ஹூண்டாய் வெர்னா

ஹூண்டாய் வெர்னா
Style: சேடன்
12.87 - 19.99 லட்சம்
ஜிஎஸ்டி எக்ஸ்ஷோரூம் விலை

ஹூண்டாய் வெர்னா கார் 6 வேரியண்ட்டுகளில் 5 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. ஹூண்டாய் வெர்னா காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். ஹூண்டாய் வெர்னா காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். ஹூண்டாய் வெர்னா காரை சேடன் ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. ஹூண்டாய் வெர்னா கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

ஹூண்டாய் வெர்னா பெட்ரோல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
சேடன் | Steel Rims Gearbox
12,87,088
சேடன் | Alloy Wheels Gearbox
14,32,732
சேடன் | Diamond-Cut Alloy Wheels Gearbox
15,40,532
சேடன் | Diamond-Cut Alloy Wheels Gearbox
16,11,633
சேடன் | Diamond-Cut Alloy Wheels Gearbox
17,34,341
சேடன் | Diamond-Cut Alloy Wheels Gearbox
19,98,665

ஹூண்டாய் வெர்னா மைலேஜ்

கியர்பாக்ஸ் எரிபொருள் வகை மைலேஜ்
Steel Rims பெட்ரோல் FWD
Alloy Wheels பெட்ரோல் FWD
Diamond-Cut Alloy Wheels பெட்ரோல் FWD

ஹூண்டாய் வெர்னா விமர்சனம்

ஹூண்டாய் வெர்னா வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்

இந்தியாவின் மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் முதல் மூன்று தேர்வுகளில் ஒன்றாக ஹூண்டாய் வெர்னா கார் விளங்குகிறது. அருமையான டிசைன், சிறந்த தொழில்நுட்ப அம்சங்களுடன் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.

ஹூண்டாய் வெர்னா காரின் புளூயிடிக் டிசைன் தாத்பரிய கொள்கையில் நேர்த்தியான வளைவு, நெளிவுகளுடன் கவர்ச்சியாக இருக்கிறது. முகப்பில் பிரம்மாண்டமான க்ரில் அமைப்பு, எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் இந்த காரின் முகப்பை மிக வசீகரமாக காட்டுகிறது.

பக்கவாட்டில் மிக சரியான அளவில் தாழ்ந்து செல்லும் கூரை அமைப்பு, 16 அங்குல அலாய் சக்கரங்கள் காரின் கவர்ச்சியை கூட்டுகின்றன. அதேபோன்றே, பின்புறத்திலும் எல்இடி டெயில் லைட் க்ளஸ்ட்டர்களும், டிஃபியூசர் அமைப்பும் காரின் அழகை எடுத்துக் காட்டும் விஷயங்களாக உள்ளன.

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் இன்டீரியர் அமைப்பு மிக நேர்த்தியாகவும், கவர்ச்சியாகவும் உள்ளன. கருப்பு மற்றும் பீஜ் வண்ணக்கலவையிலான இரட்டை வண்ண இன்டீரியர் தீம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. உட்புறத்தில் பிளாஸ்டிக் பாகங்களின் தரம் குறிப்பிட்டு சொல்லும்படியாக உள்ளது. ஓட்டுனருக்கு ஏதுவாக சுவிட்சுகள் மற்றும் கன்ட்ரோல் பட்டன்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஹூண்டாய் வெர்னா எஞ்சின் மற்றும் செயல்திறன்

ஹூண்டாய் வெர்னா காரில் இரண்டு பெட்ரோல் மற்றும் இரண்டு டீசல் எஞ்சின்கள் என நான்குவிதமான எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 100 பிஎச்பி பவரையும், 132 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 123 பிஎச்பி பவரையும், 15 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

இந்த காரின் 1.4 லிட்டர் பெட்ரோல் மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு கொடுக்கப்படுகிறது. மறுபுறத்தில் 1.6 லிட்டர் பெட்ரோல் மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தவிர்த்து, 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்விலும் கிடைக்கிறது.

ஹூண்டாய் வெர்னா காரின் 1.4 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 90 பிஎச்பி பவரையும், 219 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 128 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். டீசல் மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகிறது. 1.6 லிட்டர் மாடலானது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்விலும் கிடைக்கிறது.

ஹூண்டாய் வெர்னா காரின் நான்கு எஞ்சின்களுமே மிகச் சிறப்பான பவர் டெலிவிரியை வழங்குகிறது. மேலும், சீரான செயல்திறனுடன் அதிர்வுகள் குறைவான மென்மையான அனுபவத்தை இதன் எஞ்சின்கள் வழங்குகின்றன. குறிப்பாக, ஆட்டோமேட்டிக் மாடல்கள் உன்னதமான ஓட்டுதல் அனுபவத்தை தருகின்றன.

இந்த காரின் பிரேக்குகளும் மிக துல்லியமான செயல்பாட்டை வழங்குகின்றன. அதேபோன்று, சஸ்பென்ஷனும் அதிர்வுகள் குறைவான சொகுசான பயண அனுபவத்தை வழங்குகின்றன. இதன் சஸ்பென்ஷன் மிக மென்மையாக இருப்பதால் அதிர்வுகள் குறைவாக தெரிகிறது.

ஹூண்டாய் வெர்னா மைலேஜ்

ஹூண்டாய் வெர்னா காரின் 1.6 லிட்டர் பெட்ரோல் மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 17.7 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 15.92 கிமீ மைலேஜையும் வழங்கும். இதன் 1.6 லிட்டர் டீசல் மேனுவல் மாடல் லிட்டருக்கு 24.75 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 21.02 கிமீ மைலேஜையும் வழங்கும்.

ஹூண்டாய் வெர்னா முக்கிய அம்சங்கள்

ஹூண்டாய் வெர்னா காரில் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் சைடு மிரர்கள், லெதர் உறையுடன் ஸ்டீயரிங் வீல், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புஷ் பட்டன் ஸ்டார்ட், வென்டிலேட்டட் முன் இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜர், கூல்டு க்ளவ் பாக்ஸ் என ஏராளமான வசதிகளை வழங்குகிறது.

இந்த காரில் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பார்க்கிங் அசிஸ்ட், இம்மொபைலைசர், அலாரம், ஹெட்லைட் எஸ்கார்ட் ஃபங்ஷன், மோதலின்போது கதவுகள் தானாக திறக்கும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

ஹூண்டாய் வெர்னா தீர்ப்பு

ஹூண்டாய் வெர்னா கார் மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் மிகச் சிறந்த தேர்வாக கூறலாம். சொகுசு, எரிபொருள் சிக்கனம், அதிக எஞ்சின் தேர்வுகள், செயல்திறன், விலை என அனைத்திலும் தன்னிறவை அளிக்கும் மாடல். குறிப்பாக, நெடுஞ்சாலை பயணங்களில் ஓட்டுபவரையும், பயணிப்பவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் அம்சங்களை கொண்டுள்லது.

வண்ணங்கள்


Titanium Black
Atlas White
Titan Grey
Starry Night
Classy Blue

ஹூண்டாய் வெர்னா படங்கள்

 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out