

Click it and Unblock the Notifications
ஹோண்டா நகரம் கார் 8 வேரியண்ட்டுகளில் 4 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. ஹோண்டா நகரம் காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். ஹோண்டா நகரம் காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். ஹோண்டா நகரம் காரை சேடன் ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. ஹோண்டா நகரம் கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.
| வேரியண்ட்டுகள் | எக்ஸ்ஷோரூம் விலை |
|---|---|
|
சேடன் | Steel Rims Gearbox
|
₹ 14,11,746 |
|
சேடன் | Alloy Wheels Gearbox
|
₹ 15,84,684 |
|
சேடன் | Alloy Wheels Gearbox
|
₹ 16,99,364 |
|
சேடன் | Diamond-Cut Alloy Wheels Gearbox
|
₹ 18,13,457 |
|
சேடன் | Diamond-Cut Alloy Wheels Gearbox
|
₹ 19,15,522 |
|
சேடன் | Diamond-Cut Alloy Wheels Gearbox
|
₹ 19,28,137 |
|
சேடன் | Diamond-Cut Alloy Wheels Gearbox
|
₹ 19,28,137 |
| வேரியண்ட்டுகள் | எக்ஸ்ஷோரூம் விலை |
|---|---|
|
சேடன் | Diamond-Cut Alloy Wheels Gearbox
|
₹ 24,89,038 |
| கியர்பாக்ஸ் | எரிபொருள் வகை | மைலேஜ் |
|---|---|---|
| Steel Rims | பெட்ரோல் | FWD |
| Alloy Wheels | பெட்ரோல் | FWD |
| Diamond-Cut Alloy Wheels | பெட்ரோல் | FWD |
| Diamond-Cut Alloy Wheels | ஹைபிரிட் | FWD |
இந்திய சந்தையில் அதிக மதிப்புவாய்ந்த செடான் கார் மாடல் என்ற பெருமையை நீண்ட காலமாக தக்க வைத்து வருகிறது ஹோண்டா சிட்டி கார். இந்த நன்மதிப்பையும், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் விதமாக புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. டிசைன், வசதிகளில் அடுத்த நிலைக்கு இந்த கார் கொண்டு செல்லப்பட்டது.
புதிய ஹோண்டா சிட்டி கார் ஐந்தாம் தலைமுறை மாடலாக வந்துள்ளது. தோற்றத்திலும் பிரம்மாண்டமாக தெரிகிறது. க்ரோம் பட்டையுடன் கூடிய க்ரில் அமைப்பு, எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், ஏர் டேம் அமைப்புடன் முன்புற பம்பர், செவ்வக வடிவிலான பனி விளக்குகள் க்ளஸ்ட்டர்கள் ஆகியவை இந்த காரின் முகப்பை முற்றிலுமாக புதிதாக மாற்றி இருக்கிறது.
இந்த கார் முந்தைய மாடலைவிட நீளம் அதிகம். அத்துடன், மிகச் சிறப்பான கூரை அமைப்பு, அழகான 16 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், இசட் வடிவிலான எல்இடி டெயில் லைட்டுகள் ஆகியவை இந்த காருக்கு வசீகரத்தை கூட்டுகிறது. இந்த காரின் பின்புற பம்பரில் ரிஃப்லெக்டர்கள் எனப்படும் பிரதிபலிப்பு பட்டைகள் இருமுனைகளிலும் இடம்பெற்றுள்ளன.
புதிய ஹோண்டா சிட்டி காரின் உட்புறமும் மிகவும் பிரிமீயமாகஉள்ளது. கருப்பு மற்றும் பீஜ் என இரட்டை வண்ண பாகங்களுடன் வசீகரிக்கிறது. இந்த காரில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளும் இடம்பெற்றுள்ளதால், அதிக மதிப்புவாய்ந்த மாடலாக இருக்கிறது.
புதிய ஹோண்டா சிட்டி கார் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான புதிய பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. பெட்ரோல் மாடலில் இருக்கும் 1.5 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 121 பிஎச்பி பவரையும், 145 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.
டீசல் மாடலில் இருக்கும் 1.5 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 100 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே கிடைக்கும். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு இல்லை.
புதிய ஹோண்டா சிட்டி கார் சிறப்பான மைலேஜ் தரும் மிட்சைஸ் செடான் கார் மாடல்களில் ஒன்றாக இருந்து வருகிறது. பெட்ரோல் மேனுவல் மாடல் லிட்டருக்கு 17.8 கிமீ மைலேஜையும், சிவிடி மாடல் லிட்டருக்கு 18.4 கிமீ மைலேஜையும் வழங்கும். டீசல் மாடல் லிட்டருக்கு 24.1 கிமீ மைலேஜை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
புதிய ஹோண்டா சிட்டி காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், 16 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய ரியர் வியூ மிரர்கள், எலெக்ட்ரிக் சன்ரூஃப் ஆகியவை உள்ளன. மேலும், 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 7 அங்குல டிஎஃப்டி எம்ஐடி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், ஓட்டுனர் இருக்கையை அட்ஜெஸ்ட் செய்யும் வசதிகள் உள்ளன.
புதிய ஹோண்டா சிட்டி காரில் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல், வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி அசிஸ்ட், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், எமெர்ஜென்ஸி ஸ்டாப் சிக்னல் லைட், பிரேக் அசிஸ்ட், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் வடிவமைப்பு, வசதிகள், எஞ்சின் என அனைத்திலும் சிறப்பானதாக மேம்படுத்தப்பட்டு வந்துள்ளது. மேலும், அந்தஸ்தை உயர்த்தும் அம்சங்கள் மற்றும் நன்மதிப்பை தொடர்ந்து தக்க வைத்துள்ளது. எனவே, கொடுக்கும் பணத்திற்கு நிறைவை தரும் என்றால் மிகையாகாது.
புதிய ஹோண்டா சிட்டி கார் வி, விஎக்ஸ் மற்றும் இசட்எக்ஸ் ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.
புதிய ஹோண்டா சிட்டி கார் ரேடியண்ட் ரெட் மெட்டாலிக், பிளாட்டினம் ஒயிட் பியர்ல், மாடர்ன் ஸ்டீல் மெட்டாலிக், லூனார் சில்வர் மெட்டாலிக் மற்றும் கோல்டன் பிரவுன் மெட்டாலிக் ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது.
மாருதி சியாஸ், ஹூண்டாய் வெர்னா, ஃபோக்ஸ்வேகன் போலோ ஆகிய கார் மாடல்கள் புதிய ஹோண்டா சிட்டி காருக்கு நேரடி போட்டியாளர்களாக உள்ளன.


Click it and Unblock the Notifications
