ரெனோ டஸ்ட்டர்

ரெனோ டஸ்ட்டர்
Style: எஸ்யூவி
9.86 - 14.25 லட்சம்
ஜிஎஸ்டி எக்ஸ்ஷோரூம் விலை

ரெனோ டஸ்ட்டர் கார் 7 வேரியண்ட்டுகளில் 5 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. ரெனோ டஸ்ட்டர் காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். ரெனோ டஸ்ட்டர் காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். ரெனோ டஸ்ட்டர் காரை எஸ்யூவி ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. ரெனோ டஸ்ட்டர் கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

ரெனோ டஸ்ட்டர் பெட்ரோல் மாடல்கள்

ரெனோ டஸ்ட்டர் மைலேஜ்

கியர்பாக்ஸ் எரிபொருள் வகை மைலேஜ்
Manual பெட்ரோல் 16.42

ரெனோ டஸ்ட்டர் விமர்சனம்

ரெனோ டஸ்ட்டர் வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்

இந்திய காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் முதல் மாடலாக வந்து பெரும் வரவேற்பை பெற்ற ரெனால்ட் டஸ்ட்டர் எஸ்யூவி தொடர்ந்து சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. டிசைன், வசதிகள், செயல்திறன் மிக்க எஞ்சின் தேர்வுகளுடன் மிகச் சிறந்த ஓட்டுதல் அனுபவத்தை தரும் மாடலாக பெயர் பெற்றுள்ளது. ரெனால்ட் டஸ்ட்டர் எஸ்யூவியின் இரண்டாவது தலைமுறை மாடலின் ஃபேஸ்லிஃப்ட் மாடலாக தற்போது விற்பனையில் உள்ளது. மிக வலிமையான தோற்றத்துடன் முகப்பு வசீகரிக்கிறது. புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், அழகிய டைமணட் கட் அலாய் வீல்கள், ஸ்கிட் பிளேட்டுகள், வலிமையான வீல் ஆர்ச்சுகள், நேர்த்தியான டெயில் லைட்டுகளுடன் ஒரு முழுமையான எஸ்யூவி தோரணையுடன் கவர்ந்து இழுக்கிறது. இந்த கார் 7 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. கருப்பு வண்ண இன்டீரியர் தீம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

ரெனோ டஸ்ட்டர் எஞ்சின் மற்றும் செயல்திறன்

ரெனால்ட் டஸ்ட்டர் எஸ்யூவியில் பிஎஸ்-6 பெட்ரோல் தரத்தில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. இதில், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 105 பிஎச்பி பவரையும், 142 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது. அடுத்து 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 154 பிஎச்பி பவரையும், 254 என்எம் டார்க் திறனையும் வழங்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த எஞ்சினுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன.

ரெனோ டஸ்ட்டர் மைலேஜ்


ரெனோ டஸ்ட்டர் 1.5 லிட்டர் பெட்ரோல் மேனுவல் மாடல் லிட்டருக்கு 14.19 கிமீ மைலேஜை வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. மறுபுறத்தில் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் மேனுவல் மாடல் லிட்டருக்கு 16.5 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 16.42 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. நடைமுறை பயன்பாட்டில் இந்த மைலேஜ் சற்றே குறைய வாய்ப்பு இருக்கிறது.

ரெனோ டஸ்ட்டர் முக்கிய அம்சங்கள்

ரெனால்ட் டஸ்ட்டர் எஸ்யூவியில் 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்படுகிறது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிளை சப்போர்ட் செய்யும். ஸ்டீயரிங் வீலில் கன்ட்ரோல் சுவிட்சுகள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அர்கமிஸ் பிரிமீயம் மியூசிக் சிஸ்டம் உள்ளது. இந்த காரில் டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. அதேநேரத்தில், போட்டியாளர்களை ஒப்பிடும்போது சன்ரூஃப், கனெக்டெட் கார் வசதி, டெலிஸ்கோப்பிக் ஸ்டீயரிங் அட்ஜெஸ்ட்மென்ட் உள்ளிட்ட பல வசதிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரெனோ டஸ்ட்டர் தீர்ப்பு

முரட்டுத்தனமான எஸ்யூவி தோற்றம், இடவசதி, ஓட்டுதல் தரத்தில் சிறப்பானதாக இருக்கிறது. ஆனால், போட்டியாக இருக்கும் கார் மாடல்கள் பல்வேறு வகையில் ஏராளமான நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வழங்கப்படுகின்றன. ஆனால், இந்த ரகத்தில் முதலில் வந்த ரெனால்ட் டஸ்ட்டர் எஸ்யூவியில் பல நவீன தொழில்நுட்ப வசதிகள் இல்லை என்பது இந்த எஸ்யூவி போட்டியாளர்களிடம் இருந்து சற்றே பின்தங்குகிறது.

வண்ணங்கள்


Caspian Blue
Mahogany Brown
Slate Grey
Moonlight Silver
Cayenne Orange

ரெனோ டஸ்ட்டர் படங்கள்

ரெனோ டஸ்ட்டர் Q & A

ரெனோ டஸ்ட்டர் காரில் எத்தனை வேரியண்ட்டுகள் வழங்கப்படுகின்றன?

ஆர்எக்ஸ்இ, ஆர்எக்ஸ்எஸ், ஆர்எக்ஸ்இசட் ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கிறது.

Hide Answerkeyboard_arrow_down
ரெனால்ட் டஸ்ட்டர் எஸ்யூவியில் டீசல் எஞ்சின் தேர்வு உள்ளதா?
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X