மெர்சிடிஸ் பென்ஸ் S-Class Facelift

மெர்சிடிஸ் பென்ஸ் S-Class Facelift
Style: செடான்
220.00 - 238.00 லட்சம்
ஜிஎஸ்டி எக்ஸ்ஷோரூம் விலை

மெர்சிடிஸ் பென்ஸ் S-Class Facelift கார் 2 வேரியண்ட்டுகளில் 5 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. மெர்சிடிஸ் பென்ஸ் S-Class Facelift காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். மெர்சிடிஸ் பென்ஸ் S-Class Facelift காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். மெர்சிடிஸ் பென்ஸ் S-Class Facelift காரை செடான் ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் S-Class Facelift கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

மெர்சிடிஸ் பென்ஸ் S-Class Facelift ஹைபிரிட் மாடல்கள்

மெர்சிடிஸ் பென்ஸ் S-Class Facelift விமர்சனம்

மெர்சிடிஸ் பென்ஸ் S-Class Facelift வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்

உலகின் மிகச் சிறந்த சொகுசு கார் மாடல்களில் ஒன்றாக மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் கார் வாடிக்கையாளர்களிடம் அதிக நன்மதிப்பை பெற்றுள்ளது. தற்போது இந்த கார் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்படுகிறது. புதிய தலைமுறை மாடலாக வந்துள்ள மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் காரில் பிரம்மாண்டமான க்ரில் அமைப்பு, அழகிய ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், கவர்ச்சிகரமான 20 அங்குல அலாய் வீல்கள் மற்றும் டெயில் லைட்டுகளுடன் ஒரு முழுமையான சொகுசு செடான் கார் மாடலாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. பார்த்தாலேயே பிரம்மிப்பை ஏற்படுத்தும் பிரம்மாண்ட செடான் கார் மாடலாக எல்லோரையும் திரும்பி பார்க்க வைக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் S-Class Facelift எஞ்சின் மற்றும் செயல்திறன்


புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் காரில் பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. இந்த காரில் வழங்கப்படும் 3.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 367 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மைல்டு ஹைப்ரிட் சிஸ்டத்தையும் பெட்ரோல் மாடல் பெற்றுள்ளது. இதன் 3.0 லிட்டடர் டீசல் எஞ்சின் 282 பிஎச்பி பவரையும், 600 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் மாடலில் 4 மேட்டிக் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொடுக்கப்படுகிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் S-Class Facelift மைலேஜ்

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் காரின் பெட்ரோல் எஞ்சின் லிட்டருக்கு 10.10 கிமீ மைலேஜையும், டீசல் எஞ்சின் லிட்டருக்கு 12.82 கிமீ மைலேஜ் வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த பிரம்மாண்ட சொகுசு செடான் காருக்கு இது நிச்சயம் சிறந்த மைலேஜ் அளவாகவே கூறலாம். எனினும், நடைமுறை பயன்பாட்டில் இந்த மைலேஜ் அளவு சற்றே குறையலாம்.

மெர்சிடிஸ் பென்ஸ் S-Class Facelift முக்கிய அம்சங்கள்


புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் காரில் மல்டிபீம் எல்இடி ஹெட்லைட்டுகள், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், 12.3 அங்குல இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், பனோரமிக் ஸ்லைடிங் சன்ரூஃப், பர்ம்ஸ்டெர் ஆடியோ சிஸ்டம், 12.8 அங்குல திரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், எம்பியூஎக்ஸ் இயங்குதளம், மசாஜ் வசதியுடன் இருக்கைகள் என ஏராளமான வசதிகளை பெற்றுள்ளது.

இந்த காரில் 10 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா என ஏராளமான பாதுகாப்பு வசதிகளை பெற்றுள்ளது. குறிப்பாக, மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் மெர்சிடிஸ் பிரீ சேஃப் பேக்கேஜ் என்ற விசேஷ பாதுகாப்பு தொழில்நுட்ப அம்சத்தையும் பெற்றிருக்கிறது. மொத்தத்தில் மிகப் பாதுகாப்பான அம்சங்ளுடன் அதிக மதிப்பை பெறுகிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் S-Class Facelift தீர்ப்பு


டிசைன், இடவசதி, தொழில்நுட்பம், எஞ்சின் தேர்வுகள் என அனைத்திலும் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் கார் அதிக நன்மதிப்பை பெற்றுள்ளது. தற்போது விற்பனைக்கு வந்துள்ள புதிய தலைமுறை மாடல் முந்தையை மாடலைவிட 34 மிமீ கூடுதல் நீளத்தையும், 55 மிமீ கூடுதல் வீல்பேஸ் நீளத்தையும் பெற்றிருக்கிறது. இதனால், இடவசதி மேலும் சிறப்பாக மாறி இருக்கிறது. அத்துடன், உலக அளவில் பல லட்சம் வாடிக்கையாளர்களின் அந்தஸ்தை உயர்த்தும் வாகனமாகவும், பலரின் கனவு கார் மாடலாகவும் இருந்து வருகிறது.

வண்ணங்கள்


Emerald Green
Verde Silver
Obsidian Black
Opalite White Bright
Velvet Brown

மெர்சிடிஸ் பென்ஸ் S-Class Facelift படங்கள்

மெர்சிடிஸ் பென்ஸ் S-Class Facelift Q & A

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் காரில் எத்தனை வேரியண்ட்டுகள் வழங்கப்படுகின்றன?

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் காரில் பெட்ரோல், டீசல் மாடல்கள் தலா ஒரு வேரியண்ட்டில் கிடைக்கிறது

Hide Answerkeyboard_arrow_down
மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் காரில் எத்தனை பேர் பயணிக்கும் இருக்கை வசதியை பெற்றுள்ளது?

5 பேர் பயணிக்கலாம்

Hide Answerkeyboard_arrow_down
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out