இசுஸு எம்யூ-எக்ஸ்

இசுஸு எம்யூ-எக்ஸ்
Style: எஸ்யூவி
34.53 - 37.71 லட்சம்
ஜிஎஸ்டி எக்ஸ்ஷோரூம் விலை

இசுஸு எம்யூ-எக்ஸ் கார் 2 வேரியண்ட்டுகளில் 6 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. இசுஸு எம்யூ-எக்ஸ் காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். இசுஸு எம்யூ-எக்ஸ் காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். இசுஸு எம்யூ-எக்ஸ் காரை எஸ்யூவி ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. இசுஸு எம்யூ-எக்ஸ் கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

இசுஸு எம்யூ-எக்ஸ் டீசல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
எஸ்யூவி | Gearbox
34,53,240
எஸ்யூவி | Gearbox
37,70,580

இசுஸு எம்யூ-எக்ஸ் விமர்சனம்

இசுஸு எம்யூ-எக்ஸ் வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்

இந்தியாவின் பிரிமீயம் ரக எஸ்யூவி மார்க்கெட்டில் மிகவும் தனித்துவமான தேர்வாக இசுஸு எம்யூஎக்ஸ் உள்ளது. கட்டுமஸ்தான தோற்றத்துடன் ஒரு எஸ்யூவிக்கு உரிய தோரணையுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. பை- எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், புதிய பின்புற வடிவமைப்பு ஆகியவை இசுஸு எம்யூஎக்ஸ் பிஎஸ்-6 மாடலை புதுப்பொலிவுடன் காட்டுகிறது. பம்பரில் பனி விளக்குகளுடன் க்ரோம் அலங்காரமும் கவர்கிறது. இந்த எஸ்யூவி 18 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்களை பெற்றுள்ளது. மேலும், 230 மிமீ க்ரவுண்ட் க்ளியரன்ஸ் பெற்றிருப்பதும் இதனை கம்பீரமாக காட்ட உதவுகிறது.

இசுஸு எம்யூ-எக்ஸ் எஞ்சின் மற்றும் செயல்திறன்

இசுஸு எம்யூஎக்ஸ் எஸ்யூவியின் பிஎஸ்-6 மாடலில் 1.9 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 161 பிஎச்பி பவரையும், 360 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. 2 வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடல்களில் கிடைக்கிறது.

இசுஸு எம்யூ-எக்ஸ் மைலேஜ்

புதிய எம்யூஎக்ஸ் எஸ்யூவியின் 2 வீல் டிரைவ் ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 13 கிமீ வரையிலும், 4 வீல் டிரைவ் மாடல் லிட்டருக்கு 12.31 கிமீ வரையிலும் மைலேஜ் வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. ஓட்டுதல் முறை, சீதோஷ்ண நிலையை பொறுத்து, மைலேஜ் சற்று குறைய வாய்ப்பு இருக்கிறது.

இசுஸு எம்யூ-எக்ஸ் முக்கிய அம்சங்கள்

இசுஸு எம்யூஎக்ஸ் எஸ்யூவியில் லாவா பிளாக் லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. சாஃப்ட் டச் பிளாஸ்டிக் பாகங்கள் உட்புறத்தை பிரிமீயமாக மாற்றியுள்ளது. 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கூல்டு க்ளவ் பாக்ஸ், க்ரூஸ் கன்ட்ரோல், ஆட்டோமேட்டிக் ஏசி சிஸ்டம், ஓட்டுனர் இருக்கைக்கு எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதி ஆகியவை உள்ளன.

இந்த எஸ்யூவியில் 6 ஏர்பேக்குகள், ஹில் டிசென்ட் கன்ட்ரோல், டிராக்ஷன் கன்ட்ரோல் மற்றும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் உள்ளன.

இசுஸு எம்யூ-எக்ஸ் தீர்ப்பு

முரட்டுத்தனமான தோற்றத்துடன் செயல்திறன் மிக்க எஞ்சினுடன் இசுஸு எம்யூஎக்ஸ் எஸ்யூவி கிடைக்கிறது. டொயோட்டா ஃபார்ச்சூனர், மஹிந்திரா அல்டுராஸ் ஜி4, ஃபோர்டு எண்டெவர், எம்ஜி க்ளோஸ்ட்டர், ஸ்கோடா கோடியாக் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் எஸ்யூவி மாடல்களுடன் போட்டி போடுகிறது. தனித்துவமான தேர்வாக இந்த ரகத்தில் விற்பனையில் உள்ளது. இசுஸு நிறுவனத்திற்கு குறைவான டீலர் மற்றும் சர்வீஸ் நெட்வொர்க் இருப்பதுதான் குறையாக இருக்கிறது.

வண்ணங்கள்


Nautilus Blue
Red Spinal Mica
Silky White Pearl
Galena Grey
Black Mica
Silver Metallic

இசுஸு எம்யூ-எக்ஸ் படங்கள்

இசுஸு எம்யூ-எக்ஸ் Q & A

இசுஸு எம்யூஎக்ஸ் காரில் எத்தனை வேரியண்ட்டுகள் வழங்கப்படுகின்றன?

இசுஸு எம்யூஎக்ஸ் எஸ்யூவி 2 வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது

Hide Answerkeyboard_arrow_down
இசுஸு எம்யூஎக்ஸ் காரில் பெட்ரோல் எஞ்சின் தேர்வு உள்ளதா?
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+