மெர்சிடிஸ் பென்ஸ் சி-கிளாஸ்

மெர்சிடிஸ் பென்ஸ் சி-கிளாஸ்
Style: செடான்
59.90 - 65.60 லட்சம்
ஜிஎஸ்டி எக்ஸ்ஷோரூம் விலை

மெர்சிடிஸ் பென்ஸ் சி-கிளாஸ் கார் 3 வேரியண்ட்டுகளில் 5 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. மெர்சிடிஸ் பென்ஸ் சி-கிளாஸ் காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். மெர்சிடிஸ் பென்ஸ் சி-கிளாஸ் காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். மெர்சிடிஸ் பென்ஸ் சி-கிளாஸ் காரை செடான் ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் சி-கிளாஸ் கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

மெர்சிடிஸ் பென்ஸ் சி-கிளாஸ் ஹைபிரிட் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
செடான் | Gearbox
59,89,919
செடான் | Gearbox
59,89,935
செடான் | Gearbox
65,59,917

மெர்சிடிஸ் பென்ஸ் சி-கிளாஸ் விமர்சனம்

மெர்சிடிஸ் பென்ஸ் சி-கிளாஸ் வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்

இந்தியாவின் மிட்சைஸ் சொகுசு செடான் கார் மார்க்கெட்டில் முதன்மையான தேர்வாக மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் கார் இருந்து வருகிறது. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக அதிக சிறப்பம்சங்கள் கொண்ட ஃபேஸ்லிஃப்ட் மாடலாக மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரில் டிசைனில் மாற்றங்களுடன் புதுப்பொலிவு பெற்றிருப்பதுடன் அதிக வசதிகளையும் பெற்றுள்ளது. சொகுசு செடான் கார் வாங்க விரும்புவோரின் கவனத்தை முதல் பார்வையிலேயே கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முகப்பில் பெரிய க்ரில் அமைப்பு, அழகிய ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், ஏஎம்ஜி கார்களை போன்று பெரிய இன்டேக் அமைப்புடன் பம்பர் புதிய வடிவமைப்பை பெற்றுள்ளது. 16 முதல் 18 அங்குலம் விட்டம் கொண்ட சக்கரங்கள் வழங்கப்படுகின்றன. சி வடிவிலான எல்இடி டெயில் லைட்டுகள் கவர்கின்றன. உட்புறத்திலும் சில மாற்றங்களுடன் புதுப்பொலிவு பெற்றுள்ளது. இந்த கார் 4,686 மிமீ நீளமும், 1,810 மிமீ அகலமும், 1,442 மிமீ உயரமும் கொண்டுள்ளது. பரிமாணத்தில் எந்த மாற்றங்களும் இல்லை.

மெர்சிடிஸ் பென்ஸ் சி-கிளாஸ் எஞ்சின் மற்றும் செயல்திறன்

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் பிஎஸ்-6 மாடலில் டீசல் எஞ்சின் தேர்வு மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த 2.0 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் இரண்டு விதமான பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்ட மாடல்களில் வழங்கப்படுகிறது. இ க்ளாஸ் சி220டீ என்ற மாடலானது 194 பிஎச்பி பவரை வழங்கும். சி300டீ மாடலானதுத 245 பிஎச்பி பவரையும், 370 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். முந்தைய மாடலில் இருந்த 7ஜி டிரோனிக் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுக்கு பதிலாக புதிய 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் சி-கிளாஸ் மைலேஜ்

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் சி220டீ மாடலின் டீசல் எஞ்சின் வழங்கும் மைலேஜ் விபரங்கள் கிடைக்கவில்லை. இந்த டீசல் தேர்வானது 10 முதல் 12 கிமீ மைலேஜ் வரை மைலேஜ் வழங்கும் என்று நம்பலாம்.

மெர்சிடிஸ் பென்ஸ் சி-கிளாஸ் முக்கிய அம்சங்கள்

மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் எல்இடி ஹெட்லைட்டுகல், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி பட்டை கொண்ட டெயில் லைட் க்ளஸ்ட்டர்கள் இடம்பெற்றுள்ளன. இந்த காரில் 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. ஏராளமான நவீன தொழில்நுட்ப வசதிகளை இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கும். ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், இன்டீரியர் அழகை கூட்டும் மரத் தகடுகளுடன் அலங்கார வேலைப்பாடுகள் என அசத்தும் அம்சங்களுடன் கவர்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் சி-கிளாஸ் தீர்ப்பு

இந்தியாவின் மிட்சைஸ் சொகுசு செடான் கார் மார்க்கெட்டில் டிசைன், வசதிகள், எஞ்சின் மற்றும் விலை அடிப்படையில் சிறந்த தேர்வாக மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் நீண்ட காலமாக வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றிருக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு இந்த கார் மிகச் சிறந்த மதிப்பை வழங்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

வண்ணங்கள்


Obsidian Black
Selenite Grey
Sodalite Blue
Opalite White
Hi-Tech Silver

மெர்சிடிஸ் பென்ஸ் சி-கிளாஸ் படங்கள்

மெர்சிடிஸ் பென்ஸ் சி-கிளாஸ் Q & A

மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் ஃபேஸ்லிஃப்ட் காரில் எத்தனை வேரியண்ட்டுகள் வழங்கப்படுகின்றன?

புராக்ரெஸ்ஸிவ் மற்றும் பிரமீயம் ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது

Hide Answerkeyboard_arrow_down
மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் காரில் என்னென்ன எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன?

டீசல் எஞ்சின் தேர்வு மட்டுமே இரண்டு விதமான டியூனிங்கில் கிடைக்கிறது

Hide Answerkeyboard_arrow_down
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+