ஜீப் ரேங்க்லர்

ஜீப் ரேங்க்லர்
Style: முழு அளவு எஸ்யூவி
76.64 - 81.93 லட்சம்
ஜிஎஸ்டி எக்ஸ்ஷோரூம் விலை

ஜீப் ரேங்க்லர் கார் 3 வேரியண்ட்டுகளில் 5 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. ஜீப் ரேங்க்லர் காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். ஜீப் ரேங்க்லர் காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். ஜீப் ரேங்க்லர் காரை முழு அளவு எஸ்யூவி ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. ஜீப் ரேங்க்லர் கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

ஜீப் ரேங்க்லர் பெட்ரோல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
முழு அளவு எஸ்யூவி | Alloy Wheels Gearbox
76,64,436
முழு அளவு எஸ்யூவி | Alloy Wheels Gearbox
81,36,495
முழு அளவு எஸ்யூவி | Alloy Wheels Gearbox
81,92,775

ஜீப் ரேங்க்லர் மைலேஜ்

கியர்பாக்ஸ் எரிபொருள் வகை மைலேஜ்
Alloy Wheels பெட்ரோல் 4WD

ஜீப் ரேங்க்லர் விமர்சனம்

ஜீப் ரேங்க்லர் வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்

உலக அளவில் சிறந்த பிரிமீயம் ரக ஆஃப்ரோடு எஸ்யூவி மாடல்களில் ஒன்றாக ஜீப் ரேங்லர் வாடிக்கையாளர்களிடத்தில் நன்மதிப்பை பெற்றுள்ளது. மிரட்டலான தோற்றம், ஆஃப்ரோடு பயன்பாடுகளுக்கு உரிய தொழில்நுட்ப வசதிகள், செயல்திறன் மிக்க எஞ்சின் என அனைத்திலும் சிறந்த தேர்வாக இருக்கிறது. இந்த நிலையில், ஜீப் ரேங்லர் எஸ்யூவி இப்போது இந்தியாவிலேயே அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்படுகிறது. இதனால், விலையும் சவாலாக மாறி இருக்கிறது. ஜீப் நிறுவனத்தின் பாரம்பரியமான க்ரில் அமைப்பு, வட்ட வடிவிலான எல்இடி ஹெட்லைட்டுகள், ஃபென்டரில் கொடுக்கப்பட்டு இருக்கும் இண்டிகேட்டர்கள், எல்இடி பகல்நேர விளக்குகள், 18 அங்குல அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்டுகள் ஆகியவை ஆஃப்ரோடு எஸ்யூவி பிரியர்களை வசியம் செய்துவிடும். மேலும், இதன் பிரம்மாண்டத் தோற்றமும் மிரட்டுகிறது.

ஜீப் ரேங்க்லர் எஞ்சின் மற்றும் செயல்திறன்

ஜீப் ரேங்லர் எஸ்யூவியில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு கொாடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 268 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் பெற்றிருக்கிறது.

ஜீப் ரேங்க்லர் மைலேஜ்

ஜீப் ரேங்லர் எஸ்யூவியில் இருக்கும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் லிட்டருக்கு 12.1 கிமீ மைலேஜ் தரும் என்று அராய் சான்று தெரிவிக்கிறது. ஓட்டும் முறை மற்றும் சீதோஷ்ண நிலைகளை பொறுத்து நடைமுறை பயன்பாட்டில் இந்த மைலேஜில் குறைவு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது.

ஜீப் ரேங்க்லர் முக்கிய அம்சங்கள்

ஜீப் ரேங்லர் எஸ்யூவியில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள், 18 அங்குல அலாய் வீல்கள், 8.4 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதி, வாய்ஸ் கமாண்ட் சிஸ்டம், அல்பைன் மியூசிக் சிஸ்டம், டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், 7 அங்குல மல்டி இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே உள்ளிட்ட ஏராளமான வசதிகளை இந்த ஆஃப்ரோடு எஸ்யூவி பெற்றிருக்கிறது.

ஜீப் ரேங்க்லர் தீர்ப்பு

ஆளுமையானத் தோற்றத்தில் அதிக வசதிகளுடன் கூடிய சிறந்த பிரிமீயம் ஆஃப்ரோடு எஸ்யூவியை வாங்க விரும்புவோருக்கு ஜீப் ரேங்லர் சிறந்த தேர்வாக அமையும். இந்தியாவிலேயே அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்படுவதால், வாடிக்கையாளர்களுக்கு அதிக மதிப்பை தருகிறது.

வண்ணங்கள்


Bright White
Black
Anvil Clear Coat
Sarge Green
Firecracker Red

ஜீப் ரேங்க்லர் படங்கள்

ஜீப் ரேங்க்லர் Q & A

ஜீப் ரேங்லர் எஸ்யூவியில் எத்தனை வேரியண்ட்டுகள் வழங்கப்படுகின்றன?

அன்லிமிடேட் மற்றும் ரூபிகன் என இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கிரது

Hide Answerkeyboard_arrow_down
ஜீப் ரேங்லர் எஸ்யூவியில் டீசல் எஞ்சின் தேர்வு உள்ளதா?
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out