சீன நிறுவனத்தை ஓட ஓட விரட்டியடித்த தமிழ்நாட்டு நிறுவனம்! மார்க்கெட் மொத்தமா கண்ட்ரோலுக்கு வரப்போகுது!
வியட்நாம் நாட்டை சேர்ந்த முன்னணி எலெக்ட்ரிக் வாகன (Electric Vehicles) நிறுவனங்களில் ஒன்று வின்ஃபாஸ்ட் (VinFast). தமிழ்நாட்டின் (Tamil Nadu) தென் பகுதியான தூத்துக்குடியில் (Thoothukudi) மிகவும் பிரம்மாண்டமான எலெக்ட்ரிக் கார் தொழிற்சாலையை வின்ஃபாஸ்ட் நிறுவனம் அமைத்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இந்த எலெக்ட்ரிக் கார் தொழிற்சாலை திறக்கப்பட்டது.
எனவே இது இந்திய சந்தைக்கு புது வரவு ஆகும். ஆனால் அதற்குள்ளாகவே இந்திய சந்தையில் நீண்ட காலமாக இயங்கி வரும் பிஒய்டி (BYD) நிறுவனத்தை, வின்ஃபாஸ்ட் நிறுவனம் விற்பனையில் பின்னுக்கு தள்ளியுள்ளது. அதாவது நடப்பு 2026ம் ஆண்டு காலண்டர் வருடத்தில் கடந்த மார்ச் 3ம் தேதி வரை (ஜனவரி 1 - மார்ச் 3), வின்ஃபாஸ்ட் நிறுவனம் 850க்கும் அதிகமான எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளது.

ஆனால் இதே காலகட்டத்தில் பிஒய்டி நிறுவனம் வெறும் 550 எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இது குறித்து இடி ஆட்டோ தளம் செய்தி வெளியிட்டுள்ளது. வின்ஃபாஸ்ட் நிறுவனம் தற்போதைய நிலையில் வெறும் 2 எலெக்ட்ரிக் கார்களை (Electric Cars) மட்டுமே விற்பனை செய்து வருகிறது.
அவை வின்ஃபாஸ்ட் விஎஃப் 6 (VinFast VF 6) மற்றும் வின்ஃபாஸ்ட் விஎஃப்7 (VinFast VF 7) ஆகியவை ஆகும். இதில், வின்ஃபாஸ்ட் விஎஃப் 6 எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 17.29 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் வின்ஃபாஸ்ட் விஎஃப் 7 எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 21.89 லட்ச ரூபாயாக இருக்கிறது.

இவை அனைத்துமே தற்போதைய நிலையில் வின்ஃபாஸ்ட் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். வரும் காலங்களில் இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன சந்தையில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் ஆதிக்கம் வெகுவாக அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக உள்ளன.
ஏனெனில் இன்னும் ஏராளமான எலெக்ட்ரிக் கார்களை ஒன்றன் பின் ஒன்றாக விற்பனைக்கு அறிமுகம் செய்ய வின்ஃபாஸ்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில், வின்ஃபாஸ்ட் விஎஃப் 5 (Vinfast VF 5) மற்றும் வின்ஃபாஸ்ட் லிமோ க்ரீன் (Vinfast Limo Green) போன்ற எலெக்ட்ரிக் கார்கள் எல்லாம் இங்கே குறிப்பிடத்தக்கவை ஆகும்.
இதில், வின்ஃபாஸ்ட் விஎஃப் 5 எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை அனேகமாக வெறும் 10 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வின்ஃபாஸ்ட் விஎஃப் 5 எலெக்ட்ரிக் கார் ஒவ்வொரு மாதமும் மிகவும் பிரம்மாண்டமான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.
அத்துடன் வின்ஃபாஸ்ட் நிறுவனம் நடப்பு 2026ம் ஆண்டிலேயே, இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் (Electric Scooters) விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. எனவேதான் எதிர்காலத்தில் இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன சந்தையில் வின்ஃபாஸ்ட் மிகவும் முக்கியமான ஒரு இடத்தை பிடிக்கும் என நாங்கள் கருதுகிறோம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வின்ஃபாஸ்ட் நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்வதில் மட்டும் கவனம் செலுத்தவில்லை. கூடவே டீலர்ஷிப்களின் (Dealerships) எண்ணிக்கையை உயர்த்துவதில் வின்ஃபாஸ்ட் நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. எனவே எலெக்ட்ரிக் கார் சந்தையில் தற்போது முழுமையாக ஆதிக்கம் செலுத்தி கொண்டுள்ள டாடா மோட்டார்ஸ் (Tata Motors) போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு கூட, எதிர்காலத்தில் வின்ஃபாஸ்ட் சவாலாக மாறலாம்.


Click it and Unblock the Notifications








