வெறும் நாலரை லட்சத்துக்கு எமனுக்கே சவால் விடும் கார்! மாருதி கார்களை வாங்கறதுக்கு பதிலா இதை வாங்கலாம்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டாடா டியாகோ (Tata Tiago). இது மாருதி சுஸுகி ஆல்டோ கே10 (Maruti Suzuki Alto K10), மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ (Maruti Suzuki S Presso) மற்றும் ரெனால்ட் க்விட் (Renault Kwid) ஆகிய கார்களுடன் போட்டியிட்டு வரும், ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் ரக கார் ஆகும்.

ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் ரக கார் என்பதால், இதன் விலை மிகவும் குறைவு. தற்போதைய நிலையில் டாடா டியாகோ காரின் ஐசி இன்ஜின் வெர்ஷனின் ஆரம்ப விலை வெறும் 4.57 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இதன் மூலம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான கார் (Most Affordable Tata Car) என்ற பெருமையை டியாகோ தன்வசம் வைத்துள்ளது.

Tata Tiago EV Seats

டாடா டியாகோ காருக்கு மற்றொரு பெருமையும் உண்டு. மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த காரின் போட்டி மாடல்கள் எல்லாம் ஐசி இன்ஜின் வெர்ஷனில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் டாடா டியாகோ கார் மட்டும் ஐசி இன்ஜின் வெர்ஷன் உடன், கூடுதலாக எலெக்ட்ரிக் வெர்ஷனிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

டாடா டியாகோ ஐசி இன்ஜின் வெர்ஷனை போலவே, அதன் எலெக்ட்ரிக் வெர்ஷனும் மிகவும் விலை குறைவானதுதான். டாடா டியாகோ இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை வெறும் 7.99 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இதன் மூலமாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார் (Most Affordable Tata Electric Car) என்ற பெருமையையும் டாடா டியாகோ இவி தன்வசம் வைத்துள்ளது.

Tata Tiago EV

மிகவும் விலை குறைவானது என்பதால், டாடா டியாகோ காரின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. இதற்கு நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதமும் விதிவிலக்கு அல்ல. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒட்டுமொத்தமாக (ஐசி இன்ஜின் + எலெக்ட்ரிக்) 7,040 டியாகோ கார்களை விற்பனை செய்துள்ளது.

ஆனால் கடந்த 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெறும் ஒட்டுமொத்தமாக 6,954 டாடா டியாகோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது 86 டாடா டியாகோ கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் டாடா டியாகோ கார் 1 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா டியாகோ கார், குளோபல் என்சிஏபி (Global NCAP) அமைப்பின் மோதல் சோதனைகளில், 4 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்று அசத்தியுள்ளது. இதன் காரணமாக சாலை விபத்துக்களில் இருந்து பல முறை பயணிகளின் உயிரை டாடா டியாகோ காப்பாற்றியுள்ளது.

டாடா டியாகோ காரின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருவதற்கு இதுவும் ஒரு காரணம் ஆகும். மிகவும் குறைவான விலையில் பாதுகாப்பான ஒரு ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு டாடா டியாகோ கார் மிகச்சிறந்த ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

More from DriveSpark

Article Published On: Friday, March 6, 2026, 20:30 [IST]
English summary
Tata tiago sales report february 2026 1 per cent growth
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+