின் அதிகபட்சமாக 88.4 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வழங்கும். அதேநேரத்தில், வி மேனுவல் கியர்பாக்ஸ் வேரியண்ட்டும், ஜி மற்றும் வி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வேரியண்ட்டுகளிலும் இதன் பெட்ரோல் எஞ்சின் 81.7 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஞ்சினுடன் லித்தியம் அயான் பேட்டரி மற்றும் இன்டகிரேடேட் ஸ்டார்ட்டர் ஜெனரேட்டர் இணைக்கப்பட்ட மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பமும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால், கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை பெற வழி வகுக்கிறது.

டொயோட்டா க்ளான்ஸா மைலேஜ்

டொயோட்டா க்ளான்ஸா Fuel Efficiency

டொயோட்டா க்ளான்ஸா காரின் 1.2 லிட்டர் எஞ்சினுடன் ஜி மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் டியூவல் ஜெட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் கொண்ட வேரியண்ட் லிட்டருக்கு 23.87 கிமீ மைலேஜை வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் அல்லாத வி மேனுவல் கியர்பாக்ஸ் வேரியண்ட் லிட்டருக்கு 21.01 கிமீ மைலேஜை வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிரது. ஜி மற்றும் வி சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வேரியண்ட்டுகள் லிட்டருக்கு 19.56 கிமீ மைலேஜை வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. மாருதி பலேனோ காரின் ரீபேட்ஜ் மாடல் என்பதால் நடைமுறை பயன்பாட்டிலும் சிறப்பான மைலேஜை இந்த கார் வழங்கும் என நம்பலாம்.

டொயோட்டா க்ளான்ஸா முக்கிய அம்சங்கள்

டொயோட்டா க்ளான்ஸா Important Features

டொயோட்டா க்ளான்ஸா காரில் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், டெயில் லைட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரில் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட்ஃபோன் அடிப்படையில் இயங்கும் நேவிகேஷன் வசதி, ஸ்டீயரிங் வீலில் கன்ட்ரோல் சுவிட்சுகள், வாய்ஸ் கமாண்ட் வசதிகளும் உள்ளன.

இந்த காரில் ஆட்டோமேட்டிக் ஏசி சிஸ்டம், எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் ரியர் வியூ மிரர்கள், எஞ்சின் ஸ்டார்ட்- ஸ்டாப் வசதிகளும் உள்ளன. இரண்டு ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட், ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்டுகள், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன.

டொயோட்டா க்ளான்ஸா தீர்ப்பு

டொயோட்டா க்ளான்ஸா Verdict

மாருதி பலேனோ காரின் ரீபேட்ஜ் மாடலாக இருந்தாலும் சில முக்கிய டிசைன் அம்சங்கள் மற்றும் டொயோட்டாவின் நம்பகத்தன்மை ஆகியவை இந்த காருக்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது. டிசைன், இடவசதி, அதிக எரிபொருள் சிக்கனம், சரியான விலை போன்றவை இந்த காரின் முக்கிய அம்சங்கள். மேலும், டொயோட்டா சர்வீஸ் மையங்கள் மட்டுமின்றி, அவசர சமயங்களில் மாருதி நிறுவனத்தின் சர்வீஸ் மையங்களில் கூட சர்வீஸ் செய்து கொள்ள இயலும் என்பது ஆகச் சிறந்த விஷயமாக பார்க்கலாம்.

வண்ணங்கள்


Insta Blue
Gaming Grey
Enticing Silver
Sportin Red
Cafe White

டொயோட்டா க்ளான்ஸா படங்கள்

டொயோட்டா க்ளான்ஸா Q & A

டொயோட்டா க்ளான்ஸா எத்தனை வேரியண்ட்டுகள் வழங்கப்படுகின்றன?

ஜி மற்றும் வி என இரண்டு வேரியண்ட்டுகளில் டொயோட்டா க்ளான்ஸா கார் கிடைக்கிறது

Hide Answerkeyboard_arrow_down
டொயோட்டா க்ளான்ஸா காரில் டீசல் எஞ்சின் தேர்வு உள்ளதா?

டீசல் எஞ்சின் தேர்வு இல்லை

Hide Answerkeyboard_arrow_down
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X