

Click it and Unblock the Notifications
மெர்சிடிஸ் பென்ஸ் V-Class கார் 2 வேரியண்ட்டுகளில் 5 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. மெர்சிடிஸ் பென்ஸ் V-Class காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். மெர்சிடிஸ் பென்ஸ் V-Class காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். மெர்சிடிஸ் பென்ஸ் V-Class காரை எம்யூவி ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் V-Class கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.
| வேரியண்ட்டுகள் | எக்ஸ்ஷோரூம் விலை |
|---|---|
|
எம்யூவி | Gearbox
|
₹ 1,40,00,000 |
| வேரியண்ட்டுகள் | எக்ஸ்ஷோரூம் விலை |
|---|---|
|
எம்யூவி | Gearbox
|
₹ 1,40,00,000 |
இந்திய சொகுசு கார் மார்க்கெட்டில் எம்பிவி ரக கார் மாடலாக மெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸ் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. நீண்ட தூர பயணங்களுக்கு மிக வசதியாக செல்ல விரும்பும் கோடீஸ்வர வாடிக்கையாளர்களை மனதில் வைத்து இந்த கார் தனித்துவமான சொகுசு கார் மாடலாக விற்பனையில் உள்ளது. இந்த கார் 5,140 மிமீ நீளமும், 3,200 மிமீ வீல்பேஸ் நீளமும் கொண்டதாக இருக்கிறது. இந்த கார் எக்ஸ்ட்ரா வீல்பேஸ் கொண்ட மாடலிலும் கிடைக்கிறது. இந்த மாடலானது 3,430 மிமீ வீல்பேஸ் நீளத்தை பெற்றிருக்கிறது. இதனால், மிக அதிக வசதி கொண்ட சொகுசு எம்பிவி கார் மாடலாக வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் பாரம்பரிய க்ரில் அமைப்பு, 16 மற்றும் 17 அங்குல அலாய் வீல்கள் சக்கரங்கள், நேர்த்தியான டெயில் லைட் க்ளஸ்ட்டர்களுடன் பார்த்த உடனே ஒரு முழுமையான எம்பிவி கார் மாடலாக கருத முடிகிறது. எல்இடி ஹெட்லைட்டுகளும் இந்த காரின் மதிப்பை உயர்த்துகிறது. மொத்தத்தில் சொகுசு கார் மார்க்கெட்டில் எம்பிவி கார் மாடலை தேடுவோரின் எதிர்பார்ப்புகளை இந்த கார் கச்சிதமாக பூர்த்தி செய்யும்.
மெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸ் சொகுசு வகை எம்பிவி காரில் 2.1 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 160 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸ் காரில் இருக்கும் பிஎஸ்-6 தரத்திற்கு இணையான 2.1 லிட்டர் டீசல் எஞ்சின் லிட்டருக்கு 16 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. நடைமுறை பயன்பாட்டில் இந்த மைலேஜ் அளவில் சுற்று குறைய வாய்ப்பு இருக்கிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸ் காரில் வசதியான இருக்கைகள், க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், மசாஜ் வசதி, ஆப்ஷனலாக பனோரமிக் சன்ரூஃப், 15 ஸ்பீக்கர்களுடன் பர்ம்ஸ்டெர் ஆடியோ சிஸ்டம் ஆகியவை கொடுக்கப்படுகின்றன. தவிரவும், 360 டிகிரி கேமரா, 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், மோதல் தவிர்ப்பு தொழில்நுட்பம் உள்பட ஏராளமான பாதுகாப்பு தொழில்நுட்ப வசதிகளை பெற்றுள்ளது.
இந்தியாவில் சொகுசு எம்பிவி கார் வாங்க விரும்புவோரின் ஒரே சிறந்த தேர்வாக மெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸ் கார் உள்ளது. இந்த காருக்கு ஏராளமான கூடுதல் ஆக்சஸெரீகள் பேக்கேஜும் வழங்கப்படுகிறது. டொயோட்டா வெல்ஃபயர் கார் இதனுடன் போட்டி போடுகிறது. இருப்பினும், பிராண்டு மதிப்பு அடிப்படையில சொகுசு எம்பிவி கார் வாங்க விரும்புவோருக்கு மெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸ் கார் சிறந்த தேர்வாக அமையும்.
எக்ஸ்ப்ரெஸென், எக்ஸ்க்ளூசிவ், எலைட், மார்கோ போலோ ஹரிஸான், மார்க்கோ போலோ ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.
இல்லை. டீசல் எஞ்சின் தேர்வில் மட்டுமே கிடைக்கிறது


Click it and Unblock the Notifications