மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் 1 வேரியண்ட்டுகளில் 6 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரை ஹேட்ச்பேக் ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.
வேரியண்ட்டுகள் | எக்ஸ்ஷோரூம் விலை |
---|---|
ஹேட்ச்பேக் | Gearbox
|
₹ 5,73,265 |
கியர்பாக்ஸ் | எரிபொருள் வகை | மைலேஜ் |
---|---|---|
பெட்ரோல் | 23.2 |
இந்தியர்கள் மனதை கொள்ளை கொண்ட ஹேட்ச்பேக் கார் மாடல் மாருதி ஸ்விஃப்ட். மூன்றாம் தலைமுறை மாடலாக விற்பனையில் இருக்கும் ஸ்விஃப்ட் கார் துள்ளலான டிசைனுடன் வாடிக்கையாளர்களை தன்பால் ஈர்த்து வருகிறது. புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், பகல்நேர விளக்குகள், புதிய பம்பர் அமைப்பு, வட்ட வடிவிலான பனி விளக்குள் என பல புதிய மாற்றங்களுடன் தொடர்ந்து சிறந்த டிசைனிலான மாடலாக வாடிக்கையாளர்களை தக்க வைத்து வருகிறது. பின்புற கதவுகளின் கைப்பிடிகள் ஜன்னல் சட்டத்திலேயே இயைந்து கொடுக்கப்பட்டு இருப்பது முக்கிய சிறப்பு.
பக்கவாட்டில் கருப்பு வண்ண சி பில்லர் மற்றும் புதிய அலாய் வீல்கள் இதன் கவர்ச்சியை கூட்டுகிறது. இந்த காரின் பின்புறத்தில் புதிய எல்இடி டெயில் லைட் க்ளஸ்ட்டர் உள்ளது. முந்தைய மாடலில் இருந்து முற்றிலும் புதிய பின்புற டெயில் கேட் பொருத்தப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்க விஷயம்.
இந்த காரில் முழுவதுமான கருப்பு வண்ண இன்டீரியர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இன்டீரியரும் முற்றிலும் புதிய டிசைனுக்கு மாறி இருக்கிறது. தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டீயரிங் வீல், தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வட்ட வடிவிலான ஏசி வென்ட்டுகள் ஆகியவை முக்கிய அம்சங்களாக கூறலாம்.
புதிய மாருதி ஸ்விஃப்ட் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் இடம்பெற்றுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 82 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.
புதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் பெட்ரோல் மேனுவல் மற்றும் ஏஎம்டி மாடல்கள் லிட்டருக்கு 21.21 கிமீ மைலேஜையு வழங்கும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது பெட்ரோல் மாடல்களில் சிறந்த எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் மாடலாக கூறலாம்.
புதிய மாருதி ஸ்விஃப்ட் காரில் 7.0 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும். மிரர்லிங்க் தொழில்நுட்ப வசதியும் உள்ளது. எஞ்சின் ஸ்டார்ட் - ஸ்டாப் பட்டன், கீ லெஸ் என்ட்ரி வசதி, ஸ்மார்ட் கீ, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள், எலெக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் வசதியுடன் சைடு மிரர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த காரில் இரண்டு ஏர்பேக்குகள் இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம்,, பிரேக் அசிஸ்ட், ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்டுகள் முக்கிய பாதுகாப்பு வசதிகள். விலை உயர்ந்த வேரியண்ட்டில் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. பகல் இரவுக்கு தக்கவாறு அட்ஜெஸ்ட் செய்யும் வசதியுடன் உட்புற ரியர் வியூ மிரர் உள்ளது.
2005ல் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் இந்தியாவின் மிக பிரலமான கார் மாடல்களில் ஒன்றாக விளங்குகிறது. டிசைன், செயல்திறன், மைலேஜ், விலை என அனைத்திலும் மிகச் சிறந்த தேர்வாக கூறலாம். மேலும், ஏஎம்டி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்விலும் வந்திருப்பது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கிறது. மறுவிற்பனை மதிப்பிலும் தன்னிகரற்ற கார் மாடலாக கூறலாம்.