ஹூண்டாய் கிரெட்டா

ஹூண்டாய் கிரெட்டா
Style: எஸ்யூவி
11.00 - 20.15 லட்சம்
ஜிஎஸ்டி எக்ஸ்ஷோரூம் விலை

ஹூண்டாய் கிரெட்டா கார் 28 வேரியண்ட்டுகளில் 6 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. ஹூண்டாய் கிரெட்டா காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். ஹூண்டாய் கிரெட்டா காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். ஹூண்டாய் கிரெட்டா காரை எஸ்யூவி ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. ஹூண்டாய் கிரெட்டா கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

ஹூண்டாய் கிரெட்டா பெட்ரோல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
எஸ்யூவி | Gearbox
10,99,900
எஸ்யூவி | Gearbox
12,17,700
எஸ்யூவி | Gearbox
13,39,200
எஸ்யூவி | Gearbox
14,32,400
எஸ்யூவி | Gearbox
15,26,900
எஸ்யூவி | Gearbox
15,41,900
எஸ்யூவி | Gearbox
15,82,400
எஸ்யூவி | Gearbox
15,94,900
எஸ்யூவி | Gearbox
16,09,900
எஸ்யூவி | Gearbox
17,23,800
எஸ்யூவி | Gearbox
17,38,800
எஸ்யூவி | Gearbox
17,44,900
எஸ்யூவி | Gearbox
17,59,900
எஸ்யூவி | Gearbox
18,69,800
எஸ்யூவி | Gearbox
18,84,800
எஸ்யூவி | Gearbox
19,99,900
எஸ்யூவி | Gearbox
20,14,900

ஹூண்டாய் கிரெட்டா டீசல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
எஸ்யூவி | Gearbox
12,44,900
எஸ்யூவி | Gearbox
13,67,700
எஸ்யூவி | Gearbox
14,89,200
எஸ்யூவி | Gearbox
15,82,400
எஸ்யூவி | Gearbox
17,32,400
எஸ்யூவி | Gearbox
17,44,900
எஸ்யூவி | Gearbox
17,59,900
எஸ்யூவி | Gearbox
18,73,900
எஸ்யூவி | Gearbox
18,88,900
எஸ்யூவி | Gearbox
19,99,900
எஸ்யூவி | Gearbox
20,14,900

ஹூண்டாய் கிரெட்டா மைலேஜ்

கியர்பாக்ஸ் எரிபொருள் வகை மைலேஜ்
Manual பெட்ரோல் 0
Manual டீசல் 0

ஹூண்டாய் கிரெட்டா விமர்சனம்

ஹூண்டாய் கிரெட்டா Exterior And Interior Design

ஹூண்டாய் கிரெட்டா வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்

புதிய ஹூண்டாய் க்ரெட்டா கார் இந்தியாவின் அதிகம் விரும்பப்படும் எஸ்யூவி ரக மாடலாக வலம் வருகிறது. சொகுசு கார்களுக்கு இணையான இதன் டிசைன் வாடிக்கையாளர்களை சுண்டி இழுத்து வருகிறது. பெரிய அளவிலான க்ரில் அமைப்பு, க்ரோம் அலங்கார அம்சங்களுடன் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள் என அசத்துகிறது முகப்பு.

இதன் பக்கவாட்டு டிசைன் முந்தைய மாடலை ஒத்திருக்கிறது. ஆனால், 17 அங்குல அலாய் வீல்கள் மற்றும் ரூஃப் ரெயில்கள் புதிது. பின்புறத்திலும் சிறிய அளவிலான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எல்இடி டெயில் லைட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

உட்புறத்தில் கருப்பு வண்ண இன்டீரியர் தீம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. டேஷ்போர்டில் சென்டர் கன்சோல், ஏசி வென்ட்டுகள், ஸ்டீயரிங் வீல் ஆகியவற்றில் சில்வர் அலங்கார பாகங்கள் அழகு கூட்டப்பட்டு இருக்கிறது. டேஷ்போர்டுடன் மிக நேர்த்தியான முறையில் இன்ஃபோடெயின்மென்ட் திரை பொருத்தப்பட்டு இருக்கிறது. மொத்தத்தில் வெளிப்புறத்தை போலவே, உட்புறமும் பிரிமீயமாக உள்ளது.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா காரில் இரண்டு புதிய வண்ணத் தேர்வுகள் சேர்க்கப்ப்டடுள்ளன. மரினா புளூ மற்றும் லாவா ஆரஞ்ச் ஆகிய இரண்டு புதிய வண்ணங்கள் உள்ளன. மேலும், 5 விதமான வண்ணத் தேர்வுகளிலும், இரண்டு இரட்டை வண்ணத் தேர்வுகளிலும் கிடைக்கிறது.

ஹூண்டாய் கிரெட்டா எஞ்சின் மற்றும் செயல்திறன்

ஹூண்டாய் கிரெட்டா Engine And Performance

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியானது ஒரு பெட்ரோல் மற்றும் இரண்டு டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. பெட்ரோல் மாடலில் இருக்கும் 1.6 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 123 பிஎச்பி பவரையும், 151 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். விலை குறைவான டீசல் மாடலில் இருக்கும் 1.4 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 90 பிஎச்பி பவரையும், 220 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 128 பிஎச்பி பவரையும், 260 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

இந்த எஸ்யூவியின் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல்களில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் மாடலானது 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே கிடைக்கும்.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் க்ளட்ச் மற்றும் ஸ்டீயரிங் வீல் மிகவும் இலகுவாக இருக்கிறது. வேகம் அதிகரிக்கும்போது, ஸ்டீயரிங் வீலில் சற்று கடினமாக மாறுவது நெடுஞ்சாலைகளில் நம்பிக்கையுடன் ஓட்டுவதற்கு துணைபுரிகிறது. இதன் சஸ்பென்ஷன் அமைப்பு அதிர்வுகளை சிறப்பாக உள்வாங்கி சொகுசான பயண அனுபவத்தை வழங்குகிறது. அதேபோன்று பிரேக்குகளும் மிக துல்லியமாக இருக்கிறது. முன்புறத்தில் டிஸ்க் பிரேக்குகளும், பின்புறத்தில் டிரம் பிரேக்குளும் உள்ளன.

