மாருதி கார்களை விட இந்த டாடா கார்கள் தான் கஸ்டமர்ஸை மேக்னெட் மாதிரி ஈர்க்குது! பிப்ரவரி 2026 சேல்ஸ்!
இந்தியாவில் எஸ்யூவி (SUV) ரக கார்களுக்கான மார்க்கெட் கடந்த வருடங்களில் இருந்து மிகவும் பெரியதாக விரிவடைந்துள்ளது. எந்த அளவிற்கு என்றால், ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கிலான எஸ்யூவி கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அது கடந்த பிப்ரவரி மாதத்திலும் தொடர்ந்துள்ள நிலையில், கடந்த மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 எஸ்யூவி கார் மாடல்களை பற்றி இங்கே இந்த தொகுப்பில் காணலாம்.
எஸ்யூவி ரக கார்கள் என்று மட்டுமில்லாமல், கடந்த பிப்ரவரி மாதத்தில் ஒட்டுமொத்தமாகவே சிறப்பாக விற்பனையான கார்களாக டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் நெக்ஸான் (Nexon) மற்றும் பன்ச் (Punch) என்கிற எஸ்யூவி கார்கள் முன்னிலை வகித்துள்ளன. இதனால், எஸ்யூவி கார்கள் விற்பனையிலும் இந்த இரு டாடா கார்களும் தான் முதல் இரு இடங்களை பிடித்துள்ளன.

கடந்த பிப்ரவரி மாதத்தில் அதிக எண்ணிக்கையில் மக்களால் வாங்கப்பட்ட எஸ்யூவி காராக முதலிடம் பிடித்துள்ள டாடா நெக்ஸான் கடந்த மாதத்தில் மொத்தம் 19,430 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதுவே, கடந்த 2025ஆம் ஆண்டின் இதே பிப்ரவரி மாதத்தில் 15,349 நெக்ஸான் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
இந்த வகையில் பார்க்கும்போது, நெக்ஸான் கார்கள் விற்பனை ஆனது 27% அதிகரித்துள்ளது. இதற்கடுத்து இரண்டாவது இடத்தில் உள்ள டாடா பன்ச் கடந்த மாதத்தில் 18,748 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த டாடா எஸ்யூவி காரின் விலையும் 29% அதிகரித்துள்ளது. ஏனெனில், 2025 பிப்ரவரியில் 14,559 பன்ச் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இந்த டாடா எஸ்யூவி கார்களுக்கு அடுத்து அதிக பேரால் வாங்கப்பட்ட எஸ்யூவி கார் மாடலாக 3வது இடத்தில் ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta) 17,938 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது. அதுவே, 2025 பிப்ரவரியில் விற்பனை செய்யப்பட்டு இருந்த 16,317 கிரெட்டா கார்களுடன் ஒப்பிடுகையில் இது 10% அதிகரிப்பாகும்.
இந்த வரிசையில் 4வது இடத்தில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza) உள்ளது. இவ்வாறு கார்களின் விற்பனையை பற்றி பார்த்தால் நிச்சயமாக அதில் மாருதி சுஸுகி கார்கள் இருக்கும். இன்னும் சொல்லப்போனால், இவ்வாறான லிஸ்ட்டில் முதல் 3 இடங்களுக்குள் ஏதேனும் ஒரு மாருதி சுஸுகி கார் இடம்பிடித்துவிடும். ஆனால், இந்த லிஸ்ட்டில் பிரெஸ்ஸா நான்காவது இடத்தை தான் பிடித்துள்ளது.
| OEM | Model | Feb 2026 Sales |
| Tata Motors | Nexon | 19,430 |
| Tata Motors | Punch | 18,748 |
| Hyundai | Creta | 17,938 |
| Maruti Suzuki | Brezza | 17,863 |
| Mahindra | Scorpio | 14,665 |
| Maruti Suzuki | Fronx | 13,898 |
| Maruti Suzuki | Victoris | 13,021 |
| Mahindra | Thar | 11,047 |
| Hyundai | Venue | 10,494 |
| Kia | Seltos | 10,308 |
Table Source: Auto Punditz
கடந்த மாதத்தில் விற்பனையாகி உள்ள பிரெஸ்ஸா கார்களின் எண்ணிக்கை 17,863 ஆகும். இது 2025 பிப்ரவரியை விட 16% அதிகமாகும். 5வது இடத்தில் மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio) 14,665 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது. 2025 பிப்ரவரியில் 13,618 ஸ்கார்பியோ கார்களை மஹிந்திரா விற்பனை செய்திருந்தது. இதற்கடுத்து இந்த லிஸ்ட்டில் 6வது மற்றும் 7வது இடங்களில் மாருதி சுஸுகியின் ஃபிரான்க்ஸ் (Fronx) மற்றும் விக்டோரிஸ் (Victoris) எஸ்யூவி கார்கள் உள்ளன.
மஹிந்திரா தார் (Thar) இந்த வரிசையில் 8வது இடத்தில் உள்ளது. 2025 பிப்ரவரியில் 9,248 தார் வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த பிப்ரவரியில் 11,047 தார் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த டாப்-10 எஸ்யூவி கார்கள் லிஸ்ட்டில் கடைசி இரு இடங்களில் ஹூண்டாய் வென்யூ (Hyundai Venue) மற்றும் கியா செல்டோஸ் (Kia Seltos) கார்கள் முறையே 10,494 மற்றும் 10,308 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கு எந்த அளவிற்கு வரவேற்பு உள்ளது என்பதை லிஸ்ட்டை பார்த்தால் தெரிந்துக் கொள்ளலாம். அந்த அளவிற்கு கடைசி 10வது இடத்தில் உள்ள செல்டோஸ் கூட கடந்த பிப்ரவரி மாதத்தில் 10 ஆயிரம் யூனிட்களுக்கும் மேல் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில் மாருதி சுஸுகி ஃபிரான்க்ஸ் காரை தவிர்த்து மற்ற அனைத்து எஸ்யூவி கார்களும் 2025 பிப்ரவரியை விட அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