ஹூண்டாய் கிரெட்டா மைலேஜ்

ஹூண்டாய் கிரெட்டா Fuel Efficiency

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியில் 55 லிட்டர் கொள்திறன் கொண்ட எரிபொருள் கலன் உள்ளது. இதனால், ஒரு முறை முழுமையாக எரிபொருள் நிரப்பியதை வைத்தே நீண்ட தூர பயணங்களை நிறைவு செய்யும் வாய்ப்பை தருகிறது. அராய் சான்றுகளின்படி, இந்த காரின் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 15.29 கிமீ மைலேஜை வழங்கும். 1.4 லிட்டர் டீசல் மாடல் லிட்டருக்கு 21.38 கிமீ மைலேஜையும், 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்ட மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 19.67 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 17.01 கிமீ மைலேஜையும் வழங்கும்.

ஹூண்டாய் கிரெட்டா முக்கிய அம்சங்கள்

ஹூண்டாய் கிரெட்டா Important Features

ஹூண்டாய் கார்களில் வசதிகளுக்கும், தொழில்நுட்ப அம்சங்களுக்கும் பஞ்சம் இருக்காது. அந்த வகையில், க்ரெட்டா காரிலும் ஏராளமான வசதிகள் இடம்பெற்றுள்ளன. இந்த காரில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், டர்ன் இண்டிகேட்டருடன் சைடு மிரர்கள், லெதர் உறையுடன் ஸ்டீயரிங் வீல் மற்றும் கியர் நாப் என அசத்துகிறது. வென்ட்டிலேட்டட் இருக்கைகள், எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஃபாலோ மீ ஹெட்லைட்டுகள், எலெக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் வசதியுடன் சைடு மிரர்கள், 7.0 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை முக்கிய அம்சங்கள். இந்த காரில் வயர்லெஸ் மொபைல்போன் சார்ஜர் வசதியும் உள்ளது.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியில் டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், இம்மொபைலைசர், லேன் சேஞ்ச் இண்டிகேட்டர், ஹை ஸ்பீடு அலெர்ட், வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மென்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் மற்றும் ஸ்பீடு சென்சிங் ஆட்டோ டோர் லாக்கிங் சிஸ்டம் ஆகியவை உள்ளன.

ஹூண்டாய் கிரெட்டா தீர்ப்பு

ஹூண்டாய் கிரெட்டா Verdict

எஸ்யூவி மார்க்கெட்டில் கண்ணை மூடிக்கொண்டு தேர்வு செய்யும் கார் மாடல்களில் ஒன்றாக ஹூண்டாய் க்ரெட்டாவை கூறலாம். சொகுசு, செயல்திறன், வசதிகள், மைலேஜ் என அனைத்திலும் சமரசமில்லாத தேர்வாக இருக்கிறது. நகர்ப்புறம் மற்றும் நெடுஞ்சாலை என இரண்டு பயன்பாடுகளுக்கும் சிறந்ததாக விளங்குகிறது.

வண்ணங்கள்


Abyss Black Pearl
Robust Emerald Pearl
Ranger Khaki
Titan Grey
Fiery Red
Atlas White

ஹூண்டாய் கிரெட்டா படங்கள்

ஹூண்டாய் கிரெட்டா Q & A

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி எத்தனை வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது?

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி இ ப்ளஸ், இஎக்ஸ், எஸ், எஸ்எக்ஸ், எஸ்எக்ஸ் டியூவல்டோன், எஸ்எக்ஸ் ஆப்ஷனல் மற்றும் எஸ்எக்ஸ் எக்ஸிகியூட்டிவ் என ஏழு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.

Hide Answerkeyboard_arrow_down
ஹூண்டாய் க்ரெட்டா எத்தனை வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது?

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி ஏழுவிதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. 5 ஒற்றை வண்ணங்களிலும், இரண்டு இரட்டை வண்ணத் தேர்வுகளிலும் விற்பனையில் உள்ளது.

Hide Answerkeyboard_arrow_down
ஹூண்டாய் க்ரெட்டா அல்லது ஜீப் காம்பஸ்? இரண்டில் எது சிறந்தது?

ஜீப் காம்பஸ் எஸ்யூவியைவிட பல விதங்களில் ஹூண்டாய் க்ரெட்டா சிறப்பான தேர்வாக இருக்கிறது. விலை அடிப்படையில மட்டுமல்ல, வசதிகளிலும் நிறைவான மாடலாக ஹூண்டாய் க்ரெட்டா உள்ளது.

Hide Answerkeyboard_arrow_down
ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் நேரடி போட்டி மாடல்கள் எவை எவை?

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியானது ஜீப் காம்பஸ், மஹிந்திரா எக்ஸ்யூவி500 மற்றும் டாடா ஹாரியர் உள்ளிட்ட மாடல்களுடன் நேரடியாக போட்டி போடுகிறது.

Hide Answerkeyboard_arrow_down
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X